அதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்ப மாட்டீர்கள்! உள்ளே வாருங்கள்...
ம்... கிளிஃப்? அது... அவர்தானே...?
நம்பவே முடியல...
கடைசிப் பெயர்?
லூக்.
முதல் பெயர்?
லக்கி .
லக்கி லூக்?!!!
நீங்கதான் புகழ்பெற்ற 'லக்கி லூக்' இல்லையா?!
ஆமா, சரிதான்...
நான் இப்படி சும்மா...
ஊர் சுத்திக்கிட்டு இருக்கேன்...
இதை நம்பவே முடியவில்லை!!
உண்மையாகவா?!
நீதான் அந்த ஜாலி ஜம்பரா?!
திரு. ஸ்ப்ருங்லி! இது மிகவும் நல்ல விஷயம். உங்கள் கால்நடைகள்... ம்ம்... ஒரு பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்தது போல பாதுகாப்பாக இருக்கும்!
கால்நடைகளா?!
என்னால் நம்பவே முடியவில்லை! லக்கி லூக்!!
தலைவா, நீங்கதான் என் ரோல் மாடல்!! உங்க சாகசக் கதைகள் எல்லாத்தையும் நான் படிச்சிருக்கேன்!!! நன்றி பாஸ்!!
சந்தோஷம்!
நான் கிளிஃப் ஹேங்கர். நானும் ஒரு கவ்பாய் தான்! இவன் என் அண்ணன் மகன், நெஸ் குவிக்! என்ன விஷயம் தெரியுமா நெஸ்? நாம லக்கி லூக் கூட சேர்ந்து வேலை செய்யப் போறோம்!!!
வாவ்...
சரி, நிதானமா இருங்க. அது என்ன வேலை?
கனவான்களே. அதைத்தான் நான் துல்லியமாகத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்! அந்த...
திரு. ஹிக்ஸ்!
பணிவுடன் கேட்கிறேன் ஐயா... எனக்கு முன்பாக டெரன்ஸ் இக்குவீன் இங்கு வந்து, என்னைப் பற்றி விசாரித்தாரா என்பதை நான் தெரிந்துகொள்ள வேண்டும்!
இல்லை பையா! உன் ராணி உன்னைப் பற்றி விசாரிக்கவே இல்லை! உன்னைத் தூக்கிலிடப்போகும் கயிற்றை நானே உன் கழுத்தில் மாட்டுவதற்கு முன்பாக, இங்கிருந்து ஓடிவிடு!
சரி. நான் அவருக்காகக் காத்திருக்கிறேன்.
வெளியில்.
கதவை மூடு!
அவனுடைய கதை என்ன?
அவன் பட் வில்லிஸ்! கடந்த வசந்த காலத்தில், அவனும் மற்றொருவனும் பேர்பேக் மலை மீது ஒரு ஆட்டு மந்தையை ஓட்டிச் சென்றனர்!
அங்கே அவர்கள் நெருக்கமாகப் பழகிக் கொண்டிருந்தது காணப்பட்டது!
நான் அதைப் பற்றி மேலும் பேச விரும்பவில்லை!
ஒரு பழமா?!
அங்க குதிரை மேல சேணம் கூட இல்லாம உக்காந்துக்கிட்டு, ஜோடியா கொஞ்சிக்குலாவிக்கிட்டு இருந்த பழங்கள்ல ஒன்னுதானா அது?!
*ஆங்கிலத்தில் "Fruit" ( பழம்) என்ற சொல் ஓரினச்சேர்க்கையாளர்களைக் குறிப்பதற்கான ஒரு பழைய, அவமதிப்பான கிண்டலான வார்த்தையாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆமாம், ஆனால் அதற்கும் நாம் செய்து கொண்டிருக்கும் பணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. திரு. ஸ்ப்ரூங்லி சுவிட்சர்லாந்திலிருந்து இங்கே வந்திருப்பது...
வா நெஸ்! கொஞ்சம் ஜாலியாக விளையாடலாம்!
சரி!
இவன் முழுக்க உனக்குதான் வைச்சு பண்ணு!
அடடா, என்ன ஒரு பழம்!
நீ பார்க்க ஒரு அருமையான சித்திரம் போல இருக்குறே பழம்!
முத்து மாதிரி பளபளன்னு மினுமினுக்கிற வெள்ளைத் தோல்! அது எல்லாத்துக்கும் மேல, முகத்துல இந்த பழுப்பு மச்சங்கள்!
உனக்கு உடம்பு முழுக்க மச்சம் இருக்குன்னு மட்டும் சொல்லிடாத! அப்படி இருந்தாலும் அது எங்கெங்க இருக்குன்னு என்கிட்ட சொல்லிடாத!
உன் கல்லறைக் கல்லுல உன் பேரை எப்படி எழுதணும்னு ஆசைப்படுற?! ஒற்றை "D" போட்டா, இல்ல ரெட்டை "TT" போட்டா?!
இன்னும் துல்லியமாகச் சொன்னால், இந்த அடர் ட்ரஃபிள் சாக்லேட்டின் மீது லேசான பால் சாக்லேட் பூசப்பட்டு, அவற்றுக்கு இடையில் மெல்லியதாக நொறுங்கும் தன்மை கொண்ட ஒரு அடுக்கு உள்ளது!

















































No comments:
Post a Comment