Saturday, September 10, 2022

The kid!

 



ஆர்தர் ரிம்பாட்டின் கவிதைகளில் ஆர்வமுள்ள இளைஞனான எமிலி டர்னர், அவனது தோழி லாராவுடன் இணைந்து வங்கிக் கொள்ளையில்  ஈடுபட்டபோது நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில்  லாரா கொல்லப்படுகிறாள்.


அதன் பின்னர் ஒன்பது கொலைகளுக்கான பழியுடன் வாழ்வில் பிடிப்பின்றி அலையும் எமிலியை பிடிக்க மேலிடத்தால் ட்ரெண்ட் அனுப்பப்படுகிறார்.


எமிலியின் பாதை எளிதாக கண்டு பிடிக்கக்கூடியதாகவும் உயிர்ப்பலிகளையும் ரசிகர்களையும் உருவாக்குவதாகவும் முரண்பாடாக உள்ளது. ட்ரெண்ட் அவனைக் கண்டு பிடித்துக் கைது செய்கிறார்.


ரிம்பாட்டின் கவிதைகளில் மூழ்கியிருக்கும் எமிழியின் கேள்விகள் தனக்கு விதிக்கப்பட இருக்கும் தண்டனை பற்றியதாக உள்ளது.


அப்போது சிறையிலிருந்து தப்பிய சில கைதிகள் இவர்களை கொள்ளையடிக்க முயல்கின்றனர்.


 மின்னல் வேக துப்பாக்கிச் சண்டையில் அவர்களை தீர்த்துக்கட்டும் எமிலி, ட்ரெண்டை மயக்கமடையச் செய்து விட்டு தான் கடைசியாக சில இளைஞர்களைக் கொன்ற கிராமத்துக்குத் திரும்பிச் செல்கிறான். ஒரு முடிவோடு...




இங்கே கிளிக்: ஆர்தர் ரிம்பாட்




*******++++++******+++++******++++++****

Monday, September 5, 2022

2,அபாயத்தை அழைக்காதே!

 



மர்மக் கொலைஞனான ஜாக் தி ரிப்பரின் ஆவியை மீடியம் (ஆவிகளுடன் பேசுதல் ) மூலம் அழைக்கிறார் ஒரு பெண்மனி, தொடர்ந்து அந்த மீடிய நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவரும் ஜாக் தி ரிப்பரால் குரூரமாகக்   கொல்லப்படுகிறார்கள். 

புதிரான இந்த வழக்கை அமானுஷ்ய நிகழ்வுகளை ஆராயும் நிபுணர் டைலன்டாக் விசாரிக்கத் துவங்கினார்.


விறுவிறுப்பான திகில் த்ரில்லர்.

வருங்கால மனைவி 😂


தன் மனைவியுடன் பேசுவதற்கு வீட்டுக்கு போன் செய்த ஒரு கனவானைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

தொலைபேசியை எடுத்த பணியாளர் கூறினார்: "மன்னியுங்கள் ஐயா! உங்கள் மனைவி வெறொரு ஆணுடன் படுக்கையில் இருக்கிறார்."

அதைக்கேட்ட கனவான் பணியாளரிடம் கூறினார்: "துப்பாக்கியை எடுத்து இருவரையும் சுட்டுக் கொன்று விடு." 

சிறிது நேரம் கழித்து  தொலைபேசியில் பணியாளர் கனவானிடம் கூறினார்:  "நீங்கள் கூறியபடி செய்து விட்டேன் ஐயா! "

நல்லது!  துப்பாக்கியை என்ன செய்தாய்?

அதை நீச்சல்  குளத்தில் எறிந்து விட்டேன் ஐயா!

நீச்சல் குளமா? நம் வீட்டில் நீச்சல் குளமே கிடையாதே!
கொஞ்சம் பொறு,  நான் எந்த எண்ணுக்கு டயல் செய்தேன்? 



