Sunday, 23 July 2017

கொம்புக்குதிரை... கிராஃபிக் நாவல்களின் சிம்ம சொப்பனம்...!அநேகமாக தமிழில் ஸ்கான்லேஷன் செய்யப்பட்ட முதல் காமிக்ஸ் இதுதான் என்று நம்புகிறேன்.  அல்லது சிக்கன் வித் ப்ளம்ஸ், ஜானி ப்ரீக்   என்று வேறு கதையாகவும் இருக்கலாம்.

கிரஃபிக் நாவல் என்றாலே டவுசரை நனைப்பவர்களுக்கு , இத்தொடர் ஒரு சிம்ம சொப்பனம்,,,

சில ஆண்டுகள் முன்பே கொம்புக்குதிரையின் அனைத்துப் பாகங்களையும் டவுன்லோட் செய்து வைத்திருந்த போதும் , அதை வாசிக்க ஆரம்பித்த போதெல்லாம், வேறு கதைகள் வாசிக்கக் கிடைக்கும் போது , கொம்புக்குதிரையை அந்தரத்தில்  விட்டு விடுவது எம்முடைய வழக்கமாக இருந்தது.

ஆக்ஷன், அதிரடி என்ற விறுவிறுப்பான கதைகளுக்கு பழகிப் போன என்னால்  கொம்புக்குதிரையின்  ஆழ்ந்த நுட்பமான படைப்புக்கு ஈடு கொடுக்க முடியவில்லை  என்பதை ஒப்புக்கொள்ள எனக்கு தயக்கமேதும் இல்லை.

இப்போதும் மேலோட்டமான புரிதல்தான் உள்ளது.  கதையின் நுனுக்கமான  விபரங்கள் புரியவில்லைதான் என்ற போதும் ,  மீள் மீள் வாசிப்புகள்  என்றேனும் ஒரு தெளிவான புரிதலை  தரும் என்று நம்புகிறேன்.

இத்தனை கடினமான படைப்பை  தமிழ் வாசகர்களுக்காக தன் நேரம், உழைப்பு, பொருள் என பிரதி பலன் எதிர்பாராது செலவழித்து மொழிபெயர்த்து அளித்த அன்பு நெஞ்சத்தை எவ்வளவு பாராட்டினாலும்  என் நெஞ்சம்  திருப்தி கொள்ளாது.

கடுமையான இந்த முயற்சியை எடுத்துச்சொல்ல சரியான உவமைகள் இல்லை. ஆனாலும்... எம்மால் முடிந்தது................


நன்றிகள் சார்!

Wednesday, 19 July 2017

ஹேகர்! (இவன் பயங்கரமானவன்)
ஹேகர், வைகிங்குகளின் தலைவன். அண்டை நாடுகளின் மீது படையெடுப்பதும் ,கொள்ளையடிப்பதும்  இவர்களது வாடிக்கை.
இரண்டே கட்டங்கள் கொண்ட இந்த ஸ்ட்ரிப்புகளில்  நுணுக்கமான நகைச்சுவையை காணலாம்.
இந்தப் புறா என் நண்பனிடம் இருந்து 100 மைல்கள் பறந்து வந்து ஒரு சமையல் குறிப்பை கொடுத்தது!

அருமை! அது என்ன சமையல் குறிப்பு?


அது ஒரு முரண்பாடான நகைப்புக்குரிய விஷயம்!

( சமைக்க வேண்டிய பொருளே அந்த புறா தான். )


கையில குண்டாந்தடியோட எங்கே கிளம்பிட்டீங்க?

                       நண்பர்களோட சீட்டு விளையாட.... 
அங்க ஒருத்தன் ஆட்டத்துல ஏமாத்துறான்.
 நான் செய்ததை தெளிவாக செய்தேன்?!!

நீங்க ஏன் நம்ம எதிரிகளை பயமுறுத்தக்கூடாது?


( உங்க ஆவேசத்தை பார்த்து  நம்ம பயலுகளே பயந்துடுறானுக. )


ஹெல்கா! நாம் சந்தித்து இன்றோடு 20 ஆண்டுகள் ஆகிறது!

ஆஹா! நீங்க ஞாபகம் வைச்சுருக்கீங்க ஹேகர்!!


நான் அதை எப்படி மறப்பேன்?
நான் முதல்முறையாக டார்ட்ஸ்* போட்டியில் வெற்றி பெற்ற நாளும் இதுதான்!

*Darts : சிறிய அம்பு போன்ற கருவி மூலம் சுவரில் அமைக்கப்பட்டுள்ள போர்டில் உள்ள இலக்கை தாக்கும் விளையாட்டு.

மேலும் விபரங்களுக்கு : 
https://en.m.wikipedia.org/wiki/Darts


ஹேகர், ஓல்சென்ஸ் தம்பதி சைவம் சாப்பிடுறவங்க என்பதை மறந்துட்டேன். இப்போ என்ன செய்யலாம்?!

இந்த ஆப்பிளை உங்களுக்கு நறுக்கித் தர என்னை அனுமதியுங்கள்!!


அது என்ன வாடை?

நேத்து கொட்டகை எரிஞ்சு போனதை மறந்துட்டீங்களா?


இது புகை வாடை இல்லை.

