Thursday, April 28, 2022

தந்திரங்களின் மன்னன்

 


ஒருநாள் லிண்டென் மரம் தங்கள் கிராமத்தின் அணைக்கட்டு அருகே ஒதுங்கிய பழுதடைந்த படகு ஒன்றை யகரியிடம் கொண்டு வருகிறது.


யகரியும் அவனது நண்பர்களும் அந்தப்படகை பழுது நீக்கி ஆற்றில் பயணித்து விளையாடுகின்றனர்.


அவர்கள் காட்டில் முகாம் அமைக்கும்போது வேட்டையாடச் சென்ற எருமை விதை காணாமல் போகிறான்.

யகரிக்கு நரிக்குடும்பம் ஒன்றின் நட்பு கிடைக்கிறது. 

அந்த நரியின் மூலம் காட்டுப்பூனையிடம் எருமை விதை சிக்கியிருப்பது தெரிய வருகிறது.


நரியின் தந்திரங்களின் உதவியுடனும் இடிக்குட்டியின் வேகத்தாலும் காட்டுப்பூனையிடமிருந்து யகரியும் எருமை விதையும் தப்புகின்றனர்.


அவர்கள் நரிக்குடும்பத்திடம் விடைபெற்று தங்கள் சியோக்ஸ் கிராமத்துக்கு திரும்பிய பின் லிண்டென் மரத்துக்கும் அவனது தோழர்களுக்கும் படகு சவாரி மூலம் மகிழ்வூட்டினர்.


இந்த சாகஸத்தில் நரிகளின் வாழ்வு முறையும் அவற்றின் தந்திரங்களும் விவரிக்கப்படுகிறது.


காட்டுப்பூனையிடமிருந்து யகரியும் எருமை விதையும் தப்பும் இடமும், இடிக்குட்டி சரியான நேரத்தில் வந்து அவர்களை ஏற்றிக்கொண்டு விரையும் இடமும் விறுவிறுப்பானவை.


யகரியின் வாழ்க்கை ஒரு வரம். யகரியின் சாகஸங்கள் இயற்கையுடன் இணைந்தவையாக அமைந்துள்ளன.

அவனது கதைகளில் விலங்குகளின் வாழ்முறைகள் விவரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு சாகஸத்திலும் அவன் விலங்குகளிடம் பிரியாவிடை பெறும்போது நாமும் ஒரு நண்பனிடமிருந்து விடைபெறும் உணர்வு எழுகிறது.



Cougar


கூகர் (பூமா கன்கலர்) என்பது அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெரிய பூனை.  அதன் வரம்பு கனடிய யூகோன் முதல் தென் அமெரிக்காவின் தெற்கு ஆண்டிஸ் வரை பரவியுள்ளது மற்றும் மேற்கு அரைக்கோளத்தில் எந்த பெரிய காட்டு நிலப்பரப்பு பாலூட்டிகளிலும் மிகவும் பரவலாக உள்ளது.  இது பெரும்பாலான அமெரிக்க வாழ்விட வகைகளில் நிகழும், தழுவிக்கொள்ளக்கூடிய, பொதுவான இனமாகும்.  அதன் பரந்த வரம்பு காரணமாக, இது பூமா, மலை சிங்கம், கேடமவுண்ட் மற்றும் பாந்தர் உட்பட பல பெயர்களைக் கொண்டுள்ளது.


Tuesday, April 5, 2022

உயரே ஒரு கழுகு!

 


யகரியின் சியோக்ஸ் பழங்குடியினர் ராக்கி மலைத்தொடரின் உயர்ந்த சிகரங்களின் அடிவாரத்தில் முகாம் அமைத்திருந்தர்.



குதிரை வேட்டைக்குச் சென்ற சியோக்ஸ் வீரர்களான துணிச்சல் காகமும், கூர்நாகமும் அவர்களுடைய வேட்டை எல்லையை தாண்டியதால் கழுகு ஒன்றின் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். 

கழுகின் எச்சரிக்கையை மீறி குதிரை வேட்டையாட முயன்ற துணிச்சல் காகம் கழுகால் தாக்கப்பட்டு அவனது தாயத்தையும் சுயநினைவையும் இழக்கிறான்.

கிராமத்தின் மாந்த்ரீக வைத்தியர் துணிச்சல் காகத்தின் தாயத்து மீட்கப்பட்டால்தான் இருளில் ஆழ்ந்து விட்ட துணிச்சல் காகம் வெளிச்சத்தைக் காண்பான் என்கிறார்.

துணிச்சல் காகத்தை தாக்கியது பெரும் கழுகாராக இருக்குமோ?  என சஞ்சலப்படும் யகரி  துணிச்சல் காகத்தின் தாயத்தை மீட்டு வர  பெரும் கழுகாரை தேடிக் கிளம்புகிறான்.













 ராக்கி மலைத்தொடரில் வசிக்கும் விலங்குகள் பலவற்றையும் சந்தித்து , அதன் உயர்ந்த சிகரங்களில் தன் உயிரைப் பணயம் வைத்து, உயரே உயரே மலை ஏறி, வெப்பம், பனிப்பொழிவு, குளிர், பசி என இடர்பாடுகளை சமாளித்து மலை ஆடுகள் மற்றும் பெரும் கழுகாரின் உதவியோடு துணிச்சல் காகத்தின் தாயத்தை மீட்டு வருகிறான்.

யகரியின் உதவியால் துணிச்சல் காகம் மரண இருளிலிருந்து மீண்டான்.

