Thursday, September 3, 2026

இருளின் இரட்சகன்!

 


இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் ஆப்பிரிக்காவில் நடக்கும் விசித்திரமான சம்பவங்களை மையமாகக் கொண்ட மூன்றாம் பாகத்தின் கதைச்சுருக்கம்:

ஜெர்மன் நாஜி படையினர் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நமீபியா பாலைவனத்தின் ரகசிய நிலத்தடி தளங்களில் ஒளிந்திருந்து, வேற்றுக்கிரகவாசிகளின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனிதர்களை மாற்றியமைக்கும் கொடூர சோதனைகளைச் செய்து வருவது தெரியவருகிறது. 

பிரிட்டிஷ் இரகசிய உளவாளியான கேத்தி ஆஸ்டின், பாலைவனத்தில் நடக்கும் ராட்சத உயிரினங்களின் தாக்குதல்கள் மற்றும் விசித்திரமான பறக்கும் தட்டுகளின் ரகசியத்தை நோக்கி நகர்கிறார்.

நாஜிக்களின் ரகசிய நிலத்தடி ஆய்வுக்கூடத்திற்குள் ஊடுருவி அங்கு நாஜிக்கள் வேற்றுக்கிரகவாசிகளுடன் கைக்கோர்த்து மனித குலத்திற்கே ஆபத்தான உயிரியல் ஆயுதங்களை உருவாக்க முயற்சிப்பதைக் கண்டறிகிறார். ஆபத்தான உயிரினங்களிடமிருந்தும், நாஜி படைகளிடமிருந்தும் தப்பித்து இந்த உண்மையை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டுவதே பாகம் மூன்றின் கதைக்களமாகும் .






No comments:

Post a Comment