( கொட்டகையிலிருந்த   விலங்குகள் இங்கு வந்து விட்டதால், 
அவற்றின் வாடை அடிக்கிறது. )


தூங்கப் போக எனக்கும் இஷ்டம்தான். 
 ஆனா மிஸ்டர் ஸ்வென்ஸன் முந்திக்கிட்டாரு!நான் ரொம்ப வருஷமா தாடி வளர்க்குறேன்.

என்னோட தாடி இல்லாத முகம் உனக்கு மறந்து போயிருக்கலாம்!


எங்களுக்கு ஞாபகம் இருக்கு,
ஷேவ் பண்ணிடாதே!


(உன் முகம்  தாடியில்லாம  இன்னும் சகிக்காது. )


நான் அதிர்ந்து போயிட்டேன்!!

   நானும்தான்! ஓலப் "விக்" போட்டுருக்கான்னு இப்பதான் தெரியும்!!


இந்த வீடு வசதியான எடத்துல இருக்கு. பக்கத்துலயே ஓட்டல்கள், கடைகள்...

                               அப்புறம் ஒரு பூங்கா!
எனக்கு ஒரு பேனா வேணும்! இங்கே இருந்த பேனா எல்லாம் எங்கே?

          இது நம்ம கட்டிலுக்குக் கீழ ஒளிஞ்சுக்கிட்டிருந்தது!எனக்கு ஞாபகம் வருது!

           உங்க கால் விரல் நகங்களை நீங்க வெட்டிக்கனும்!


( ஐயா, சண்டைக்குப் போக கத்தியை தீட்டுறாரு,
அதைப் பார்த்ததும் அம்மாவுக்கு என்ன விஷயம் நினைவுக்கு வருதுன்னா... )


ஹெல்கா! இந்த பறவைகளுக்கு என்னை ரொம்ப புடிச்சிருக்கு பார்த்தியா!

அதுங்க ஒன்னும் உங்களுக்காக வரலை... 
உங்க தாடில ஒட்டிக்கிட்டிருக்கிற உணவு துணிக்கைகளுக்காக வருது!


ஏய்! அது ஒஸ்தியான சரக்கு!

இது காயங்களை நன்றாக சுத்தம் பண்ணும்!


எனக்கு நாக்குல காயம் இருக்கு!

எனக்கும்! திருட்டுப்பயலுக நம்ம பின்னால வர்றானுகன்னு தோனுது! இந்த கொள்ளை பணத்தை...

அருமையான யோசனை! நாம பிறகு வந்து தோண்டி எடுத்துக்குவோம்!


புதைச்ச இடத்த அடையாளம் வைச்சிருக்கியா?

நிச்சயமாக! நான் முட்டாள் இல்லை!

( loot : கொள்ளை )தயார்! அந்த காவலாளிகளை நீ கவனிச்சுக்க!

                     நான் சாப்பாட்டை கவனிக்கிறேன்!


 லக்கி எட்டி, உனக்கு ஏதாவது நிஜமான பேய்க்கதை தெரியுமா?

மன்னிக்கனும், தெரியாது! 


எனக்குத் தெரியும்!

( ஆவியின் குரல். )


நான் கேட்ட சாமானை கொண்டு வந்தியா?

ஆமாம்.


ஆனா நீங்க எப்படி இங்க இருந்து தப்பிச்சுப் போவீங்கன்னு புரியல...

( பெட்டிக்குள்ள ஒளிஞ்சுகிட்டுதான். )


அப்படின்னா எங்கிட்ட என்ன தப்பு இருக்கு?

                  நான் வைத்தியரை கேட்டேன்!
                                                                                  
    (என்னை பத்தி  குத்தம் சொல்ல நிறைய வைச்சுருப்பியே! )

இரட்டையர்களான நீங்கள் இருவரும் ஒரே மாதிரிதான் நடந்து கொள்வீர்களா?

இல்லை!


இன்னொன்னு!

அவனுக்கு நகைச்சுவை உணர்வு ஜாஸ்தி!

ஹாஹா
ஹாஹா!


( இன்னொரு ரவுண்டு சரக்கு அடிக்கனும்னுதானே கேட்டேன். )ஹெல்கா! ஒரு நாய் என்னை பின் தொடர்ந்து வீடு வரைக்கும் வந்துட்டுது!

ரொம்ப சந்தோஷம்!


சந்தோஷமில்லை!

உன்னை கைது செய்கிறேன்!வெயிட்டர், நிச்சயமாக இது மாட்டிறைச்சி குழம்புதானா? 

சர்வ நிச்சயமாக! ஏன் அப்படி கேட்குறீங்க?

( டேய் இது குதிரை லாடம்டா! )வீரர்களே, எதிரிகள் அதிகமாகவும் பலசாலிகளாகவும் உள்ளனர்!
 நாம் நம்முடைய வேகத்தில் நம்பிக்கை வைக்க வேண்டும்!

( தாக்குறதுல வேகத்தை காட்ட சொன்னா , 
ஓடுறதுல காட்டுறானுக. )


ஹெல்கா! நான் வீட்டுக்கு வந்துட்டேன்! 

ஒரு பசித்த வயிறும் வந்திருக்கும்னு நம்புறேன்!


நான்கு பசித்த வயிறுகளுடன் வந்துள்ளேன்.