இந்தக் கதை, 'லக்கி லூக்' காமிக்ஸ் தொடரின் அசல் படைப்பாளியான மாரிஸ் என்று அழைக்கப்படும் மோரிஸ் டி பெவெரே என்ற பெல்ஜிய ஓவியருக்குச் செலுத்தப்பட்ட ஒரு கலை ரீதியான அஞ்சலி ஆகும்.
மாரிஸ் 1946-ல் இந்த உலகப் புகழ்பெற்ற லக்கி லூக் கதாபாத்திரத்தை உருவாக்கினார். பின்னர் புகழ்பெற்ற எழுத்தாளர் ரெனே கோசினி (அஸ்டெரிக்ஸ் கதைகளின் ஆசிரியர்) இவருடன் இணைந்து பல அற்புதமான கதைகளை எழுதினார்.
மாரிஸ் மறைந்த பிறகும், லக்கி லூக் காமிக்ஸின் 75 ஆண்டுகாலப் புகழைக் கொண்டாடும் விதமாகவும், அதன் அசல் படைப்பாளிகளுக்குப் பெருமை சேர்க்கும் விதமாகவும் ஐரோப்பாவின் முன்னணி காமிக்ஸ் கலைஞர்களைக் கொண்டு பிரத்யேகமாக 'ஹோமேஜ் ஆல்பம்கள்' (Homage Albums) உருவாக்கப்பட்டன. அந்த வரிசையில், ஜெர்மன் கலைஞர் ரால்ஃப் கோனிக் வரைந்த அஞ்சலிப் படைப்புதான் இந்த 'Swiss Bliss' காமிக்ஸ்.
'Swiss Bliss' ஜெர்மன் காமிக்ஸ் கலைஞர் ரால்ஃப் கோனிக் என்பவரால் லக்கி லூக் பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டு, 2021-ல் வெளியான ஒரு நகைச்சுவையான காமிக்ஸ் ஆல்பம்.
வழக்கமான லக்கி லூக் கதைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட, ஒரு நையாண்டி பாணியில் இந்த நகச்சுவைக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கதைச்சுருக்கம் பின்வருமாறு:
தொடர்ந்து குற்றவாளிகளைப் பிடித்து அலுத்துப்போகும் லக்கி லூக்கிற்கு, கொஞ்ச காலம் கரடுமுரடான மேற்குப் பகுதியிலிருந்து விலகி நிம்மதியாக ஒரு ஓய்வு எடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
இதற்காக அவர் தேர்ந்தெடுக்கும் வேலை: அமெரிக்காவிற்கு கொண்டுவரப்பட்டுள்ள சில சுவிட்சர்லாந்து பசு மாடுகளை மேய்க்கும் வேலை. அந்த மாடுகள், சுவையான அசல் சுவிஸ் சாக்லேட் தயாரிப்பதற்குத் தேவையான மிக முக்கிய மூலப்பொருளான உயர்தரப் பாலைத் தருபவை. அதே நேரத்தில், அமெரிக்காவின் மேற்குப் பகுதி மக்கள் அப்போதுதான் 'கோகோ' சாக்லேட்டின் சுவையை முதன்முதலாகக் கண்டறிந்து அதற்கு அடிமையாகத் தொடங்கியிருக்கிறார்கள்.
லக்கி லூக் நிம்மதியைத் தேடி இந்த மாடு மேய்க்கும் வேலைக்கு வந்தால், அங்கும் அவருக்குப் பல வழிகளில் தலைவலி ஆரம்பிக்கிறது.
லக்கி லூக்கின் புகழைக் கேள்விப்பட்டு, அவரிடம் ஆட்டோகிராப் வாங்குவதற்காகப் பின் தொடரும் தீவிர ரசிகர்கள் அவரது நிம்மதியைக் கெடுக்கிறார்கள்.
'சிக்கோரி' என்ற விசித்திரமான சிவப்பு இந்தியப் பழங்குடி இனத்தின் தலைவரால் லூக்கிற்கு புதிய குடைச்சல்கள் உருவாகின்றன.
