Friday, November 25, 2022

5,கொலைநகரம்.

 







லண்டன் நகரெங்கும் விசித்திரமான கொலைச் சம்பவங்கள் நடக்கின்றன.
டைலன்டாக்கின் சந்தேகம் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களின் மீது திரும்புகிறது. இறுதியில் ஆயுதங்கள் மனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதையும் அதன் காரணங்களையும் கண்டறிந்து,  அந்த விபரீத சக்தியை ஏவியவர்ளுக்கே வினையாக்குகிறார்.





















இங்கே கிளிக்:Mutus Liber




Monday, November 21, 2022

4,எழுதப்பட்ட எதிர்காலம்.

 


லண்டன் 1986 நவம்பர்.

இளம் நடிகன் 'கை' மது, புகைப்பழக்கத்திலிருந்து விடுபட மேற்கொண்ட ஹிப்னாடிச சிகிச்சை தற்செயலாக அவனுக்கு எதிர்கால தோற்றங்களின் கதவுகளை திறந்து விடுகிறது.

தான் நடித்து வரும் திரைப்படத்தின் இனி எடுக்கப்பட உள்ள அன்னா எனும் நடிகையின் ஆவி சம்பந்தமான காட்சிகளை காணும் அவன் மிரண்டு போய்  டைலன்டாக்கை உதவிக்கு அழைக்கிறான். 

ஆனால்  அவனுடைய பிரச்சனையை கண்டு பிடிக்கும் டைலன்டாக், ஹிப்னாடிச சிகிச்சை  மூலம் அவனை மீட்கும் முன்,
பிரமைக்கும் நிஜத்துக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் 'கை' அன்னாவை கொல்லும் முயற்சியில் மாண்டு போகிறான். 

ஆனாலும் அவனுடைய ஆவி மீண்டு வருகிறது கையில் கோடாரியுடன்...💀










Sunday, November 20, 2022

வாழ்க்கை எப்போது ஒளிரும்?

 

காவல் அதிகாரி ட்ரெண்ட்,  தன் காதலியை தேடி வந்த இடத்தில் அவளுக்கு திருமணமாகி இருக்கலாம் என கேள்விப்பட்டு குடிகாரனாகிறார்.

ஒருநாள் ஊரே தேடும் கொலைக்கும்பலை சேர்ந்த ஒருவனை ஊராரிடம் காட்டிக் கொடுக்காமல் மறைப்பதோடு அவன் தப்பிச் செல்லவும் உதவுகிறார்.

ட்ரெண்ட் இப்படி நடந்து கொண்டதன் காரணம் என்ன?

இச்சம்பவம் ஒரு காவல் அதிகாரி வயதான அப்பாவி மக்களை குரூரமாக தாக்கி கொள்ளையடிக்கும் கும்பலுக்கு துணை போனது போல தோன்றினாலும் வழக்கம் போலவே எதிரிகளுக்குள் ஊடுருவி குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் காவல்துறையின் திட்டமாக கதை முடிவு பெறுகிறது. 


ட்ரெண்ட்டின்  தொலைந்து போன விளக்கைத் தேடும் பயணம் தொடர்கிறது...

மிக சுமாரான கதை இது.





******

Friday, November 18, 2022

3,பெளர்ணமி இரவுகள்.

 


1986ல் ஜெர்மனியின் பிளாக் ஃபாரஸ்ட் பகுதியில்
தங்கிப்படிக்கும் வசதியுடைய பள்ளி ஒன்றில் பயிலும் மாணவி  மேரி ஆன் புதிரான முறையில் காணாமல் போகிறாள்.

அவளுடைய தந்தையால் பணியமர்த்தப்படும் டைலன்டாக்கும் கிரளெச்சோவும் பெளர்ணமி இரவுகளில் ஓநாய்களை மனிதர்களாக மாற்றி புதிய இனம் ஒன்றை உருவாக்க இளம்பெண்களை வேட்டையாடும் இரு சூனியக்கிழவிகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.

டைலன்டாக் சூனியக்கிழவிகளை சமாளித்து மேரி ஆனை மீட்டு வருகிறார்.













