தமிழுக்கு மொழிபெயர்க்கப்படும் காமிக்ஸ் கதைகள் பெரும்பாலும் அதன் அசல் சுவையை இழந்தே இங்கு வந்தடைகின்றன. பல ஆண்டுகள் முன் படித்த ஜில் ஜோர்டான் கதை ஒன்றின் ஆங்கிலப்பதிப்பு சமீபத்தில் வாசிக்கக் கிடைத்தது. அந்நாளில் மூன்று பதிவுகளின் வாயிலாக "கனவுகளின் காதலர்" கேட்டிருந்த கேள்விகளுக்கான விடைகளை தேட முற்பட்டுள்ளேன் !
பொதுவாக அனைத்து துப்பறியும் கதைகளும் கதையின் முடிவில் தன்னிலுள்ள மர்மங்களை வாசகனுக்கு தெளிவு படுத்தி விடும்.
ஆனால் கதை முடிந்த பின்னும் மர்மங்களைத் தேட வைத்த கதை இது ஒன்றாகத்தான் இருக்கும்!
வசனங்களை நான் புரிந்து கொண்ட அர்த்தங்களில் ஏதேனும் தவறுகள் இருந்தால் எடுத்துக் கூறி விளக்க வேண்டுகிறேன்!
அலை செய்த கொலை !
இது மொட்டைக் கடுதாசியா இருக்கேன்னு நான் அப்பவே யோசிச்சிருக்கனும்!
இதை எழுதுனவன் மட்டும் என் கையில சிக்குனா...
என்னை இளிச்சவாயனா நினைச்சுருக்கானா...
( நன்றி : நண்பருக்கு )
தமாஷ் பண்றதை எல்லாம் பெருசு படுத்த மாட்டேன், ஆனா இது வரம்பு மீறுனதா இருக்கு !
இல்லை! அது ஒரு வெட்கக் கேடான விஷயம். உன் ஓட்டல் மூட்டைப் பூச்சிகள் மீதி வைச்சதை மீன்கள் காலி பண்ணி விட்டன! சரி! சொல்லு கேட்கிறேன்!
பாரீஸை சேர்ந்த நிகிடா ஜிக்ஸ் எனும் அரும்பொருள் சேகரிப்பாளர் இங்குள்ள "டெவில் ஸ்ட்ரெய்ட்"டில்* செல்லும் போது அலையில் சிக்கி இறந்து விட்டார் சார்! ஆமாம், கார் காலியாக உள்ளது!... அப்படியில்லை, பழுது ஏற்பட்டிருக்கலாம்...
( *Devil's strait : எமனின் பாதை / பரலோகப் பாதை எனப் பொருள் படும் !
(பெட்ரோல் தீர்ந்து போயிருக்கிறது)
கதையின் முக்கியமான சஸ்பென்ஸ் அம்போ!
சில நாட்களுக்குப் பிறகு, ஜில் ஜோர்டான் துப்பறியும் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில்.. .
இந்தப் படத்தில் எழுத்துகளை ஏன் கலர் பூசி மறைச்சுருக்கு ?
அவருடைய உடல் இன்னும் கண்டு பிடிக்கப் படவில்லையா ?
இல்லை! போலீஸாரிடம் பேசினேன், தீவில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில், பாதையின்
நடுப் பகுதியில் சம்பவம் நிகழ்ந்திருப்பதால் நம்பிக்கையில்லை என்கிறார்கள்.
பாஸ்! ஜாக்கிரதை!
இங்கே பொறி* வாசனை அடிக்கிறதை உணர முடியுது!
(*கண்ணி / சதிவலை )
பொறியின் வாசனை பூஞ்சை போல இருக்குமெனில், ஆம்! இங்கு பொறி வாசனை அடிக்கிறதுதான்!
( இந்த வசனத்தில் ஒரு மென் நகைச்சுவை உள்ளது.