கதையின் மிக முக்கிய நகைச்சுவையும் திருப்பமும், லூக்கிற்கு உதவியாக இருக்கும் இரண்டு கவ்பாய்களுக்குள் ஏற்படும் காதல் தான். தங்களுக்குள் இருக்கும் காதலை வெளிப்படுத்தத் தெரியாமல் அவர்கள் இருவரும் அடிக்கடி முரட்டுத்தனமாக சண்டையிட்டுக் கொள்கிறார்கள். இவர்களின் இந்த விசித்திரமான காதல் சண்டையைச் சமாளிப்பதே லக்கி லூக்கிற்கு பெரும்பாடாகி விடுகிறது.
சுவிஸ் மாடுகளை மேய்த்துக்கொண்டு, இந்த விசித்திரமான மனிதர்களின் அலப்பறைகளைத் தாங்குவதற்குப் பதிலாக, பேசாமல் எப்போதும் தன்னிடம் அடிவாங்கும் 'டால்டன் சகோதரர்களை'யே மீண்டும் சந்தித்து சிறையில் அடைத்திருக்கலாம் என்று லக்கி லூக் புலம்பும் அளவிற்கு நிலைமை மாறுகிறது.
ரால்ஃப் கோனிக் தனதுக்கே உரிய பாணியில் (ஓரினச் சேர்க்கை, வயது வந்தோருக்கான மெல்லிய நகைச்சுவையுடன்) மூலக் கதையின் கதாபாத்திரத் தன்மைகளை மாற்றாமல், லக்கி லூக் உலகத்தை மிகவும் வேடிக்கையாக இதில் கையாண்டிருப்பார்.
சனங்க வர்றாங்க!
என்ன? சுடு!
நான் வெளியே போய் பார்க்கிறேன்!
அவனுங்க கிட்ட ஆயுதம் இருக்கா?
அப்படித் தெரியலை!
எதுக்கும் ஜாக்கிரதையா இரு!
அடக் கடவுளே! நான் மாட்டிறைச்சி துண்டுகளில் ரொட்டித்தூள் தடவத்தான் நினைத்தேன்!
நான் உன்னிடம் எத்தனை முறை சொல்லி இருக்கிறேன்? இறைச்சியில் ரொட்டித்தூள் தடவக் கூடாது!
*மேலைநாட்டு சமையல் படி மாட்டிறைச்சித் துண்டுகளை மாவில் புரட்டி, ரொட்டித்தூள் தடவி வறுக்க மாட்டார்கள்.
இறைச்சித் துண்டுகளை வெறும் உப்பு, மிளகுத்தூள் மட்டும் தூவி, அப்படியே நெருப்பில் வாட்டியோ அல்லது தவாவிலோ சமைக்க வேண்டும்.
அப்போதுதான் அதன் உண்மையான சுவை கிடைக்கும்.
இது பிரெஞ்சு புதுப்பாணியான சமையல்!
உனக்குக் கலாச்சாரம் தெரியுமா?!
உங்களுக்கு என்ன வேண்டும்?!
லக்கி லூக்கா?
ஒருவேளை நாம் லக்கி லூக்கை சந்தித்திருப்போமா?!
ஆமாம், கொஞ்ச காலத்திற்கு முன்பு!
எப்படி?!
ஏய், டெரன்ஸ். அவர்கள் லக்கி லூக்கைப் பற்றி கேட்க விரும்புகிறார்கள்!!!
அப்படியானால், அவர்கள் சரியான நபரிடம் தான் வந்திருக்கிறார்கள்! அவர்களிடம் லக்கி லூக்கைப் பற்றி சொல்!
சரி, அவனைப் பார்த்த எவருக்கும் 'லக்கி லூக்'கை நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்!
ஆமாம்!
குறிப்பாக அவனது கழுத்து, பார்ப்பதற்கே சாப்பிடத் தூண்டும் அளவுக்குக் கவர்ச்சியாக இருந்தது!
அட, என்ன இது, இன்னமும்?! அவன் பார்க்க நல்லா இருந்தான்!
ஆனா ரொம்பவும் ஒல்லியா இருந்தான்! அந்தக் கால்சட்டையில் பின்புறமே தெரியவில்லை!
