Thursday, July 9, 2026

இரட்டையரின் புதையல் வேட்டை!



 



டேரன் மற்றும் டேவிட் பதின்மூன்று வயது இரட்டையர்கள். ஒரு கடல் பேரழிவில் தங்கள் பெற்றோரை இழந்த அவர்கள், ஒரு அனாதை இல்லத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. அந்த இல்லத்தின் பொறுப்பாளர், அவர்களின் செல்ல லாப்ரடார் இன நாயான பெர்ரி விஷயத்தில் மிகவும் கண்டிப்போடு இருந்தார்...

ஆனால், மேடம், எங்களால் பெர்ரியை அனுப்பிவிட முடியாது! இப்போது எங்களுக்கு இருப்பது அவன் மட்டும்தான்!

விதிகள் விதிகள்தான்! அனாதை இல்லத்தில் செல்லப்பிராணிகளுக்கு அனுமதி இல்லை! அவன் இன்றிரவு தங்கலாம்... ஆனால் நாளை அவன் போகத்தான் வேண்டும்! அதுதான் முடிவு! 


அந்தச் சிறுவர்கள் சோகத்துடன் தங்கள் அறைக்குச் சென்றனர்...

டாரன், நாம் என்ன செய்யப் போகிறோம்? பெர்ரியையும் இழப்பதை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது!

கவலைப்படாதே டேவிட்! நாம் ஏதாவது யோசிப்போம்! 


அவர்கள் அங்கிருந்து வெளியேற தீர்மானித்தார்கள். அன்று இரவு, எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்தபோது...

ஆனால் பெர்ரியை எப்படி கீழே இறக்குவது?

ஷ்... அமைதி! நாம் கீழே சென்றதும் நான் உனக்குக் காட்டுகிறேன்! 


சிறுவர்கள் கடைசிப் போர்வையை அவிழ்த்துவிட்டு...

 வாடா, பெர்ரி பையா குதி!

நன்றாகச் செய்தாய், பெர்ரி! 


சரி, விடியலுக்குள் நாம் இங்கிருந்து முடிந்தவரை வெகுதூரம் செல்ல வேண்டும்! 


அடுத்த நாள் காலை....

நாம் இப்போது பல மைல்கள் தொலைவில் இருக்கிறோம். நீ நெருப்பு மூட்டு, நானும் பெர்ரியும் காலை உணவுக்கு ஏதாவது கொண்டு வர முயற்சிப்போம்!

சரி! அங்கே இருக்கும் அந்தக் குகை ஒரு அருமையான மறைவிடமாக அமையும்! 


பிடிச்சிட்டேன்! நமது காலை உணவுப் பிரச்சினை தீர்ந்தது! 



சரி... எப்படியும் நமக்குச் சாப்பாட்டுக்குக் குறைவிருக்காது, ஆனால் எல்லா நேரமும் மீன் பிடித்துவிட முடியாது!

நீ சொல்வது சரிதான், பணம் சம்பாதிக்க வேறு ஏதேனும் வழியைத்தான் பார்க்க வேண்டும்!


இரட்டையர்கள் மீண்டும் புறப்பட்டனர்! அவர்கள் பிரதான சாலைகளிலிருந்து விலகி, ஒரு கால்வாய் ஓரமாகச் சிறிது தூரம் நடந்தனர்...

தற்காலிகப் பணியாளர்கள் தேவை!

ஏய், அந்தப் அறிவிப்பு பலகையை பார்! அவர் நமக்கு வேலை தருவாரா என்று பார்ப்போம்!



திரு. பீவர்? உங்கள் அறிவிப்பை நாங்கள் பார்த்தோம்! கோடை விடுமுறையின்போது பணம் சம்பாதிக்க எங்களுக்கு விருப்பம்!

எங்களுக்கு... படகுகளைப் பற்றியும் ஓரளவு தெரியும்! எங்கள் அப்பாவிடம் ஒரு படகு இருந்தது! தயவு செய்து அந்த வேலையை எங்களுக்குத் தருவீர்களா?


ஒன்னு பண்ணுவோம்! உங்களுக்கு ஒரு வார காலச் சோதனைக் காலம் தருகிறேன்; நீங்கள் திறமையாகச் செயல்பட்டால், கோடைக்காலம் முழுவதும் இங்கேயே தங்கலாம்! 