#ஸாரி ராங் நம்பர் 😂






கிழிக்கும் ஜேக் (ஜாக் த ரிப்பர், ஆங்கிலம்: Jack the Ripper) 1888 இல், கிழக்கு லண்டனில் ஒயிட்சேபல் வட்டத்தில் பல கோரமான கொலைகளை செய்த மர்ம நபருக்கு வழங்கப்படும் பெயராகும். கொலையுண்டவர்கள் விபசாரிகள். பல வருடங்களாக மிக தீவிர போலீஸ் துப்பு தேடியும், கொலைகாரன் யார் எனக் கண்டு பிடிக்கப்படவில்லை. அதனால் இன்றுவரை, புத்தகம், சினிமா, தொலைகாட்சி மூலமாக யார் அவன் என பல வதந்திகள் பரவி வருகின்றன. 'கிழிப்பர் இயல்' என விளையாட்டாக புது வகையே ஆரம்பித்தது.


*****

Saturday, August 27, 2022

பொன்னிற தேவதை!

 




அனடோலியாவை நோக்கி கப்பலில் பணியாட்களாக பயணத்தை துவக்கிய மார்க் சொர்னேசனும் கிம்மும் கப்பல் கேப்டனின் மனைவியின் விஷம விளையாட்டால் நடுக்கடலில் கப்பலில் இருந்து வெளியேற நேரிடுகிறது.

கடற்கரை ஓரமாகவே  பயணித்த அவர்கள் ஒரு சிறு நகரை அடைகிறார்கள். அங்கே டிரிஸின் தோழியான அலெக்ஸா கோமரோவா கைது செய்யப்பட்டுள்ளதை காணும் மார்க், அவள் பறக்கும் விலங்கு மூலம் தப்பிச்செல்ல உதவி அந்த முயற்சியில் காயம்பட்ட அவளை பராமரிக்கிறான்.

ஆனால்
சில நாட்களில் அவர்களை தேடி வரும் பாதர் லூமிஸிடம் கைதியாக சிக்கிக்கொள்ளும் மார்க், அவரிடம் கிம்மும் கைதியாக இருப்பதைக் காண்கிறான்.

 விண்கப்பலில் அவர்களுடைய பயணம் மீண்டும்  துவங்கியது, அனடோலியாவின் சிறைச்சாலையை நோக்கி...


இது ஒரு விசித்திர மீனினம். அபாயமற்றது.சில சமயங்களில் படகுகளை நாள் முழுவதும் பின்தொடரும்.


விந்தையான தாவரங்கள்.

அருமையான கலங்கரை விளக்க காட்சி!




பிரிவுகள் எப்போதும் வருத்தம் தரக்கூடியது, ஆனால் வாழ்க்கை அவ்வாறுதான் நகருகிறது.




உருவத்தை பிரதி எடுக்கும்
 மணல் ஆக்டோபஸின் தாக்குதல்.


இன்னும் ஒரு விந்தையான நிகழ்வு!
இதெல்லாம் எதற்கு?
நாங்கள் என்றேனும் உங்களை தொடர்பு கொண்டு உங்களைப் புரிந்து கொள்ள முடியுமா?


CARAVELLE ( படகு) எனும் பெயருடைய விலங்கு.
பறக்கும் என்ஜின்களுக்குத் தேவையான ஹீலியம் என்ற ஒளி வாயுவை விலங்குகளின் உணவுப் பையில் இருந்து உற்பத்தி செய்தனர்.










Sunday, August 14, 2022

உயர உயரப் பறந்து வா!

 


நேரான பாதையில் கோணலாக  மெதுவாக நடக்கும் இயல்புடைய 'மெதுவேகம்' மனோவசியம் செய்யும் மைக்மாக் என்ற காகத்தின் பிடியில் சிக்கிக்கொள்கிறார். 

எப்போதும் அமர்ந்த இடத்தில் அமர்ந்து தியானம் போல புகை பிடிக்கும் இயல்புடைய 'குழம்புக்கண்ணார்'  
இதை தரிசனமாக உணர்ந்து யகரியை எச்சரித்து மெதுவேகத்தை தேட அனுப்புகிறார்.

மெதுவேகத்தை ஆட்கொண்டு தன் விருப்பப்படி ஆட்டிப்படைக்கும் மைக்மாக்கை பார்த்து மற்ற காகங்கள் அதுபோல் செய்ய விரும்புகின்றன.

