Sunday, 22 September 2019

நெஞ்சம் எல்லாம் காதல்....

💘நெஞ்சம் எல்லாம் காதல்,
தேகம் எல்லாம் காமம்!
காதல் கொஞ்சம் கம்மி,
காமம் கொஞ்சம் தூக்கல்!
 உண்மை தெரிந்தால் நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல்
மன்னிப்பாயா?
💖
பெண்கள் மேலே மையல் உண்டு,
நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்!
நீ முத்தப் பார்வை பார்க்கும் போது,
என் முதுகுத் தண்டில் மின்னல் வெட்டும்!
💝
நீதானே மழைமேகம் எனக்கு,
என் ஹார்மோன் நதியில் வெள்ளப் பெருக்கு!
பாசாங்கு இனி நமக்கெதுக்கு?
யார் கேட்க நமக்கு நாமே வாழ்வதற்கு?
💓
காதல் என்னை வருடும் போதும்,
 காமம் என்னை திருடும் போதும்,
என் மனசெல்லாம் மார்கழி தான்!
என் கனவெல்லாம் கார்த்திகைதான்!
என் வானம் என் வசத்தில் உண்டு,
என் பூமி என் வசத்தில் இல்லை!
💞
நெஞ்சம் எல்லாம் காதல்,
தேகம் எல்லாம் காமம்!
காதல் கொஞ்சம் கம்மி,
காமம் கொஞ்சம் தூக்கல்!
உண்மை தெரிந்தால்  நேசிப்பாயா?
மஞ்சத்தின் மேல்  மன்னிப்பாயா...🌹

#வைரமுத்து

Monday, 25 March 2019

அழுக்கு நிலா என்றாலும்...

ஆரோ ஆரிராரோ
ஆறமுதே ஆராரோ!

உலக உருண்டைக்குள் 
உதிப்பாரும் உதிர்வாரும் 
உனக்கிணையாய் ஆவாரோ?
ஈச்சம் பழச்சாற்றை
ஈரிதழில் ஈவாரோ?
ஊரார் உளமெல்லாம்
வேலின் கூரார் விழியழகால் களவாடிப் போவாரோ! 
உறுகண் உறுகண் கண்டால்
உன் போல் உடன் வந்து 
காவாரோ! 

ஆரோ ஆரிராரோ
ஆறமுதே ஆராரோ! 

செயிற் கடைந்து விழிகள் சிவப்பேறக் கனகனவன்  
உயிர் கடைந்து
கோளரியாய் உறுமியவா,
கேழ்வரகுப் பயிர் கடைந்து 
குருவியெல்லாம் பசியாறும் கோகுலத்தில்,
தயிர் கடைந்து பிழைக்கின்ற
தனிக்குலத்தில் 
வந்தாயோ!

ஆரோ ஆரிராரோ
ஆறமுதே ஆராரோ! 

தருப்பை விரலிடுக்கி
தவ வேள்வி வேட்பதற்கு,
நெருப்பை வளர்ப்போரும்
நெடுநாளாய் உன்னுடைய
இருப்பை தேர்ந்தாலும்  இருப்பிடத்தைத் தேடுகையில்,
கருப்பை குடி புகுந்து
கவுரவத்தை கொடுத்தவனே!

ஆரோ ஆரிராரோ
ஆறமுதே ஆராரோ! 

அழுக்கு நிலா என்றாலும் அமுதத்தை எல்லியெலாம் 
ஒழுக்கு நிலா என்றாலும் ஒருநாள்தான் வராமல் 
வழுக்கு நிலா என்றாலும், 
வரதா  உன் வனப்பின் முன்
இழுக்கு நிலா என்றாகி எழிலியிலே ஒளியாதோ!

ஆரோ ஆரிராரோ
ஆறமுதே ஆராரோ! 

கண்ணழகன் என்பதனால்
கண்ணனென பேர் வைத்தேன்! 
கண்ணனையன் என்பதனால்
கண்ணனென பேர் வைத்தேன்!
கண்ணிறைய காண்பதனால்
கண்ணனென பேர் வைத்தேன்!
கண்ணிறைந்து காண்பதனால்
கண்ணனென பேர் வைத்தேன்!

ஆரோ ஆரிராரோ
ஆறமுதே ஆராரோ! 

ஏடு மேய்ப்பதற்கு
எழுத்தறிவு பூத்திருக்க,
நாடு மேய்ப்பதற்கு நாற்காலி காத்திருக்க,
வீடு மேய்ப்பதற்கு
வைகுந்தம் வாய்த்திருக்க,
மாடு மேய்ப்பதற்கு
மனமிறங்கி வந்தாயோ!

