Thursday, March 20, 2025

சர்ட் கட்டிங்


எனது தையல் குரு திருநெல்வேலி சாமி தையலக முதலாளி திரு P.செல்வராஜ் அவர்களின் நல்லாசியுடன்...




சர்ட் கட்டிங்

அளவுகள்

உயரம்

பாடி 

பாடிலூஸ்

வயிறு

சோல்டர் 

கை

கைலூஸ்

காலர்

1, முதலில் உயரத்தை விட 2 இன்ச் அதிகம் வைத்து மார்க் பண்ணவும். வலது கீழ் சைடு 3/4 கரவு அடிக்கவும்.

2. நெஞ்சுப் பட்டிக்கு 2 இன்ச் வைத்து மார்க் பண்ணி கோடு போடவும்.

3. உயரத்திலிருந்து கீழே 2 இன்ச் மார்க் பண்ணவும். சின்ன சட்டை 1, 1/2 இன்ச். பெரிய சட்டை 2, 1/2 இன்ச்.

4, அக்குள் இறக்கம்: பாடி அளவில் 4ல் ஒரு பாகத்தில் 1/2 இன்ச் குறைத்து வைக்கவும்.

5, கழுத்து அகலம் பெரிய சட்டை 3 இன்ச், சின்ன சட்டை 2, 1/2 இன்ச்.

6, தோள் அகலம் சோல்டர் அளவில் பாதி + 1/2 இன்ச்.

7, பாடி லூஸ் பாடி அளவில் 12 கூட்டி அதில் 4ல் ஒரு பாகத்துடன் 1/2 இன்ச் கூட்டி வைக்கவும். சிறிய சட்டை 10 இன்ச்

8, பேக்பாடி முன்பக்கத்தை விட 3/4 அகலம் குறைத்து வைக்கவும்.

9, பேக்பாடி உயரம் 1, 1/4 குறைத்து வைக்கவும்.

10, சோல்டர் அளவில் பாதி + 1/2 இன்ச் கூட்டி சோல்டர் அகலம் வைக்கவும்.

11, கை அகலம், பாடி அளவில் 4ல் 1 பாகம் வைக்கவும்.

12, அடி கை உயரத்தில் 4 இன்ச் குறைத்து வைக்கவும்.

13, சோல்டர் அகலம், சோல்டர் அளவில் பாதி + 1/2 இன்ச் வைத்து உயரம் 5 கழுத்து 1, 1/2. தோள் 3, 1/2 இன்ச் வைத்து கழுத்து அகலம் சோல்டர் அளவில் 3ல் 1 பாகம் வைக்கவும்.

ஏரோ கரவு அடிக்க 2 இன்ச்! 

துணி அளவு: பெரிய சட்டை 2,25 மீட்டர். புல்சர்ட், 2, 50 மீட்டர்.

No comments:

Post a Comment