எனக்கு இன்னும் நினைவிருக்கிறதா என்பதே சந்தேகம்தான்.
அடடா, இது நடந்து நாற்பது வருடங்கள் ஆகியிருக்கும்!
வயதாக ஆக உனக்கு மறதி ஏற்படத் தொடங்கும்...
இது நம்முடைய கதை, நண்பா...
இது நம்ம கதை. நான் உன்னை நம்புறேன்!
நான் இறைச்சித் துண்டுகளை மாவில் தோய்த்துக்கொண்டிருக்கிறேன்...
ஹூம்... அப்போதெல்லாம் அந்தத் தொலைதூரத்தில் ஒரு குக்கிராமம் ஒன்று இருந்தது.
அதன் பெயர் என்ன?
நேரான பள்ளத்தாக்கு!
அதேதான்! நேர் பள்ளத்தாக்கு!
நேர் பள்ளத்தாக்கு
அந்நியர்களே, திரும்பிச் செல்லுங்கள்; இல்லையேல் உரம் ஆக்கப்படுவீர்கள்!
மேலும், மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சண்டையில் ஈடுபடவிருந்த இளம் முட்டாள்கள் அங்கே இருந்தனர்!
இடமும் வலமும் வெறும் ஓநாய்களும், முட்டாள்களும், லூசுகளும்தான்! எல்லாரும் எதுக்காகக் காத்துக்கிட்டு இருக்காங்கன்னா...
நீ ஏன் எப்போ பார்த்தாலும் இவ்வளவு பந்தாவா பேசுற?!
விடுப்பா! சனங்களுக்கு பொழுதுபோக்கு வேணும்டா!
அவங்களுக்கு லக்கி லூக்கைப் பத்திச் சொல்லு!
அவங்க லக்கி லூக்கைப் பத்திதான் கேட்க விரும்புறாங்க!
சரி!
லக்கிலூக்!
நான் லக்கி லூக்கை முதன்முதலில் நேர் பள்ளத்தாக்கு வேலைவாய்ப்பு மையத்திற்கு வெளியே சந்தித்தேன்!
அந்த வழியாக ஒரு மாட்டு மந்தையை ஓட்டிச் செல்ல வேண்டியிருந்தது!
அப்போது எனக்கு சுமார் இருபத்தைந்து வயது, அந்த வேலையில் எனக்கு ஆர்வம் இருந்தது!
ஆனால், எனக்குச் சாதகமற்ற சூழ்நிலைகள் அமைந்தன...
வேலை வாய்ப்பு மையம்
ஒருவர் பின்
ஒருவராக
உள்ளே வரவும்.
அழைக்கப்படும் வரை
காத்திருக்கவும்!
எனக்கு அவரை அடையாளம் தெரியவில்லை...
பிரபலமான சித்திரக்கதைப் புத்தகங்களில் இருந்ததைப் போல அவர் அழகாகத் தெரியவில்லை.
ஆனா நல்ல மனுஷன்!
சரி, அடுத்தது!
அங்கே மஞ்சள் சட்டை அணிந்திருப்பவர்!
ஒருவர் பின்
ஒருவராக
உள்ளே வரவும்.
அழைக்கப்படும் வரை
காத்திருக்கவும்!
அவர்தான் முதலில் இங்கே இருந்தார்!
அவர் காத்திருக்கட்டும்!
திரு. ஹிக்ஸ்!
ஒரு நிமிடம்!!
மிஸ்டர் ஹிக்ஸ், இனிமே எனக்கு இங்க வேலை கிடைக்காதுன்னு எனக்குத் தெரியும். ஆனா நான் என்ன தெரிஞ்சுக்க விரும்புறேன்னா..
முதல்ல இடத்தை காலி பண்ணு பையா!
ஆனா நான் தெரிஞ்சுக்க விரும்புறது என்னன்னா...
புளிச்!
ஒருவர் பின்
ஒருவராக
உள்ளே வரவும்.
அழைக்கப்படும் வரை
காத்திருக்கவும்!
***தொடரும்...