வென்டெட்டா ஒரு பின் குறிப்பு!
வென்டெட்டா ஆர்வத்தின் பேரில் துவங்கிய முயற்சி.
அதன் வீரியத்தை தமிழில் கொண்டு வர அதிக உழைப்பை கோருவதால் இந்த சில பக்கங்களுடன் முயற்சியை நிறுத்திக் கொள்கிறேன்.
அதன் வீரியத்தை தமிழில் கொண்டு வர அதிக உழைப்பை கோருவதால் இந்த சில பக்கங்களுடன் முயற்சியை நிறுத்திக் கொள்கிறேன்.
முதலில் கதையை வாசியுங்கள். வாசிக்கும்போதே சித்திரங்களை, வசனங்களை கூர்ந்து கவனித்து அவற்றில் மறைந்திருக்கும் மறைபொருள்களை, உருவகங்களை புரிந்து கொள்ள முயலுங்கள் .
பின்னர் கதையின்
இறுதியில் இணைக்கப்பட்டுள்ள உதவிக்குறிப்புகளுடன் உங்கள் புரிதல்களை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.
பின்னர் கதையின்
இறுதியில் இணைக்கப்பட்டுள்ள உதவிக்குறிப்புகளுடன் உங்கள் புரிதல்களை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.
குறிப்புகளின் உதவி தேவையில்லை என்பவர்கள் அவற்றை வாசிக்காமல் கடந்து செல்லுங்கள்.
இதுபோன்ற தமிழ் மொழிபெயர்ப்புகளை ஆர்வத்தின் பேரில் செய்து வாசகர்களுக்கு அளிக்கும் குழு ஒன்றில் இப்படி பின் குறிப்புகள் அளிக்க தேவையில்லை என்ற கருத்து எழுந்தது. அதற்கான பதிலாகவே "Translator's note" உருவானது.
ஆலன்மூரின் கதைகளில் மறைபொருள்கள் ஏராளமாக இருக்கும். எனவே குறிப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிப்பது இயல்பு.
சாதாரண கதைகளில் வெகு சில குறிப்புகள்தான் அளிக்க வேண்டி வரும். அவையும் கதையின் இறுதியில் வழங்கப்படுவதால் வாசகனின் தேடலுக்கு எவ்வித இடையூறும் இருக்காது.
அனைத்தையும் வாசித்தபின்
உங்கள் கருத்துகளை எங்களுக்கு அவசியம் தெரிவியுங்கள்.
உங்கள் கருத்துகளை எங்களுக்கு அவசியம் தெரிவியுங்கள்.
சில நண்பர்களுக்கு...
பாராட்டுகளை பொதுவில் ஏற்றுக்கொள்வது போல் எதிர்க்கருத்துகளையும் பொதுவில்தான் எதிர்கொள்ள வேண்டும்.
மொழிபெயர்ப்பு தவறுகளையும், மொழிபெயர்ப்பவரின் தார்மீக பொறுப்புகளையும் சுட்டிக் காட்டிய பின்னரும் .
படைப்புகள் தவறுகளுடன்தான் தொடரும் என்றால் அத்தகைய படைப்புகள் எனக்குத் தேவையில்லை.
படைப்புகள் தவறுகளுடன்தான் தொடரும் என்றால் அத்தகைய படைப்புகள் எனக்குத் தேவையில்லை.
விஜயனின் மொழிபெயர்ப்புகளுக்கும் வெளியே செய்யப்படுபவைகளுக்கும் எந்த வித்யாசமும் இல்லை என்பதும் புரிந்து விட்டது.
இதுவரை மொழிபெயர்ப்புகள் "அன்புடன் " அளிக்கப்படுவதாக எண்ணிக் கொண்டிருந்தேன்.
அக்கறையுடன் தவறுகளை எடுத்துக் கூறியவனுக்கு "காசுக்கு விற்கவில்லை" "தானம் கொடுத்த மாட்டை" என்பதான வரிகள் உண்மையை உணர்த்தியதால் விலகினேன். எனக்கு இலவசமாகவோ தானமாகவோ பெற விருப்பமில்லை.
தமிழ் மொழிபெயர்ப்பு: illuminati blog tamil
link:
No comments:
Post a Comment