அவற்றின் பார்வையில் மெதுவேகத்தை தேடி வரும் யகரியும் வானவில்லும் தென்படவே, அவர்கள் மீது மனோவசியத்தை பரீட்சித்துப் பார்க்க முயல்கின்றன.

அப்போது அதிரடியாக அங்கே வரும் பெரும் கழுகார் காகங்களை கண்டித்து விட்டு, மெதுவேகம் அபாயத்தில் இருப்பதால் அவரை காப்பாற்ற விரைய சொல்கிறார்.


இதற்கிடையே மைக்மாக் மெதுவேகத்தை பறக்க வைக்கும் முயற்சியில் இறங்குகிறது. அப்போது அங்கு வரும் காகங்களும் யகரியும் மைக்மாக்கை தடுத்து நிறுத்துகின்றனர்.


அவர்களுடைய வழக்கு அனுபவமிக்க நீதி அலகாரிடம் செல்கிறது.

மைக்மாக், தான் தங்களுடைய மூதாதையரைப்போல அரிய செயல்களை செய்ய முயற்சிப்பதாக கூறுகிறது.

ஆனால் 'தன் சுயநலத்துக்காக மற்றொரு நபர் மீது ஆதிக்கம் செலுத்துவது தவறு' என தீர்ப்பளிக்கும் அனுபவமிக்க நீதி அலகார், மைக்மாக்  'மெதுவேகத்தின் கூடார உச்சியில் அடுத்த நிலவு வரை கற்சிலை போல அமர்ந்திருக்க வேண்டும்'  என தண்டனையும் விதிக்கிறார்.

இதற்கிடையே சுயநினைவு வரப்பெற்ற மெதுவேகம் தனது கூடாரத்துக்குத் திரும்பினார். அவரைப்பார்த்த குழம்புக்கண்ணார் ' இனி தான் நிம்மதியாக உறங்க முடியும் என மகிழ்ந்தார்.


மெதுவேக நடையாரின் பாதை நேரானதாக அமைவதில்லை. 
விசித்திரமான மனிதர்!

குழம்புக் கண்ணாரும் அப்படியானவர்தான்,  அவர் தன் கால்களை ஒருபோதும் வலுப்படுத்துவதில்லை!



ஒவ்வொரு நாளும், அவர்கள் ஒரு புதிய விளையாட்டைக் கண்டுபிடிப்பார்கள்.  என்ன அழகான வாழ்க்கை!







கும்புக்கண்ணார் நடப்பதையும் பார்த்து விட்டோம்.😄



மெதுவேகத்தின் பயணப்பாதை விசித்திரமானது, அவரது தடத்தை தொடர முயன்ற இடிக்குட்டி அயர்ந்து போனதில் வியப்பில்லை.😂



Sunday, July 24, 2022

பனியில் புதைந்த பயங்கரம்!

 



குளிர்காலத்தின் மத்தியில் தங்கள் இனத்தின் உணவு சேமிப்பை திருடிய இராட்சஸ வால்வரினை நண்பர்களின் உதவியுடன் வீழ்த்தினான் யகரி.


 அதிக சுவாரஸ்யமோ, புது விலங்குகளின் அறிமுகமோ இல்லாத கதை.!😊





Friday, July 15, 2022

முதல் நட்சத்திரம்!

 


நிலவற்ற ஓர் இரவில் யகரியின் கிராமத்தினரின் குதிரைகள் மற்றொரு இனத்தினால்  திருடப்படுகின்றன. இயற்கையின் சக்திகளைப் பயன்படுத்தி யகரியின் கிராமத்தினர்  அவற்றை மீட்டு வருகின்றர்.

நான் இதுவரை வாசித்த யகரி கதைகளில் மிக விறுவிறுப்பானது இதுவே. மிக அருமையான வாசிப்பு அனுபவத்தை தந்த கதை இது.

முதல் நட்சத்திரம் உதிக்கும் வேளையில்
துவங்கிய அதிரடி ஆக்ஷன், குதிரைகள் மீட்கப்பட்டு கிராமத்துக்குத் திரும்பும் அதிகாலை வரை துடிதுடிப்பாக. சம்பவங்கள் நகரும். 