ஆரோ ஆரிராரோ
ஆறமுதே ஆராரோ!

#கவிஞர் வாலி

Sunday, 24 March 2019

கண்ணான கண்ணே...கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா!
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூப்போல நீவ வா!

நான் காத்து நின்றேன்
காலங்கள் தோறும்,
என் ஏக்கம் தீருமா?

நான் பார்த்து நின்றேன்
பொன் வானம் எங்கும்,
என் மின்னல் தோன்றுமா?

தண்ணீராய் மேகம் தூறும்,
கண்ணீர் சேரும்.
கற்கண்டாய் மாறுமா?

ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ ஆராரிராரோ!

கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா!
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூப்போல நீவ வா!

அலைகடலின் நடுவிலே அலைந்திட வா தனியே, 
படகெனவே உனையே
பார்த்தேன் கண்ணே!

புதைமணலில் விழுந்து புதைந்திடவே இருந்தேன்,
குறுநகையை எறிந்தே
மீட்டாய் என்னை!

விண்ணோடும் மண்ணோடும் ஆடும்
பெரும் ஊஞ்சல் மனதோரம்,
கண்பட்டு நூல் விட்டுப் போகும்,
எனை ஏதோ பயம் கூடும்...

மயில் ஒன்றை பார்க்கிறேன்!
மழையாகி ஆடினேன்!
இந்த உற்சாகம் போதும்!
உயிர் மீளும் இந்நேரம்!

கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா!
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூப்போல நீவ வா!

நீ தூங்கும் போது
உன் நெற்றி மீது
முத்தங்கள் வைக்கனும். 
போர்வைகள் போர்த்தி
போகாமல் தாழ்த்தி,
நான் காவல் காக்கனும்.
எல்லோரும் தூங்கும் நேரம்
நானும் நீயும் மவுனத்தில் பேசனும்!

கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா!
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூப்போல நீவ வா!

தொலைவினிலே இருந்தும்
தொட முயன்றேன் தினமும் !
கனவினிலே அதையும்
செய்தேன் கண்ணே !

அருகருகே நகர்ந்தும்
அடங்குகிறேன் தினமும் !
முகமலரும் சிரிப்பும்
பொய்தான் கண்ணே !

காலங்கள் கல் வீசி ஆடும்…
ஒரு தாயம் விழவேண்டும்..!
இல்லாத பொல்லாத காயம்…
பட நேரும் எழவேண்டும் !

தொடுவானம் தூரம்தான்…
தொடும்போது நீளும்தான் !

விலை இல்லாத ஒன்று
அன்பு என்று
இதோ அறிந்தேன்..!


ஆராரிராரோ
ராரோ ராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ராரோ ராரோ
ஆராரிராரோ ஆராரிராரோ!

கண்ணான கண்ணே
கண்ணான கண்ணே
என் மீது சாய வா!
புண்ணான நெஞ்சை
பொன்னான கையால்
பூப்போல நீவ வா!

Tuesday, 5 February 2019

பிஸாரோ 2

குட்மார்னிங்!
 உங்களுடைய "மீட்பு"  பற்றி கொஞ்சம் பேசுவோமா?
 நிச்சயமா உங்களை இந்த தீவுல இருந்து மீட்கிறதை பத்தி நான் குறிப்பிடலை!

இந்த பாடல் இங்குள்ள இளம் காதலர்களுக்காக.
எதனால்  உங்களை நான்  வெறுக்கிறேன்?

உன்னைப் பார்த்தா,  உனக்கு இது தேவைப்படும்னு  தோனுது.

 மன்னிக்கனும்,  இப்போ எங்ககிட்ட இருக்குறது எல்லாமே ரெண்டு "கப்பு" உள்ளதுதான்!

"பார்வையாளர் நேரம்"  மாதிரி,  நியுஇயர் கொண்டாட்டத்துக்கும் நேர கட்டுப்பாடு உண்டாம்! 

 இதோ தேவதூதன் பேசுகிறான். நல்லவர்கள் யார்? நல்லவர்கள் யார்? அது நீங்கள் தான்! ஆம்! நீங்களேதான்! ஒரு குக்கீ எடுத்துக் கொள்ளுங்கள்!

"சரக்கோட" விலை அது தரும் போதையை விட அதிகமா இருக்கு!