லிபெல் உள்ளுனர்வின் உந்துதலால், இங்கு பொறி வாசம் அடிப்பதாக சொல்ல, அந்த இடத்தில் அடிக்கும் தாங்க முடியாத பூஞ்சை வாடையை ( துர்நாற்றத்தை ) நுட்பமாக கிண்டல் செய்கிறார் ஜில் ஜோர்டான் .)
(நன்றி : நண்பருக்கு)
அது மிளகாய்த்தூள் இல்லை!
மிளகுத்தூள்!
அப்டேட்... அப்டேட்... அப்டேட்...
5-4-2020
கியர் போட்ட கண்ணாளா!
""ஆனால், பக்கம் 237ல் கட்டம் 11ல் ஹென்ரிக்கு விளக்கம் தரும் ஜில்.... பின்னர் காரை கியரில் போட்டு ஓடச் செய்திருக்கிறான் என்கிறார். நல்லது. அவர் யார் காரை என்ன கியர் போட்டு எங்கு ஓடச் செய்தார் என்பதை எனக்கு தயை கூர்ந்து யாரேனும் சொல்ல இயலுமா?! பாரிஸ், லண்டன், லாப்ரான் என ஓடி ஓடி விசாரணை செய்து விட்டு, குற்றவாளி எவ்வாறு குற்றங்களை நிகழ்த்தி இருப்பான் என்பதையும் கண்டுபிடித்து விட்டு தன் வாடிக்கையாளரிடம் துப்பறிவாளர் ஜில் ஜோர்டான் தரும் அந்த விளக்கம் ஒன்றுதான் உண்மையில் ஐரோப்பிய காமிக்ஸ்களின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்றாக கருதக்கூடிய ஜில் ஜோர்டான் பாத்திரத்தை தமிழில் கொன்று போட்டிருக்கும் அற்புதத்தை நிகழ்த்தி இருக்கிறது. தமிழில் விடிய விடிய ராமன் கதை விடிந்தால் ராமன் சீதைக்கு சித்தப்பா என்பார்கள் அல்லவா அதற்கு இதைவிட சிறப்பான உதாரணத்தை சமீபகாலத்தில் நான் கண்டிருக்கவில்லை!
அப்படியானால் அந்த உரையாடல் குமிழியில் இருக்க வேண்டிய வசனம் என்ன? உங்களிற்கு காமிக்ஸ் என்பதில் உண்மையில் ஆர்வமும், ப்ரியமும் இருந்தால் அதற்கான பதிலை நீங்களே தேடிக் கண்டடைந்து கொள்வீர்கள். ""
நண்பர் ஒருவரிடம் இது குறித்து விவாதித்த போது தெளிவான விளக்கங்கள் கொடுத்து உதவினார்!
அவர் பகிர்ந்து கொண்டதை உங்களுக்கும் அறிய தருகிறேன்!
ENGRENAGE எனும் பிரெஞ்சு வார்த்தை சூழ்நிலைக்கேற்ப பல அர்த்தங்கள் தரக்கூடியது.
பொதுவாக அவ் வார்த்தை "பொறிகளின் இயக்கம்" என பொருள் படும்.
அதே வார்த்தை மோட்டார் வாகனங்களுக்கு "கியர்" போடுதல் என்றும் பொருள் தரக் கூடியது.
இந்தக் கதையின் அந்த குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில்,
"அவன் ஆரம்பித்து வைத்த சதிகளின் ஓட்டத்தில் அவனே சிக்கிக் கொண்டான்" என்பதே பொருள்படும்.
தமிழில் பொருத்தமாக "அவன் விரித்த வலையில் அவனே மாட்டிக் கொண்டான்" என அமைக்கலாம்.
ஆங்கிலத்தில் இக்கதையை வாசித்தவர்கள் இதன் அர்த்தத்தை சரிவர புரிந்து கொண்டிருப்பார்கள்...
*******
தெளிவு படுத்திய நண்பருக்கு இதய நன்றிகள்!
வணக்கம்!