Elk

காட்டுமான் (elk, wapiti, (Cervus canadensis)) என்பது உலகிலுள்ள மான் இனங்களில் பெரியவற்றில் ஒன்றும், தென் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசியாவில் தரையிலுள்ள பெரிய பாலூட்டியும் ஆகும். ஐரோப்பிய சிவப்பு மானின் துணையினமென நம்பப்பட்டது. ஆனால் 2004 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இரண்டும் வெவ்வேறானவை என சுட்டிக்காட்டியது.

Marmot

மர்மோட் (Marmot) என்பவை மர்மோட் பேரினத்தில் கொறிணி இனத்தைச் சேர்ந்த பெரிய அணில் ஆகும். இவ்வினத்தில் 15 வகைகள் உள்ளன.[1] இவற்றுள் சில மலைப்பகுதிகளில் குறிப்பாக ஆல்ப்ஸ் மலை, வட அபென்னைன் மலை, கார்பத்தீய மலைகள், தத்ரா மலைகள் மற்றும் ஐரோப்பா மற்றும் வடமேற்கு ஆசியாவில் பைரெனீசு மலைகளிலும் காணப்படுகின்றன. மேலும் சில வகைகள் வட அமெரிக்காவின் ராக்கி மலைத்தொடர், கருமலைகள், காஸ்கேடு மலைகள், பசிபிக் மலைகள் மற்றும் சியெரா நெவடா ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. இந்தியாவின் லடாக் பகுதியிலும் பாகிஸ்தானின் தியோசாய் தேசியப்பூங்காவிலும் சில வகைகள் காணப்படுகின்றன. சில வட அமெரிக்கப் புல்வெளிப் பிரதேசங்களிலும் யுரேசியப் புல்வெளிகளிலும் பரவி வாழ்கின்றன. இதே போன்ற அளவு மற்றும் உருவ ஒற்றுமையுள்ள ஓர் உயிரினம் தரை நாய் ஆகும். ஆனால் அது மர்மோட் இனத்தைச் சேர்ந்ததல்ல.

Mountain sheep

பிக்ஹார்ன் செம்மறி ( ஓவிஸ் கனடென்சிஸ் ) என்பது வட அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட செம்மறி இனமாகும் . 
அதன் பெரிய கொம்புகளுக்காக இந்த பெயரிடப்பட்டது . ஒரு ஜோடி கொம்புகள் 14 கிலோ (30 எல்பி) வரை எடையுள்ளதாக இருக்கும்;  செம்மறி ஆடுகள் பொதுவாக 143 கிலோ (315 பவுண்டு) வரை எடையுள்ளதாக இருக்கும். 

 சமீபத்திய மரபணு சோதனை Ovis canadensis இன் மூன்று வெவ்வேறு கிளையினங்களைக் குறிக்கிறது , 
 செம்மறி ஆடுகள் முதலில் பெரிங் லேண்ட் பாலத்தின் வழியாக சைபீரியாவில் இருந்து வட அமெரிக்காவிற்கு சென்றன.  
வட அமெரிக்காவில் அவற்றின் தொகை மில்லியன் கணக்கில் உயர்ந்தது,
 மேலும் பிக்ஹார்ன் செம்மறி பூர்வீக அமெரிக்கர்களின் புராணங்களில் நுழைந்தது . 
1900 வாக்கில், ஐரோப்பிய கால்நடைகள் மற்றும் அதிக வேட்டையாடுதல் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட நோய்களால், வற்றின் தொகை பல ஆயிரமாக வீழ்ச்சியடைந்தது. 

Mountain goats

மலை ஆடு (mountain goat) (Oreamnos americanus) வெள்ளாடின் ஒரு வகையினமாகும். இம்மலை ஆடுகள் மிக உயரமான, செங்குத்தான மலைப் பாறைகளில் எளிதாக ஏறி புற்களை மேயும் வலிமை உடையது. இம்மலை ஆடுகள் வட அமெரிக்காவில் அதிகம் காணப்படுகிறது. இம்மலை ஆடுகள் செங்குத்தான மலைப் பாறைகளில் தங்கி புற்களை மேய்வதால், வேட்டைக்காரர்களால் இவ்வாடுகளை எளிதாக வேட்டையாட முடியாது.

மலைகளில் தனியாக புற்களையும், இலைகளையும் மேயும் இம்மலை ஆடுகள், இனப்பெருக்கத்திற்காக மட்டும், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில், ஆண் மலை ஆடுகள், பெண் மலை ஆடுகளை தேடி வருகிறது. கழுத்திற்கு கீழ் இதன் உயரம் 3 முதல் 4 அடி வரை கொண்டது.

மலை ஆடுகளின் தடிமனான தோலும், அடர்த்தியான முடிகளும் பனிப்புயல் மற்றும் கடும் குளிரிலிருந்து காக்கிறது. இதன் கால்கள் குட்டையாக இருப்பினும், உறுதி கொண்டது. இதன் கால்கள் கறுப்பு நிற குளம்புகள் கொண்டது. இதன் மெல்லிய கொம்புகள் சுமார் ஒரு அடி நீளம் கொண்டது.

பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் காணப்படும் இம்மலை ஆடுகள் வட அமெரிக்காவின் அலாஸ்கா,வாசிங்டன், கொலராடோ, அல்பர்ட்டா, பிரிட்டிசு கொலம்பியா, தெற்கு டகோட்டா, ஐடஹோ, மொன்ட்டானா போன்ற மேற்கு மலை மாகாணங்களை வாழ்விடமாகக் கொண்டது.