Wednesday, July 12, 2017

கானற்சுழி...!




நெடுந்தூரப் பயணங்களின் வெம்மையாடும் வழித்தடங்களில் கானல் நீர் தோன்றும்.
அருகாமையில் மாயத்தோற்றம் கரைந்தோடும்.
 கஷார் வைரத்தை தேடியவர்களும் ஒரு கானலையே சொந்தம் கொள்ள முயன்றார்கள்.

கஷார் ஒரு கானற்சுழி !


அன்றாடம் உயிர் நீங்கும் நிகழ்வுகள் கண்ணெதிரில் கடந்து செல்லும் போதும், தான் மட்டும் ''சீரஞ்சீவி'' என்பதான கற்பனையில் அரும்பொருள்களை சொந்தம் கொள்ளத் துடிக்கும் பேராசை நெஞ்சங்கள் அம்முயற்சிகளின் தம் இழப்புகளை சிந்தனையில் கொள்வதில்லை.
அளவற்ற செல்வங்கள் நிறைந்த மண்ணிற்கு வந்து செல்லும் எவருடைய கைகளும் வெறுமையாகவே உள்ளன. தன் வாழ்நாள் எனும் ஒற்றை நாளின் அஸ்தமனம் வரை செல்வம் தேடுவதிலேயே இழந்து விடுபவன், வாழ எண்ணும் நேரம் காலம் கடந்து போயிருக்கும்.




அவரவர் குண இயல்புகளை தெளிவு படுத்தும் வசனங்கள்.


கஷார் ! 
ஒரு கானற்சுழியின் தோற்றம் !!!






சிகப்பு ராஜாளியின் அட்டகாசமான அறிமுகம் !


ராஃபியின் ஆக்ரோஷம் !



ஒரு கொள்ளைக்காரனின் வார்த்தைகளை நம்பியவரின் பரிதாப முடிவு !






Saturday, July 8, 2017

முள்ளும் மலரும்...




எப்படிப்பட்ட மனிதனும் பெண் மீது ஈர்க்கப்படுகிறான்.  அவன் எத்தனோ, ஏமாற்றுக்காரனோ, கோழையோ, ஈனப்பிறவியோ ஆசை பேதம் கொள்வதில்லை.

அடிமை வியாபாரி பெராங்கோ மரியா மீது கொண்ட அபிமானம் அவளின் ஏவலாளாய் அவனை வீழ்த்திற்று. அவனின் செல்வங்களை எல்லாம் அவளது காலடியில் கொட்டியது. அவன் எண்ணியிருந்தால் சவுக்கடிகள் அவனது தேவைகளை நிறைவேற்றி இருக்கும். ஆனால் அவனின் தேவையோ அவளது நெஞ்சில் ஓர் இடம். 

பெராங்கோ ஒன்றை எண்ணிப்பார்க்கத் தவறி விட்டான். அவன் தன் மனதை வளர்த்த போதும் மரியாவினுள்ளும் ஒரு இதயம் இருப்பதையும் அதன் துடிப்பு என்னவென்றும் அவன் அக்கறை கொள்ளவில்லை.

 அன்புக்கு விலையில்லை, அது கேட்பவருக்கெல்லாம் கிடைத்து விடுவதும் இல்லை. 



மரியாவின் நேசமோ ராஃபியிடம், இப்போதும் காதலின் பேதமற்ற கணைகள் வேகம் கொள்கின்றன. விதியோ இணைபறவைகளை படுத்தும்பாடு கொஞ்சமல்ல. . அதன் விளையாடல் ஓய்வதெப்போது?


கண்கள் கதை பேசும்!

பெராங்கோ எத்தனை கேவலமான பிறவி என்பதை இத்தொடர் முழுவதும் அவ்னுடைய செயல்களிலிருந்து நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். ஆனால் அவனது முடிவோ ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று.இழிந்த பிறவிகளுக்குதான் அள்ளிக்கொட்டுகிறது .

தான் கடித்த உடல் சுடுகாடு வருகிறதா? என காத்திருக்குமாம் கொம்பேறி மூர்க்கன்.


அபாரமான வர்ணனை !

ஆபத்தென்றால் விஷப்பூச்சிகள் அதீத வேகத்தில் தப்பியோடும்.

வாழ்க்கை ஒரு வட்டம் சார்!

சாத்தான் வேதம் ஓதுகிறது.


ஒரு அதிரடி ஆக்ஷன் 

சாயங்காலம்..... சாயுங்காலம்.....




Thursday, July 6, 2017

வஞ்சம்...!

                                                       பராகுடா  3. சமர் 


அருகாமை விண்மீனின் பேரொளியின் முன்பாக கண் எட்டா நட்சத்திரங்கள் தம் பிரகாசம் இழப்பது போல, காப்டன் பிளினிற்காக எமிலியோ கொண்ட வஞ்சத்தின் முன்னாக இந்த பாகத்தின் பிற நிகழ்வுகள் ஒளி குன்றிப் போகின்றன.

வாட்சமரில் வஞ்சகத்தால் காப்டன் பிளினை வீழ்த்திய மோர்கமை, அதே வஞ்சகத்தால் அழித்தொழிக்க எமிலியோ துணிவு கொண்டான்.

இருளும் ஒளியும் ஆட்சி செலுத்த, நடக்கும் மரணப்போராட்டத்தில் ஃப்ளோரெண்டின் தந்திரம் அரங்கேறும்போது எம் வாசிப்பின் அனுபவம் ஒரு உன்னத நிலையடைகிறது.

காப்டன் பிளினின் ஆன்மா எமிலியோவின் வாளை சுழற வைத்ததோ?

செத்து விழுந்த மோர்கம் செந்நண்டுகளின் இரையாகிறான். மரணத்தில் கூட நல்லடக்கம் என்றொரு மதிப்பை இழந்து...

 இது ஒரு நீதி, ஒழுக்கமற்றவர்களின் முடிவை பறைசாற்றும் நீதி.





ஈரலிப்பு ; எப்போதும் ஈரமாக இருக்கும் இடம்.
(நன்றி : நண்பருக்கு)

மண்டையோடு போன்ற மலைமுகடு, இங்கே வசிப்போரின் காத்திருப்பு "மரணமே" என்பதை மெய்ப்பிக்கிறதோ?







என்ன ஒரு பேரம்!







ஓவியரின் திறமையை பறைசாற்றும் அருமையான சித்திரம் ஒன்று.


அலைகடலில் பராகுடாவின் எழிலோவியம்.




காப்டன் பிளினின் ஆன்மா எமிலியோவின் வாளை சுழற வைத்ததோ?



செத்து விழுந்த மோர்கம் செந்நண்டுகளின் இரையாகிறான். மரணத்தில் கூட நல்லடக்கம் என்றொரு மதிப்பை இழந்து...

 இது ஒரு நீதி, ஒழுக்கமற்றவர்களின் முடிவை பறைசாற்றும் நீதி.





Sunday, July 2, 2017

அநீதியின் நிறம் சிவப்பு...!

                                                    பராகுடா 2. தழும்புகள்


ஒரு சிறந்த படைப்பை வாசிப்பது என்பது தரம் மிகுந்த ஒயினை துளித்துளியாய் ரசித்து ருசித்து பருகுவதைப் போன்றது.




ஸ்பெயினின் ஒரு அழகிய ஆலயத்தின் தோற்றம்.

கதை சொல்லலின் விரைவில் நகர்ந்த பக்கங்களை மீண்டும் மீண்டும் சுவைக்கும்போதுதான் புரிகிறது, எத்தனை மதுக்கோப்பைகளை கவனமின்றி கடந்து சென்றுள்ளேன் என்று. இந்த விழிப்பை எனக்கு உணர்த்திய என் உயிர் நண்பனுக்கு நன்றி சொல்கிறேன்.

கதையை வாசிக்கையில் எமிலியோவின் கடந்த காலம் பற்றிய கேள்வி எழுந்தது. தேடல் மற்றும் விவாதம் மூலமாக எமிலியோ லேடி ஸ்கூபோவின் பணியாள் என்பதையும் ,அவனுடய கடந்த காலம் கதையில் விவரிக்கப்படவில்லை என்பதையும் தெரிந்து கொண்டேன். பெண்ணுடைக்கு மாறிய பின் புதிய அவதாரம் அவன்.


காலம் தன் ஓட்டத்தில் நிகழ்த்தும் மாற்றங்கள் விசித்திரமானவை. அது எதிர் மனங்களை இணைக்கிறது, இணைத்தவற்றில் துரோகம் நிகழ்த்துகிறது. பாடுபட்டு செல்வம் தேடியவன் அதிலே தன்னை இழந்தது போல், தான் அடிமை செய்த அழகிடமே அடிமையாகிறான் வியாபாரி பெராங்கோ. அவன் யாசிப்பதோ அவளின் காதலை. அவளோ தன் துயரங்களின் காரணத்திடமே ஆறுதலை தேடுகிறாள்.

மிஸ்டர் பிளினின் கடந்த காலம் காட்சியாக விரிக்கப்படுகிறது. தழும்புகளை கீறி பெருகும் குருதியின் தோற்றம் போன்ற காலம் அது.
உயர்குடி நங்கையரின் மீது மோர்கம் போன்ற வல்லூறுகளின் மோகப்பார்வை படும்போது குடும்பங்களில் புயல் வீச துவங்குகிறது.
மிஸ்டர் ப்ளினும் மோர்கமும் மோதும் இறுதிக்காட்சிகளில் மரியாவின் வீட்டில் நடக்கும் இசை விருந்தின் பாடல் வரிகளும், உரையாடல்களும் மோர்கம் மற்றும் பிளினின் மோதலில் பொருந்தும் விதமாக பின்னிப் பினைந்து அமைக்கப்பட்டிருப்பதும், அவற்றை திறமையுடன் தமிழிலும் தொனிக்க வைத்திருப்பதும் பிரமிக்க வைக்கிறது. பாராட்டுக்கள்.

சில எழுத்துப் பிழைகளையும். ஸ்கூபோ, மோர்கம் போன்ற பெயர்களை வெவ்வேறாக உச்சரிப்பதையும் தவிர்த்திருக்கலாம்.
நான் ரசித்த இடங்கள்.

( தமிழ் ஸ்கான் 150 mb சைஸில் இருப்பதாலோ ரீடர் சரியில்லை என்பதாலோ லேப்டாப் ஓபன் ஆகாமல் க்ராஷ் ஆகிறது. எனவே ஆங்கில ஸ்கானையே இணைத்துள்ளேன். )

அவன் பார்வை எம்மேல் நிலைத்திருப்பதை நான் உணர விரும்புகிறேன்...



துடிப்பதற்கு இங்கு எதுவுமே இல்லை.

வேறெந்த அணியைப் போலுமல்லாது...

என் அவலட்சனத்தை நான் காட்சிப் பொருளாக்குகிறேன், நீயோ அதை மறைத்து வைத்திருக்கிறாய்.

அவனைப் போன்ற ஒரு இரைகொல்லிக்கு....

துப்பாக்கி உன்னை ஒரு கோழையாக்கும்.
வாள் உன் கவுரவத்தை காப்பாற்றும்.


அன்றுவரை அவன் ஒரு மன்மதனாக இருந்தான்...

...என் வாள்அவனை ஒரு அரக்கனாக வரைந்தது.

இங்கிருக்கும் அனைவரும் துருப்பிடித்துதான் இருக்கிறோம்.
ஒன்று துருப்பிடிக்கும் இல்லை அழுகும்.
இரண்டிற்கும் இடையில் நல்ல படைப்புகள் குறித்து சிந்தனையிலாழ்வதற்கே நமக்கு அவகாசம் இருக்கிறது....

அழாதே என் வாலிபா.

...வாழ்க்கை  சில சமயங்களில் அழகானதே.