கிரளெச்சோ எதையாவது விபரீதமாக நினைப்பதும் / சொல்லுவதும் அவை உடனடியாக பலிப்பதும் நல்ல நகைச்சுவை! 😂










கிரளெச்சோ அடிக்கும் ஜோக்கின் இறுதிப்பகுதி செம்ம!😊


ஒரு இத்தாலியன், ஒரு பிரெஞ்சுக்காரன், ஒரு ஆங்கிலேயன், மற்றும் ஒரு ஜெர்மானியன் ஆகியோர் கில்லட்டின் மரண தண்டனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்...

முதலில் கில்லெட்டினுக்கு செல்வது இத்தாலியன். தனது கடைசி ஆசையாக, பிளேடு விழுவதைக் காண தன்னை மல்லாக்க படுக்க வைத்து தண்டனையை நிறைவேற்றும்படி கேட்கிறான்.

 இத்தாலியர்கள் கொஞ்சம் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்...

இத்தாலியனின் விருப்பப்படி  அவனை கில்லெட்டினின் பிளேடுகளுக்கு இடையில் மல்லாக்க படுக்க வைத்தார்கள். 

மரணதண்டனை நிறைவேற்றுபவர் கில்லெட்டின் பிளேடை விடுவித்தார்.
ஆனால் பிளேடு கழுத்தில் இருந்து ஒரு அங்குலம் மேலே  நின்று விட்டது!

உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமல் இருக்கலாம், மூன்று முறை கில்லெட்டினில் வெட்டுவது தோல்வியுற்றால், மரண தண்டனை விதிக்கப்பட்டவர் மன்னிக்கப்படுவார்... 

 மரணதண்டனை நிறைவேற்றுபவர்  கில்லெட்டினை பரிசோதித்து சிறிது எண்ணை விட்டார்.

ஆனால் இரண்டாவது முறையும்,
மூன்றாவது முறையும் பிளேடு நின்று போனதால் இத்தாலியன் விடுதலை செய்யப்பட்டான். 

பின்னர் பிரஞ்சுக்காரனின் முறை வந்தது,  அவனும் இத்தாலியனைப் போலவே அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் தன்னையும் மல்லாக்கப் போட்டு தண்டனையை நிறைவேற்றும்படி கேட்கிறான்.


ஆனால் கில்லெட்டினில் ஏதோ கோளாறு காரணமாக கழுத்துக்கு ஒரு அங்குலம் மேலேயே பிளேடு மீண்டும் மீண்டும் நின்று விடுகிறது.

இதன் காரணமாக
பிரெஞ்சுக்காரனும், அடுத்து வந்த ஆங்கிலேயனும் மரண தண்டனையிலிருந்து தப்பிக்கின்றனர்.

 மரணதண்டனை நிறைவேற்றுபவர் கிட்டத்தட்ட அழும் நிலைக்கு வந்து விட்டார். 

ஜெர்மானியனின் முறை வந்தபோது கில்லெட்டினை முழுமையாகப் பிரித்து சரி செய்ய முயன்றனர். ஆனால் யாராலும் கில்லெட்டினில் என்ன தவறு உள்ளது என்று கண்டு பிடிக்க முடியவில்லை. 

இருந்தாலும் ஜெர்மானியனையும் கில்லெட்டினில் அவனுடைய விருப்பப்படி மல்லாக்க படுக்க வைத்து மரண தண்டனையை நிறைவேற்ற முயன்றனர்.

முதல் இருமுறை முன்பு போலவே கில்லெட்டின் பிளேடு கழுத்துக்கு ஒரு அங்குலம் மேலே நின்று விட்டது.

 மூன்றாம் முறை தண்டனையை நிறைவேற்றுபவர் கில்லெட்டின் பிளேடை விடுவிக்கத் தயாரான போது ஜெர்மானியன் கூச்சலிட்டான், 

"பொறுங்கள் கில்லெட்டினில் என்ன தவறு உள்ளது என்று நான் கண்டு பிடித்து விட்டேன்."  .




