Sunday, April 12, 2026

CALL of the WILD

 


காவல் தலைவர் கிர்க் ஸ்காட் தனது பழைய நண்பரின் மகள் ஜென்னி பென்சனைப் பார்த்து நீண்ட காலமாகி இருந்தது. ஊர் ஊராகச் செல்லும் மாட்டு வண்டித் தொடர்களில் பணியாற்றும் துடிப்பான, முரட்டுத்தனமான இளைஞன் டாம் பென்சனை அவள் திருமணம் செய்து கொண்டது அவருக்குத் தெரியும். ஒருநாள், தனது எல்லைக்கு வெளியே இருக்கும் 'வேகன் பிளப்' நகருக்கு வந்தபோது, ஜென்னியைச் சந்தித்துவிட்டுப் போகலாம் என்று அவர் முடிவு செய்தார்.

யாரது? கிர்க் ஸ்காட்டா!
உங்களைப் பார்ப்பதில் எவ்வளவு மகிழ்ச்சி!

வணக்கம் ஜென்னி. நான் 'ஃபோர்ட் வொர்த்'திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தேன், அப்படியே
உன்னைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டுப் போகலாம் என்று தோன்றியது. 

மார்ஷல்: அமெரிக்காவில் உள்ளூர் அளவில் 'ஷெரிப்' என்ற அதிகாரிகள் இருப்பார்கள். ஆனால், 'மார்ஷல்' என்பவர் நேரடியாக மத்திய அரசால் நியமிக்கப்படுபவர். ஒரு குறிப்பிட்ட நகரம் மட்டுமில்லாமல், ஒரு பெரிய மாகாணம் அல்லது பிராந்தியம் முழுமைக்கும் இவருக்கு அதிகாரம் உண்டு.

No comments:

Post a Comment