பூனைகளோட அருமை என்னன்னா, அவை தங்களை தாங்களே சந்தோஷப் படுத்திக் கொள்கின்றன.Saturday, 2 February 2019

ஹலோ சங்கர்லால்! - 1


தமிழுக்கு மொழிபெயர்க்கப்படும் காமிக்ஸ் கதைகள் பெரும்பாலும் அதன் அசல் சுவையை இழந்தே இங்கு வந்தடைகின்றன.  பல ஆண்டுகள் முன் படித்த ஜில் ஜோர்டான் கதை ஒன்றின் ஆங்கிலப்பதிப்பு சமீபத்தில் வாசிக்கக் கிடைத்தது.  அந்நாளில் மூன்று பதிவுகளின் வாயிலாக "கனவுகளின்  காதலர்" கேட்டிருந்த கேள்விகளுக்கான விடைகளை தேட முற்பட்டுள்ளேன் !

  பொதுவாக அனைத்து துப்பறியும் கதைகளும் கதையின் முடிவில் தன்னிலுள்ள மர்மங்களை வாசகனுக்கு தெளிவு படுத்தி விடும்.

ஆனால் கதை முடிந்த பின்னும் மர்மங்களைத் தேட வைத்த கதை இது ஒன்றாகத்தான் இருக்கும்!

வசனங்களை நான் புரிந்து கொண்ட அர்த்தங்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால் எடுத்துக் கூறி விளக்க வேண்டுகிறேன்! 


அலை செய்த கொலை !


  

இது  மொட்டைக் கடுதாசியா இருக்கேன்னு நான் அப்பவே யோசிச்சிருக்கனும்!
இதை எழுதுனவன் மட்டும் என் கையில சிக்குனா...
 
என்னை இளிச்சவாயனா நினைச்சுருக்கானா... 

( நன்றி : நண்பருக்கு )
 
தமாஷ் பண்றதை எல்லாம் பெருசு படுத்த மாட்டேன்,  ஆனா இது வரம்பு மீறுனதா இருக்கு !


  
 இல்லை! அது ஒரு வெட்கக் கேடான விஷயம்.   உன் ஓட்டல் மூட்டைப் பூச்சிகள் மீதி வைச்சதை மீன்கள் காலி பண்ணி விட்டன!  சரி!  சொல்லு கேட்கிறேன்! 

பாரீஸை சேர்ந்த நிகிடா ஜிக்ஸ் எனும் அரும்பொருள் சேகரிப்பாளர் இங்குள்ள  "டெவில் ஸ்ட்ரெய்ட்"டில்*  செல்லும் போது அலையில் சிக்கி இறந்து விட்டார் சார்! ஆமாம்,  கார் காலியாக உள்ளது!... அப்படியில்லை,  பழுது ஏற்பட்டிருக்கலாம்...


( *Devil's strait : எமனின் பாதை / பரலோகப் பாதை எனப் பொருள் படும் !(பெட்ரோல் தீர்ந்து போயிருக்கிறது)

 கதையின்  முக்கியமான சஸ்பென்ஸ் அம்போ! 

சில நாட்களுக்குப் பிறகு, ஜில் ஜோர்டான் துப்பறியும் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில்.. .


இந்தப் படத்தில் எழுத்துகளை ஏன் கலர் பூசி மறைச்சுருக்கு ?


அவருடைய உடல் இன்னும் கண்டு பிடிக்கப் படவில்லையா ?

  இல்லை!  போலீஸாரிடம் பேசினேன்,  தீவில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில், பாதையின் 
நடுப் பகுதியில் சம்பவம் நிகழ்ந்திருப்பதால் நம்பிக்கையில்லை என்கிறார்கள். 
பாஸ்!   ஜாக்கிரதை!
இங்கே பொறி* வாசனை அடிக்கிறதை உணர முடியுது!

(*கண்ணி / சதிவலை )


பொறியின் வாசனை பூஞ்சை  போல இருக்குமெனில், ஆம்! இங்கு பொறி வாசனை அடிக்கிறதுதான்!


( இந்த வசனத்தில்   ஒரு மென் நகைச்சுவை உள்ளது. 

லிபெல் உள்ளுனர்வின் உந்துதலால், இங்கு பொறி வாசம் அடிப்பதாக சொல்ல,  அந்த இடத்தில் அடிக்கும் தாங்க முடியாத பூஞ்சை வாடையை  ( துர்நாற்றத்தை ) நுட்பமாக கிண்டல் செய்கிறார் ஜில் ஜோர்டான் .)

(நன்றி : நண்பருக்கு) அது மிளகாய்த்தூள் இல்லை!
மிளகுத்தூள்! 

அலை வரும்...