Wednesday, September 9, 2026

தப்பிக்க வழியில்லை!

 


நமீபியா ஒரு சிறிய கதைச்சுருக்கம்.

எல்லை அறிய முடியாது விரிந்து செல்லும் விண்வெளியின் மறுபுறத்திலிருக்கும் ஒரு சிறு கிரகத்தினர் தங்கள் கிரகத்தின் இடப்பற்றாக்குறையால் சூரியக்குடும்பத்தின் வளமிக்க பூமியைக் கைப்பற்ற தீர்மானித்து பூமியை வந்தடைகின்றனர். 

 பூமியில் பஞ்சம் ஏற்படுத்த உணவுத் தானியங்களை அழிக்கும் ராட்ஸச பூச்சிகளை உருவாக்கியும், மனிதர்களை விரைவில் வயதானவர்களாக்கும் விசித்திர நோயை பரப்பியும், மதபோதகர் ஒருவரின் மூலம் அற்புதங்களை நடத்தி,  மதத்தின் பெயரால் மக்களை தற்கொலைக்கு தூண்டவும் செய்கின்றனர்.

பூமியில் ஊடுருவும் அவர்களுடைய திட்டத்தின் ஒரு பகுதியாக இறந்த மனிதர்களை போன்ற போலி மனிதர்களை உருவாக்கி உலவ விடுகின்றனர்.

ஆனால் அப்படி உருவாக்கப்பட்ட ஒரு மனிதர்களில் ஒருவன்  இரண்டாம் உலகப்போரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு ஜெர்மன் இராணுவ அதிகாரியாக இருந்ததால், அந்த உயித்தெழுந்த மனிதன்  இங்கிலாந்து உளவு அமைப்பின் கவனத்தை ஈர்க்கிறான். 

அதைத் தொடர்ந்து இங்கிலாந்து உளவாளியான கேத்தி ஆஸ்டின் நமீபியாவுக்கு அனுப்பப் படுகிறாள்.

நமீபியாவில் சதுரங்க ராணி போல் பல இடங்களுக்கும் பயணித்து பல உயிர் அபாயங்களை சமாளித்து, வேற்றுக்கிரகவாசிகளின் நிலத்தடி முகாமை கண்டறியும்  கேத்தி, அங்கே பூமி மனிதர்களுக்கு உதவ வந்திருக்கும் மற்றொரு வேற்றுக்கிரக மனிதர்களையும் சந்திக்கிறாள்.

கேத்தியின் அறிக்கைகளின்படி பூமியை சூழ்ந்திருக்கும் பேரபாயத்தை உணரும் இங்கிலாந்து உளவுத்துறை சர்ச்சில்,  ஸ்டாலின் போன்ற உலகத்தலைவர்களின் உதவியுடன் பூமியில் பல நாடுகளில் இருந்த  வேற்றுக்கிரகவாசிகளின் பல முகாம்களை தாக்கி அழிக்கிறது.

இப்படியாக பூமி வேற்றுக்கிரகத்தினரை வெற்றி கொண்டது போல் காணப்பட்டாலும், அது ஒரு தற்காலிக வெற்றியாகவே அமையக்கூடும்.  அறிவியலில் மிகுந்த முன்னேற்றமடைந்து, ஏராளமான எண்ணிக்கையில் இருக்கும் அயல்கிரகவாசிகள் எந்நேரத்திலும்  பூமி மீது உக்கிரமான தாக்குதல் நடத்தலாம். 

அப்போது சதுரங்கத்தில் செக்மேட் செய்யப்பட்ட ராஜாவைப்போல பூமிக்கு தப்பிக்க ஒரு வழியும் இல்லாமல் போகலாம்.




ஐந்து பாகங்களின் தமிழ் தலைப்புகள்: 

1, பதிமூன்றாவது கல்லறை!

2, மரணம் அல்லது மரணம்!

3, இருளின் இரட்சகன்!

4, பூமியைத் திருடு!

5 , தப்பிக்க வழியில்லை!


என்றேனும் இக்கதைகள் தமிழில் புத்தகமாக வந்தால் இந்த தலைப்புகளை பயன்படுத்தினால் மகிழ்வேன்!


***

No comments:

Post a Comment