Friday, April 11, 2025
Thursday, March 20, 2025
சர்ட் கட்டிங்
எனது தையல் குரு திருநெல்வேலி சாமி தையலக முதலாளி திரு P.செல்வராஜ் அவர்களின் நல்லாசியுடன்...
சர்ட் கட்டிங்
அளவுகள்
உயரம்
பாடி
பாடிலூஸ்
வயிறு
சோல்டர்
கை
கைலூஸ்
காலர்
1, முதலில் உயரத்தை விட 2 இன்ச் அதிகம் வைத்து மார்க் பண்ணவும். வலது கீழ் சைடு 3/4 கரவு அடிக்கவும்.
2. நெஞ்சுப் பட்டிக்கு 2 இன்ச் வைத்து மார்க் பண்ணி கோடு போடவும்.
3. உயரத்திலிருந்து கீழே 2 இன்ச் மார்க் பண்ணவும். சின்ன சட்டை 1, 1/2 இன்ச். பெரிய சட்டை 2, 1/2 இன்ச்.
4, அக்குள் இறக்கம்: பாடி அளவில் 4ல் ஒரு பாகத்தில் 1/2 இன்ச் குறைத்து வைக்கவும்.
5, கழுத்து அகலம் பெரிய சட்டை 3 இன்ச், சின்ன சட்டை 2, 1/2 இன்ச்.
6, தோள் அகலம் சோல்டர் அளவில் பாதி + 1/2 இன்ச்.
7, பாடி லூஸ் பாடி அளவில் 12 கூட்டி அதில் 4ல் ஒரு பாகத்துடன் 1/2 இன்ச் கூட்டி வைக்கவும்.
8, பேக்பாடி முன்பக்கத்தை விட 3/4 அகலம் குறைத்து வைக்கவும்.
9, பேக்பாடி உயரம் 1, 1/4 குறைத்து வைக்கவும்.
10, சோல்டர் அளவில் பாதி + 1/2 இன்ச் கூட்டி சோல்டர் அகலம் வைக்கவும்.
11, கை அகலம், பாடி அளவில் 4ல் 1 பாகம் வைக்கவும்.
12, அடி கை உயரத்தில் 4 இன்ச் குறைத்து வைக்கவும்.
13, சோல்டர் அகலம், சோல்டர் அளவில் பாதி + 1/2 இன்ச் வைத்து உயரம் 5 கழுத்து 1, 1/2. தோள் 3, 1/2 இன்ச் வைத்து கழுத்து அகலம் சோல்டர் அளவில் 3ல் 1 பாகம் வைக்கவும்.
ஏரோ கரவு அடிக்க 2 இன்ச்!
துணி அளவு: பெரிய சட்டை 2,25 மீட்டர். புல்சர்ட், 2, 50 மீட்டர்.
சின் ன சட்டை உயரத்துடன் 7 இன்ச் கூட்டவும்.
Monday, March 17, 2025
பேண்ட் கட்டிங்
எனது தையல் குரு திருநெல்வேலி சாமி தையலக முதலாளி திரு P.செல்வராஜ் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியுடன்...
பேண்ட் கட்டிங்!
அளவுகள்:
உயரம்
மூட்டு
அடிங்கால்
அடிங்கால் லூஸ்
மூட்டு லூஸ்
இடுப்பு
சீட்
தொடைலூஸ்
பாதம் லூஸ்
சீட் லூஸ்
1, துணியின் மேல் பகுதியில் ஒரு இன்ச் மார்க் பண்ணவும்.
2, அந்த மார்க்கில் டேப்பை 1 1/2 இன்ச் வைத்து அதிலிருந்து உயரம் அளவு மார்க் பண்ணவும்.
3, அதிலிருந்து கீழ்பட்டி 2 1/2 இன்ச் மார்க் பண்ணவும்.
4. டேப்ஐ எடுக்காமல் மூட்டு அளவு மேலிருந்து கீழே மார்க் பண்ணவும்.
5. கீழ்பட்டி கோட்டிலிருந்து மேலே அடிங்கால் அளவு மார்க் பண்ணவும்.