திரு. பீவர், பயன்பாட்டில் இல்லாத ஒரு படகு வீட்டில்  அவர்களுக்கு இரண்டு படுக்கைகளை ஏற்பாடு செய்து கொடுத்தார்! அடுத்த வாரம்...

திரு. பீவர், அந்தப் படகு வீட்டில் இருக்கும் பழைய சரக்குப் படகை  நீங்கள் ஏன் பழுதுபார்க்கக் கூடாது?

அதற்கு எனக்கு நேரமில்லை தம்பி. அது ஒரு பழைய கப்பல் கேப்டனுக்குச் சொந்தமானது! அவர் இறந்தபோது அதை எனக்கு விட்டுச் சென்றார்! அவர் பணக்காரர் என்று மக்கள் சொல்வார்கள்... ஆனால் அவர் எந்தப் பணத்தையும் விட்டுச் செல்லவில்லை! உங்கள் கடின உழைப்பிற்கான கூடுதல் பரிசாக நீங்கள் இருவரும் அதைப் பெற்றுக்கொள்ளலாம்!


பகலில் அந்த இரட்டையர்கள் திரு. பீவருக்காகக் கடினமாக உழைத்தனர்; இரவிலோ அந்தப் பழைய சரக்குக் படகில் பாடுபட்டனர்...

இது சரிப்பட்டு வராது, இந்த இன்ஜின் பழுதாகிவிட்டது! நாம் பணம் சேர்த்துப் புதிதாக ஒன்றுதான் வாங்க வேண்டும்!

அதற்கு வெகு காலம் ஆகுமே! இன்ஜின் விலை மிக அதிகம்... வேறு வழியே இல்லையா?



வெளியே ஏற்பட்ட சலசலப்பு அவர்களுடைய கவனத்தை ஈர்த்தது...

ஏய் முட்டாள் மிருகமே! நீ என்ன செய்துவிட்டாய் பார்! ஒரு முழுநாள் பால் உற்பத்தியைக் கெடுத்துவிட்டாய்!

ஏய்! நிறுத்துடா முரடனே! அந்தக் குதிரையை அடிப்பதை நிறுத்து!

அந்த சாட்டையை எடுடா  பெர்ரி!


 இங்கே என்னதான் நடக்கிறது?

இந்த ஆள் குதிரையை அடித்துக்கொண்டிருந்தான்! இவன் ஒரு பைத்தியக்காரன்!

அதை அடிக்கத்தான் வேண்டும்! இந்த வாரத்தில் அது மிரண்டு ஓடுவது இது மூன்றாவது முறை; நாளை அதைச் சுட்டுக் கொன்றுவிடுவேன்!


நீங்கள்... நீங்கள் அதைச் சுட்டுக் கொல்ல வேண்டாம்! நாங்கள் அதை உங்களிடமிருந்து வாங்கிக்கொள்கிறோம்! உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும்?

சீ! குதிரை இறைச்சியாக ஆக்குவதைத் தவிர, இதனால் எனக்கு வேறு எந்தப் பயனும் இல்லை! பத்து பவுண்டுகள் கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள்!




அடுத்த நாள்...

சரி, குதிரையைக் காப்பாற்றிவிட்டோம்... ஆனால் இப்போது ஒரு இன்ஜினை வாங்குவதிலிருந்து இன்னும் வெகுதூரம் தள்ளிப்போய்விட்டோம்!

இன்ஜின்? குதிரை? அட, அதுதான் வழி! பழைய காலங்களில் செய்தது போல, அந்தப் படகை இழுக்க இந்தக் குதிரையைப் பயன்படுத்துவோம்!


அவர்கள் குதிரையைப் படகுடன் பூட்டினார்கள், விரைவில்...

குதிரையால் அதை எளிதாக இழுக்க முடிகிறது! நாம் இதற்கு இழுவைக்கப்பல் என்று பெயரிடலாம் என நினைக்கிறேன்!

டேரன்! சீக்கிரம் இங்கே வா! பெர்ரி என்ன கண்டுபிடித்திருக்கிறான் பார்!


No comments:

Post a Comment