(அப்புறம் என்னாச்சுன்னா, கில்லெட்டினை ஜெர்மானியன் சொன்னபடி சரி பண்ணி பிறகு மூனாவது தடவையில ஜெர்மானியன் தலையை வெட்டிட்டானுக.😂)





இங்கே கிளிக்:



******


Sunday, November 13, 2022

பிலிப்பியின் மேகம்!

 


அந்த வசந்த காலத்தில், பிரளயம் போன்ற மழை பழங்குடியினரின் புல்வெளியை நீண்ட நாட்களாக தாக்கியது, பழங்குடியினர் இதுபோன்ற வெள்ளங்களை அதற்கு முன் அனுபவித்ததில்லை.  இறுதியாக மழை ஓய்ந்த போது அவர்களுக்கு கிடைத்த நிம்மதி அருமையாக இருந்தது.

அன்றைய இரவில் யகரி தன் முந்தைய அனுபவங்களைப் போன்று எதிர்காலம் முன்னுரைக்கும் கனவை காண்கிறான்.

மழை வெள்ளத்தின் நடுவே மேகம் ஒன்று அவனை கூடாரத்துடன் வானுக்கு உயர்த்துகிறது.

கூடாரத்திலிருந்து குதிக்கும் யகரி கனவு கலைந்து விழித்துக் கொள்கிறான்.

ஆழ் கடலிலிருந்து உலகம் சுற்ற புறப்பட்ட டால்பின் ஒன்று மழை வெள்ளத்தின் காரணமாக யகரியின் குடியிருப்பு அருகே உள்ள நீர்நிலைக்கு வந்து சேர்கிறது.

நீண்ட நாட்கள் பெய்த மழை ஓய்ந்து வெள்ளம் வடிய துவங்கியபோது தன் கானக தோழர்களை நலம் விசாரித்தவாறு வரும் யகரியும் இடிக்குட்டியும் டால்பினுடன் நட்பாகி விளையாடுகின்றர். 

டால்பின் மூச்சு விடும்போது அதன் தலையிலிருந்து மேகம் போல நீர் பீச்சியடிக்கிறது.

யகரியின் கனவைப்போலவே டால்பின் யகரியை வானுக்கு உயர்த்தி விளையாட, அதன் தலை உச்சியிலிருந்து நீரில் குதித்து விளையாடும் யகரி தான் கண்ட கனவு பலித்து விட்டதை உணர்கிறான்.

அந்த டால்பினை அது உற்சாகத்தில் இடும் கூச்சலிலிருந்து "பிலிப்பி" என அழைக்கிறான் யகரி.

அப்போது அங்கு வரும் தேரை ஒன்று தன் இருப்பிடத்தில் பெரிய தேரை  ஆக்ரமித்து இருப்பதாக கண்டனம் தெரிவிக்கிறது.

யகரி ஏரி   எல்லோருக்கும் பொதுவானது என வாதிடுகிறான்.

ஆனால் தேரை, அந்த இடம் ஏரி அல்ல குளம் என்றும்  மழை வெள்ளத்தால் ஏறிய குளத்தின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் பிலிப்பி தொடர்ந்து அங்கே உயிர் வாழ முடியாது என்பதையும் சுட்டிக்காட்டி எச்சரிக்கிறது. 

தன் நண்பர்களான வால்ரஸையும் நார்வாலையும் தன் தாய்க்கடலையும் மீண்டும் காண முடியாது என்ற பீதியில் கதறத் துவங்கியது பிலிப்பி.



சூல்நிலையை ஆராய்ந்த தேரை ஒரு அலை மூலம் பிலிப்பியை மீண்டும் ஆற்றில் சேர்க்கலாம் என யோசனை தெரிவிக்கிறது. பீவெர்களின் உதவியை பெற விரைந்தான் யகரி. 

பீவர்களை மீண்டும் ஒருமுறை அணிதிரட்டுவது எளிதானது அல்ல, ஆனால் யாகாரியின் அவசர அழைப்புகளை யார் எதிர்ப்பார்கள்?




பீவெர்கள் விரைவாக வந்து தேரையின் யோசனைப்படி அருகிலிருந்த ஆற்றில்  இரு இடங்களில் நீரை தடுத்து அணை கட்ட துவங்கினர்.