6. சீட் அளவில் 3ல் ஒருபாகத்துடன் 1 இன்ச் கூட்டி வைத்து அடிங்கால் லூஸ் அளவு மார்க் பண்ணவும்.
7, அதிலிருந்து 1, 1/2 இன்ச் கழித்து பொந்துக்கு மார்க் பண்ணயும்
8, பொந்துக்கு (ஜிப்) நேரே கோடு போடவும்
9, அதிலிருந்து சைடு தையலுக்கு 1/2 இன்ச் மார்க் பண்ணவும்.
10, அதிருந்து இடுப்பு அளவில் 4ல் 1பாகம் மார்க் பண்ணவும்.
11, அதிலிருந்து பிளிட்டுக்கு 2 1/2 இன்ச் மார்க் பண்ணவும்.
12, அதிலிருந்து சைடு தை யலுக்கு 1/2 இன்ச் மார்க் பண்ணவும்.
13, மத்தி பார்ப்பதற்கு தொடைலூஸ் (அடிங்கால்) அளவில் பாதி அளவு வைத்து மேலிருந்து கீழேவரை கோடு போடவும்.
14, பாதம் லூஸ் அளவு பாதம் மத்திக்கோட்டிலிருந்து வலதில் பாதி அளவு, இடதில் பாதி அளவு வைக்கவும்.
15, ஸ்கேல் மூலம் கோடுகளால் இணைத்து, முழு வடிவம் கொண்டு வந்து கட் பண்ணவும்.
16, பின் தட்டுக்கு, முன் தட்டு துணியை மேலே வைத்து முன்தட்டு துணிக்கு மேல் பகுதியில் , 1, 1/2 இன்ச் வைத்து ஒரு கோடு போடவும்.
17, சீட்டு கோட்டிலிருந்து நேரே ஒரு கோடு போடவும்.
18, சீட்டு கோட்டியிருந்து கீழே 1/2 இன்ச் கீழே வைத்து ஒரு கோடு போடவும்.
18, கீழே பாட்டம் கோட்டில் நேராக ஒரு கோடு போடவும்.
19, சீட் கோட்டில் இருந்து 2, 1/2 இன்ச் வைத்து ஒரு மார்க் பண்ணவும்.
20, மூட்டு, மற்றும் கீழ் பட்டி கோட்டில் 1, 1/2 இன்ச் வைத்து மார்க் பண்ணவும்.
21, மேலிருந்து கீழே மார்க்குகளை இணைத்து கோடு போடவும்
22, மேலே இடுப்பு சைடு தையலுக்கு 1/2 இன்ச் வைத்து மார்க் பண்ணவும்.
23, இடுப்பு அளவில் 4ல் ஒரு பாகம் வைத்து இரண்டாவது மார்க் பண்ணவும்.
24, டாட்டுக்கு 1/2 இன்ச் வைத்து மூன்றாவது மார்க் பண்ணவும்.
25, எக்ஸ்ட்ரா தையலுக்கு 2 இன்ச் வைத்து நான்காவது மார்க் பண்ணவும்.
26, பொந்து உயரத்தில் 3ல் ஒரு பாகம் பாட்டம் லூஸ் பார்க்க குறிக்கவும்
27, சீட் அளவில் 4ல் ஒரு பாகத்துடன் 3/4 கூட்டி பாட்டம் லூஸ் வைக்கவும்.
28, கோடுகளால் இணைத்து முழு வடிவம் கொண்டு வந்து கட் பண்ணவும்.
சீட் 38
பொந்து 9 1/2
தொடை லூஸ் 11 1/2
மூட்டு லூஸ் 9 1/2
பாதம் லூஸ் 6 1/2
சீட் லூஸ் 10 1/4
Thursday, March 6, 2025
Friday, February 21, 2025
La ballade de la mer salee
" உன்னைப்போல் யாரும் என் கண்களிற்கு தெரிவதில்லை எனவேதான் நான் செல்லுமிடம் எங்கெங்கும் உன்னைக் காண விழைகிறேன்''
#கனவுகளின்காதலன்
இங்கே கிளிக்: உப்புக்கடல் பாடல்