செவ்விந்திய மாந்த்ரீகரின் பட்டுப்போன மரத்துடனான உரையாடல் அந்த எளிய மனிதர்களின் இயற்கையை நேசிக்கும் இயல்பை காட்சிப்படுத்துகிறது.

 அப்படியான மனிதர்கள் அரிதாகி விட்டதே பூமியின் இன்றைய வறண்ட தோற்றத்தின் காரணம். 

நிழலும் கனியும் தரும் மரங்கள் மறைய மறைய,  அவற்றை சார்ந்திருக்கும் எண்ணற்றப் பறவைகளும் விலங்குகளும் தம் வாழிடமும் உணவு ஆதாரமும் இழந்து அழிவிற்குத் தள்ளப்படுகின்றன.



Wakan tanka

 கிரேட் ஸ்பிரிட்  என்பது உயிர் சக்தியின் கருத்தாக்கம், ஒரு உயர்நிலை அல்லது கடவுள்.
 குறிப்பாக லகோட்டாவில் வாக்கன் டாங்கா என்று அறியப்படுகிறது,[சரிபார்க்க மேற்கோள் தேவை]
 அல்கோன்குயனில் கிட்சே மனிடூ  மற்றும் பிற குறிப்பிட்ட பெயர்களால் அமெரிக்காவின் பூர்வீக  மற்றும் முதல் நாடுகளின் கலாச்சாரங்கள். ஐக்கிய மாகாணங்கள் மற்றும்  பழங்குடி  கலாச்சாரங்களுக்கு பொதுவான, அனைத்து கலாச்சாரங்கள் பகிர்ந்து, அதே வழியில் விளக்கப்படுகிறது. 

 லகோடா செயல்பாட்டாளர் ரஸ்ஸல் மீன்ஸின் கூற்றுப்படி, வக்கன் டாங்காவின்  துல்லியமான மொழிபெயர்ப்பு "பெரும் மர்மம்."

 கிரேட் ஸ்பிரிட் மற்றும் கடவுள் என்ற கிறிஸ்தவக் கருத்துக்கு இடையே உள்ள ஒற்றுமைகள் காரணமாக, காலனித்துவ ஐரோப்பிய மிஷனரிகள், பூர்வீக அமெரிக்கர்களை கிறிஸ்துவத்திற்கு  அறிமுகப்படுத்தி மதமாற்றத்தை ஊக்குவிப்பதற்கான வழிமுறையாக, இதுபோன்ற  நம்பிக்கைகளை அடிக்கடி பயன்படுத்தினர்.




FLYING SQUIRREL


பறக்கும் அணில்கள் (விஞ்ஞான ரீதியாக Pteromyini அல்லது Petauristini என அழைக்கப்படுகிறது) Sciuridae குடும்பத்தில் 50 வகை அணில் பழங்குடி  ஆகும்.  
பறக்கும் அணில்கள் என பெயர் இருந்தாலும், பறவைகள் போல  பறக்கும் திறன் கொண்டவை அல்ல, ஆனால் அவை  ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு சறுக்க முடியும், இது ஒரு உரோம பாராசூட் போன்ற தோல் சவ்வு.  மணிக்கட்டு முதல் கணுக்கால் வரை.  அவற்றின் நீண்ட வால்கள் அவை சறுக்கும்போது நிலைத்தன்மையையும் அளிக்கின்றன.  உடற்கூறியல் ரீதியாக அவை மற்ற அணில்களுடன் மிகவும் ஒத்தவை, அவற்றின் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு பல தழுவல்கள் உள்ளன;  அவர்களின் மூட்டு எலும்புகள் நீளமாகவும், கை எலும்புகள், கால் எலும்புகள் மற்றும் தூர முதுகெலும்புகள் குறுகியதாகவும் இருக்கும்.  பறக்கும் அணில்கள் தங்கள் கைகால் மற்றும் வால் மூலம் தங்கள் சறுக்கு பாதையை இயக்கவும் கட்டுப்பாட்டை செலுத்தவும் முடியும்.