மூன்று நாட்கள் நடந்த கடினமான பணிகளுக்குப் பின் ஆற்றின் குறுக்கே இரு அணைகளும் கட்டி முடிக்கப்பட்டன.

முதல் அணை எளிதில் உடையக்கூடியதாகவும், இரண்டாவது அணை பெருவெள்ளத்தை தாங்கும் உறுதி மிக்கதாகவும் கட்டப்பட்டது

குளத்தில் நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது. ஆயிரம் வாயன் முதல் அணை உடையும் நேரம் நெருங்கி விட்டதாக எச்சரித்தான். 

முதல் அணையில் தேங்கிய நீரின் அழுத்தம் காரணமாக முதல் அணையை உடைத்துக்கொண்டு பாய்ந்த வெள்ளம், உறுதி மிக்க இரண்டாவது அணையால் தடுக்கப்பட்டு,  திசை திரும்பி பிலிப்பி இருந்த குளத்தினுள் பெரும் அலையாக விசையுடன் பாய்ந்து,  ஆற்றுப் பாதையின் வளைவை தாண்டி மீண்டும் ஆற்றை அடைந்தது. 

அதன் வேகத்தில் பிலிப்பியும் ஆற்றை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டது. ஆனால் பாதி தூரத்திலேயே ஆற்று வெள்ளத்தின் வேகம் வடிந்துவிட, புல் தரையில் சிக்கிக்கொண்ட பிலிப்பி மூச்சு விட தவித்தது.

துடிப்புடன் விரைவாக செயல்பட்ட யகரியும் பீவெர்களும் பிலிப்பியை உருட்டி ஆற்றுக்குள் தள்ளி விட்டனர்.

 மரண ஆபத்திலிருந்து மீண்ட  பிலிப்பி யகரிக்கும் அவனது நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்து விட்டு ஆற்றில் தன் தாய்க்கடலை நோக்கி உற்சாகமாக பாய்ந்து சென்றது!










இங்கே கிளிக்! டால்பின்

Narwhal : ஒரு சிறிய ஆர்க்டிக் திமிங்கலம், அதன் ஆணின் பற்களில் ஒன்றிலிருந்து நீண்ட முன்னோக்கி சுழல் முறுக்கப்பட்ட தந்தம் உள்ளது.

இங்கே கிளிக்! வால்ரஸ்






Sunday, November 6, 2022

புதிராய் ஒரு புகைப்படம்!

 


அனடோலியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட மார்க் விசாரனையற்ற கைதியாக காலத்தை கழிக்கிறான்.

கிம் சில மாதங்களில் விடுதலை செய்யப்படுகிறாள். மூன்றாண்டுகளுக்குப் பின் கிம்மின் கோரிக்கையின்படி மார்க்கை மிஸ்டர் பாட் மீட்டு. சில புகைப்படங்களில் டிரிஸையும் அலெக்ஸாவையும் அடையாளம் காட்டும்படி கேட்கிறார்.

இதற்கிடையே டிரிஸும் அலெக்ஸாவும் அனடோலியாவிலிருந்து வெகு தூரத்தில் கடலில் சில விசித்திர நிகழ்வுகளை காண்கின்றனர்.

மார்க்கும் கிம்மும் மிஸ்டர் பாட்டுடன் புகைப்படங்களில் டிரிஸையும் அலெக்ஸாவையும் அடையாளம் காட்ட செல்கிறார்கள்.

 டிரிஸும் அலெக்ஸாவும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றில் பின்னனியில் பாரீஸின் ஈபிள் டவர் காட்சியளிக்கிறது.

நூறாண்டுகளுக்கு முன் அல்டெபெரானுடன் தொடர்பு அற்றுப் போன பூமியின் நகர் ஒன்றில் டிரிஸும் அலெக்ஸாவும் எடுத்துக்கொண்டுள்ள அந்தப் புகைப்படம் எப்படி சாத்தியம்?  என்ற புதிரான கேள்வியுடன் அல்டெபெரான் தொடரின் இந்த அத்தியாயம் நிறைவடைகிறது.
 
























*******