Wednesday, August 2, 2017

காமிக்ஸ் என்பதும்.... காதல் என்பதும்....


எந்த ஒரு மொழிபெயர்ப்பையும் மூன்று விதங்களில் மொழிபெயர்க்கலாம் :

1. மூலத்திற்கு எந்த வித மரியாதையும் இல்லாது தன் இஷ்டத்திற்கு கதையை மொழிபெயர்ப்பது. இதுவே தமிழ் காமிக்ஸ் மொழிபெயர்ப்பின் வழக்கமான பாணி. 

2. மூலத்தை ஒட்டி, அந்த அர்த்தம் சரியாக வர வேண்டும் என்ற எண்ணத்தில் வரிக்கு வரி ஆங்கிலத்தில் இருப்பதை அப்படியே மொழிபெயர்ப்பது.

3. மூலத்தை ஒட்டி, அதன் அர்த்தம் சிதையாமல் அதே நேரம் அது மொழிபெயர்க்கப்படும் மொழிக்கு ஏற்றவாறு வசன நடையை அமைத்து அதை படிக்க எளிதாக மொழிபெயர்ப்பது.

இதில் இருப்பதிலேயே மூன்றாவது மிகவும் கடினமானது.  ஆனால் இதுவே சரியான மொழிபெயர்க்கும் முறை.


ஒரு விஷயத்தை பொறுப்பெடுத்து நாம் செய்ய நினைக்கும் போது அதை பலரும் பல விதங்களில் தங்கள் இஷ்டத்திற்கு மாற்றி அமைக்கவே முயற்சிப்பார்கள். அது மனித இயல்பு.
 அதை நடைமுறைப்படுத்த விட்டோம் என்றால் அது நம் தவறே அன்றி அவர்களுடையதல்ல.

 ஒரு மொழிபெயர்ப்பாளனின் பொறுப்பு இவ்விஷயங்களில் லெட்டரிங் செய்யும் ஆட்களின் பொறுப்பையும், ஆசையையும் விட பெரியது. ஒரு கதையை அதன் ஜீவனைக் கெடுக்காது கொடுக்க வேண்டியது மொழிபெயர்ப்பாளரின் பொறுப்பு. மற்றவர்களுடையதல்ல.

அந்த வகையில், உருப்படியான,  மொழிபெயர்ப்பை முன்னேற்றக் கூடிய ஆலோசனைகளை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள். மற்றவர்கள் மாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள் என்பதற்காக எல்லாம் கதையை  காவு கொடுக்க முடியாது.

 மொழிபெயர்ப்பை பொறுத்த வரையில் முடிந்த அளவுக்கு சரியாக செய்ய முயற்சி செய்யுங்கள். உருப்படியான ஆலோசனைகளை தேடிப் பெறுங்கள். ஆனால் இது போன்ற திணித்தல் விஷயங்களில் உறுதியாக இருங்கள். நீங்கள் இடம் கொடுத்தால் மற்றவர்கள் இடம் எடுக்கத் தான் செய்வார்கள்.

மொழிபெயர்ப்பில் அர்த்தத்தை சரியாக கொண்டு வர முயற்சி செய்யுங்கள். நம் சொந்த சரக்கை திணிக்க மொழிபெயர்ப்பு சரியான இடமல்ல.  நம் சொந்த சரக்கை காட்ட வேண்டும் என்றால் நாம் கதை அல்லது கவிதை எழுதிப் பழகலாம். விஜயனைப் போல அடுத்தவர் கதையில் கை வைக்கக் கூடாது.

 மொழிபெயர்ப்பு செய்வதில் ஆர்வம் குறைந்து விட்டது என்றால் சில காலம் கிடப்பில் போட்டு விட்டு பின்னர் ஆர்வம் இருக்கும் போது செய்யுங்கள்.  ஒரு குறிப்பிட்ட நாளுக்குள் முடிக்க வேண்டும் என்று அவசர இலக்கு வைத்துக் கொண்டு அதை மனதில் வைத்து செய்தால் அது உங்கள் ஆர்வத்தையும் திறனையும் பாதிக்கும்.

இவ்வளவு மெனக்கெட்டு இங்கேயுள்ள அரைகுறைப் புரிதல் உள்ள ஆட்களுக்கு செய்ய வேண்டுமா, பேசாமல் அரைகுறையாகவே செய்து விட்டுப் போகலாமே என்ற எண்ணம் சில நேரங்களில் வரலாம். அதில் தவறில்லை. நீங்கள்
 எவ்வளவு முயற்சி செய்து செய்தாலும் இங்கே பெரிதாக நன்றியோ பாராட்டோ கிடைக்கப் போவதில்லை. அதனால் அதை எதிர்பார்த்து எதையும் செய்ய வேண்டாம்.

 இந்த உறுதி, தரம் மற்றவர்களுக்கானதல்ல, நமக்கானது, நாம்  செய்யும் கதைக்கானது. பனிஷர் செய்த போது வசனங்களை தமிழுக்கு ஏற்ப மாற்றிய போது அதன் அர்த்தமோ, ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் குணமோ கெடாத வகையில் தான் செய்தேன். இவ்வாறு செய்வது எளிதல்ல. ஆனால் இது தான் தகுந்த முறை.

   ஒரு காமிக்ஸ்  குழுவில் வெண்டெட்டாவில் வெளியிட்ட கட்டுரைக்கு வந்த பதில்களை பார்த்தால் உங்களுக்கு புரியும் அவர்களின் மொழிபெயர்ப்பில் தரம் ஏன் இருப்பதில்லை என்று.
அந்தக் கூட்டத்தில் பத்தோடு பதினொன்றாக நாமும் இருக்க வேண்டாம். நம்மைப் பார்த்து மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்று சிலர் ஆசைப்படும் அளவுக்கு நம்முடைய மொழிபெயர்ப்பு இருக்க வேண்டும்.  இவ்வளவு முயற்சி எடுத்து செய்வதற்கான ஒரே பலன் உங்களைப் போல, மெர்லின் செய்தவரை போல சிலர் உண்மையை உணர்ந்து கொண்டு அதை நடைமுறைப்படுத்த முயற்சி செய்வதில் தான் இருக்கிறது.

 நமக்கு பிடித்தவற்றை பிறருக்கு பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில் தான் நாம் அனைவருமே இதை செய்கிறோம். இதில் தனிப்பட்ட முறையில் யாருக்கும் பெரிதாக எதுவும் கிடைத்துவிடப் போவதில்லை. ஆனால் இன்றைக்கு முன்னோடிகளான நாம் சரியாக செய்யாவிட்டால், பின்னர் தமிழ் வாசக மொழிபெயர்ப்பு இன்று இருக்கும் நிலையில் தான் இருக்கும். கொள்கை இல்லாது, குறிக்கோள் இல்லாது, காரணம் இல்லாது, தரம் இல்லாது கும்பல் சேர்த்து பொழுது போக்கிற்காக மொக்கை போடும் மோசமான மொழிபெயர்பிற்கு சரியான வரவேற்பில்லை என்று புலம்ப மட்டுமே உபயோகப்படும் ஒரு ஜந்துவாக.

 உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது மொழிபெயர்ப்பு செய்யுங்கள். ஆனால் தரத்தில் எந்த விதமான சமரசமும் செய்ய வேண்டாம். 

by illuminati blog tamil

V for vendetta தமிழில் அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சி.
https://www.mediafire.com/download/alvzwu8ft29a20x















Sunday, July 23, 2017

கொம்புக்குதிரை... கிராஃபிக் நாவல்களின் சிம்ம சொப்பனம்...!







அநேகமாக தமிழில் ஸ்கான்லேஷன் செய்யப்பட்ட முதல் காமிக்ஸ் இதுதான் என்று நம்புகிறேன்.  அல்லது சிக்கன் வித் ப்ளம்ஸ், ஜானி ப்ரீக்   என்று வேறு கதையாகவும் இருக்கலாம்.

கிரஃபிக் நாவல் என்றாலே டவுசரை நனைப்பவர்களுக்கு , இத்தொடர் ஒரு சிம்ம சொப்பனம்,,,

சில ஆண்டுகள் முன்பே கொம்புக்குதிரையின் அனைத்துப் பாகங்களையும் டவுன்லோட் செய்து வைத்திருந்த போதும் , அதை வாசிக்க ஆரம்பித்த போதெல்லாம், வேறு கதைகள் வாசிக்கக் கிடைக்கும் போது , கொம்புக்குதிரையை அந்தரத்தில்  விட்டு விடுவது எம்முடைய வழக்கமாக இருந்தது.

ஆக்ஷன், அதிரடி என்ற விறுவிறுப்பான கதைகளுக்கு பழகிப் போன என்னால்  கொம்புக்குதிரையின்  ஆழ்ந்த நுட்பமான படைப்புக்கு ஈடு கொடுக்க முடியவில்லை  என்பதை ஒப்புக்கொள்ள எனக்கு தயக்கமேதும் இல்லை.

இப்போதும் மேலோட்டமான புரிதல்தான் உள்ளது.  கதையின் நுனுக்கமான  விபரங்கள் புரியவில்லைதான் என்ற போதும் ,  மீள் மீள் வாசிப்புகள்  என்றேனும் ஒரு தெளிவான புரிதலை  தரும் என்று நம்புகிறேன்.

இத்தனை கடினமான படைப்பை  தமிழ் வாசகர்களுக்காக தன் நேரம், உழைப்பு, பொருள் என பிரதி பலன் எதிர்பாராது செலவழித்து மொழிபெயர்த்து அளித்த அன்பு நெஞ்சத்தை எவ்வளவு பாராட்டினாலும்  என் நெஞ்சம்  திருப்தி கொள்ளாது.

கடுமையான இந்த முயற்சியை எடுத்துச்சொல்ல சரியான உவமைகள் இல்லை. ஆனாலும்... எம்மால் முடிந்தது................


நன்றிகள் சார்!

































Sunday, July 16, 2017

கதைகள் முடிந்து விடும் கேள்விகள் முடிவதில்லை...!



பராகுடாவின் ஆறு பாகங்களையும் மீள் வாசித்த இந்நாட்களில்  ஏகப்பட்ட கதாபாத்திரங்களிடையே உலவிக் கொண்டிருந்தேன்.  ஒவ்வொருவரிடமும்தான் எத்தனை அனுபவங்கள்...

சிறந்த படைப்புகள் அதன்  உண்மையான தரத்துடன் தமிழ் வாசகனை அடைய வேண்டும், தான் அனுபவித்த ஒரு அற்புத வாசிப்பு அனுபவத்தை சக வாசகனும் பெற வேன்டும். என்ற உயர்ந்த நோக்கத்தில்  தங்கள் நேரங்களையும் உழைப்பையும் செல்வத்தையும் செலவழித்து ஆறு பாகங்களையும் மிகவும் தரமாக மொழிபெயர்த்து,  லாப நோக்கமின்றி அன்பளிப்பாக தமிழ் வாசகர்களுக்கு வழங்கியவர்களின் அன்பிற்கு நன்றி சொல்கிறேன்.

கதையில் சில கேள்விகள் பதிலின்றி நிற்கின்றன, அவை  விடை காணப்படாமலே போகக்கூடும். அல்லது ''இரத்தப்படலம்'' கிளைக்கதைகள் போல சில பாகங்கள் தொடரவும் வாய்ப்புள்ளது.


சிகப்பு ராஜாளி, நேர்வீச்சு ஜீன் இவர்களின் கடந்த கால கதை என்ன?


மூடுபனியை (புகார்) பயன்படுத்தி எதிரியின் கலத்தை நொறுக்கும் பிளாக்டாக்கின் அபார யுக்தி.


இருவரில் ஒருவர்தான் வாழ முடியும் எனும் அளவுக்கு  ஆழ பதிந்த வன்மம் வாள்மதியின் முடிவுக்கான காரணமாகிறது.


யார் இந்த வாள்மதி?


 என்ன ஒரு திறமைசாலி! டவுசர் நழுவுவது இவனது வாடிக்கை.





எஸ்டபானின் கதை என்ன?








அரும்பொக்கிஷங்கள் ஆழ் மர்மங்களின் சொத்து!


வெண்துறையின் கட்டுகளிலிருந்து ராஃபி விடுபட்டாலும் வேறொன்று அவனை பினைக்கிறது.

எமிலியோ