மூலக்கூறு ஆய்வுகள், பறக்கும் அணில்கள் மோனோபிலெடிக்  மற்றும் 18-20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவை என்பதைக் காட்டுகின்றன.  பாராசிடெல்லஸ் இனமானது, ஒலிகோசீன் சகாப்தத்தின் பிற்பகுதியில் இருந்த பறக்கும் அணிலின் ஆரம்பகால பரம்பரையாகும். பெரும்பாலானவை இரவு நேர மற்றும் சர்வ உண்ணிகள், பழங்கள், விதைகள், மொட்டுகள், பூக்கள், பூச்சிகள், காஸ்ட்ரோபாட்கள், சிலந்திகள், பூஞ்சைகள், பறவையின் முட்டைகள் மற்றும் மரச் சாற்றை உண்கின்றன.  குஞ்சுகள் ஒரு கூட்டில்  அவற்றின் தாயால் பராமரிக்கப்படுகின்றன மற்றும் ஐந்து வாரங்களுக்குள் சறுக்கும் திறன்களைப் பயிற்சி செய்ய முடியும், இதனால் பத்து வாரங்களுக்குள் அவை கூட்டை விட்டு வெளியேறத் தயாராகின்றன.

 சில சிறைபிடிக்கப்பட்ட தென்பகுதி பறக்கும் அணில்கள் சிறிய வீட்டுச் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன, இது ஒரு வகை "பாக்கெட் செல்லப் பிராணி"


Skunk

இங்கே கிளிக்:






Black water (seneca oil)

* வட அமெரிக்காவில், எண்ணெய் (பெட்ரோலியம்) முதலில் 'செனெகா ஆயில்' என்று அறியப்பட்டது. மருத்துவப்பயன்பாட்டிலும் இருந்தது.


Lynx

இங்கே கிளிக்:



 

                  *****❤️❤️❤️❤️❤️*****




கல்வி கொடுத்த வள்ளல்


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா ...

அரசியல் நாகரீகத்தின் ஆண்டவனே - பல
அணைகளைக்கட்டி மாண்டவனே
எதிரியும் புகழ்ந்த நல்லவனே - உம்மை
எடுத்ததால் எமனும் கெட்டவனே ...

கல்விக்கண்ணை திறந்துவைத்து - நீர்
கண்மூடிப் போனதென்ன
காணிநிலம் கூடயின்றி - நீர்
கடைசிவரை வாழ்ந்ததென்ன ...

ஆண்டவனே வந்தாலும் - உம்போல்
ஆளமுடியுமா தெரியலியே
மாண்டவனே உமையெழுப்பி - மீண்டும்
ஆளச்சொல்ல வழியில்லையே ...

பெரும்தலைவா கர்மவீரா - உமை
காணாதது என்பாவம்
பிறந்தநாளில் கூட வாழ்த்தாவிட்டால் - பிடிக்கும்
என் இனத்திற்கே பெரும்சாபம் ...

இவ்வுலகம் இருக்கும்வரை - ஐயா
உம் உருவம் நிலைத்துநிற்கும்
நீர்போட்ட கல்விப்பிச்சையில் - தான்யா
என்இனமே பிழைத்துநிற்கும் ...

என்றும் எழுத்தாணி முனையில் ...
கவிஞர்.செந்தமிழ் தாசன் ( பாடலாசிரியர் )

Saturday, July 9, 2022

தங்கக்கல்லறை!

 

கனடாவின் பனிப்பகுதிகளில் ஒரு கொலைக் குற்றவாளியைத் தேடிச் செல்கிறார் சார்ஜெண்ட் ட்ரெண்ட்.
 வழியில் சந்திக்கும் பெண்மணி ஒருத்தியும் அதே நபரைத் தேடுவதை அறிகிறார். இயற்கை காட்சிகளை விருந்தாக்கியவாறு நீளும் பயணத்தில்அவர்கள் தேடி வந்த நபரை கண்டு பிடித்தனர்,  ஆனால் அவன் "அவன்" இல்லை!  

சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவம் தந்த கதை! ****
























*****-------******

Monday, July 4, 2022

இருளற்ற இரவும், ஒளியற்ற பகலும்...

 






யகரியும் வானவில்லும் விளையாடிக்கொண்டிருந்த போது அவர்ளுடைய கூடாரம் பறக்கத்துவங்கி இருளாத இரவும், வெளிச்சமற்ற பகலும் கொண்ட உலகின் உச்சியான ஆர்டிக் பகுதிக்குக் கொண்டு சென்றது. அங்கு அவர்கள் மேலும் பல விலங்குகளைப்பற்றி அறிந்து கொண்டனர்.





அன்னை பூமி பல்வேறு உயிரினங்களின் பரந்த எண்ணிக்கையைப் பெற்றெடுத்தது.  உங்கள் விலங்கு சகோதரர்களில் பலரை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறீர்கள் ...

 ...ஆனால் இன்னும் எண்ணிலடங்கா  விலங்குகள்,  சில விசித்திரமானவைகள் இந்தப்பூமியில் வாழ்கின்றன ...




Arctic



இங்கே கிளிக்: Arctic
Lemming


லெம்மிங் என்பது தூந்திரப் பிரதேசங்களில் வாழும் எலி வகையைச் சேர்ந்த உயிரினம் ஆகும். இவற்றின் தோல் கோடைகாலத்தில் பழுப்பு நிறமாகவும் குளிர் காலத்தில் பனிக்கட்டி போல வெண்மையானதாக மாறி விடும். தன்னை வேட்டையாடும் பனி ஆந்தை மற்றும் பிற விலங்குளிடமிருந்து தப்பிக்க இது மிகவும் உதவியாக இருக்கும். விக்கிப்பீடியா

இங்கே கிளிக்:






Snowy owl

பனி ஆந்தை பனிபோன்ற வெண்ணிற இறகுகளைக் கொண்ட பனிமிகுந்த பகுதிகளில் வாழும் ஒரு வகை ஆந்தை. இந்த ஆந்தைகள் ஆர்க்டிக் பகுதியில் வாழ்கின்றன. இவை ஆர்க்டிக் ஆந்தை, வெண் பேராந்தை எனவும் அழைக்கப்படுகின்றன. மிதமிஞ்சிய பனியினைச் சமாளிக்க இவற்றின் கால்களிலும் இறகுகள் உள்ளன. இவை எலிகளையும் ஆர்க்டிக் முயல்களையும் வேட்டையாடி உண்கின்றன. விக்கிப்பீடியா

இங்கே கிளிக்:





Caribou

துருவ மான் அல்லது பனி மான் (Reindeer / Rangifer tarandus) எனப்படுவது ஒரு மான் இனமாகும். இவை வட அமெரிக்காவில் கரீபு என்றும் அழைக்கப்படுகின்றன. இவை துருவப் பகுதிகளில் காணப்படுகின்றன. இவை கூட்டமாக வாழக்கூடியவை ஆகும்.

இங்கே கிளிக் :





Musk oxen

கத்தூரி எருது (Ovibos moschatus) என்பது ஆர்க்டிக் பகுதியில் காணப்படும் ஒரு பாலூட்டியாகும்.[2] இது இதன் தடிமனான தோலுக்காக அறியப்படுகிறது. இது இனுக்ரிருற் மொழியில் உமிங்மக் என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள் தாடியுள்ள ஒன்று என்பதாகும்.[3] இவை கிரீன்லாந்து, கனடாவின் வடமேற்கு நிலப் பகுதிகளின் மற்றும் நூனவுட்டின் ஆர்க்டிக் பகுதிகள் ஆகியவற்றில் காணப்படுகிறது.[4] இவை சிறிய எண்ணிக்கையில் அலாஸ்கா, கனடாவின் யூக்கான், ஸ்காண்டிநேவியா மற்றும் சைபீரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 


இங்கே கிளிக்:





White wolf


ஆர்க்டிக் ஓநாய் (Arctic wolfCanis lupus arctos) பனி நிறைந்த ஆர்க்டிக் பகுதியில் வாழும் விலங்கினம் ஆகும். இவை துருவ ஓநாய்கள் (Polar Wolf), அல்லது வெள்ளை ஓநாய்கள் (White Wolf) எனவும் அழைக்கப்படுகின்றன. இவை பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை ஆகும்.


இங்கே கிளிக்: