நீ என்ன பார்த்துக்கொண்டிருக்கிறாய்?
அங்கே மேலே இருக்கும் அந்தப் பறவை. அது ஒரு ஃபினாமினன்!
அதனால் என்ன?
அவற்றுக்குக் கால்கள் இல்லை; அவை தங்கள் வாழ்நாள் முழுவதையும் கடலிலேயே கழிக்கின்றன. அவற்றால் தண்ணீரில் மட்டுமே தரையிறங்க முடியும்... அது இப்போது தரையை நோக்கிப் பறந்து கொண்டிருக்கிறது.
அதோ மற்றொன்று!
தனது இயல்பான வாழ்விடத்திற்கு வெளியே மரணத்தை எதிர்கொள்ளத் துணியும் அளவுக்குப் பெரிய அச்சுறுத்தலிலிருந்து அது தப்பி ஓடுவது போல் தெரிகிறது.
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி
இந்த ஊர் மக்கள், கடல் எப்போதுமே பயங்கரமான அரக்கர்களால் நிறைந்திருப்பதாக நினைக்கிறார்கள். என் பயணியும் அந்த விதிக்கு விதிவிலக்காகத் தெரியவில்லை. நான் அவள் கவனத்தை அதிலிருந்து திசை திருப்ப முயன்றேன்.
அப்படியானால் நீங்கள் அனடோலியாவில் வசிக்கிறீர்களா?
ஆம், நான் எப்போதுமே அங்குதான் வசித்து வருகிறேன். நான் அங்கேதான் பிறந்தேன்!
உங்கள் படிப்பில் எந்த அளவிற்கு முன்னேறியுள்ளீர்கள்?
கடந்த ஆண்டு ஃபெல்டனில் எனது அடிப்படைப் பாடங்களை முடித்தேன்! இங்கு அவ்வளவுதான் இருக்கிறது. நான் தொடர்ந்து படிக்க விரும்பினால், குறைந்தபட்சம் பாரடைஸ் ஸ்பிரிங்ஸ் வரை செல்ல வேண்டும்.
அனடோலியாவில் என்னால் சாதிக்க முடியுமென்று நினைக்கிறீர்களா? அது மிகப் பெரிய நகரம் என்றும், அங்கே என்னால் ஒரு வாரம் கூட தாக்குப்பிடிக்க முடியாது என்றும் என் சகோதரன் சொல்கிறான்.
ஏதாவது ஒரு தொழில் தெரியாமல் வெற்றி பெறுவது கடினம்தான்! ஆனாலும், நீங்கள் அந்த முயற்சியை மேற்கொள்ளத்தான் வேண்டும். ஒருவேளை எதுவும் சரியாக அமையவில்லை என்றால், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்பி வந்துவிடலாம், இல்லையா?
என்ன பிரச்சனை?
காற்று நன்றாக இருக்கிறது, ஆனால் நாம் போதுமான வேகத்தில் செல்லவில்லை என்பது போல் உணர்கிறேன்!
படகுக்கு அடியில் ஏதேனும் இருக்கிறதா?!
அமைதியாக இருங்கள்! படகுக்கு அடியில் ஒன்றுமில்லை. தண்ணீர் தெளிவாக இருக்கிறது!
அப்புறம் என்ன பிரச்சனை?
எனக்குத் தெரியவில்லை! ஒருவேளை நான் காற்றின் வேகத்தைத் தவறாகக் கணித்து விட்டேன் போலும். கவலைப்பட ஒன்றுமில்லை, நான் உறுதியளிக்கிறேன்!
உங்களுக்குத் தெரியும், எங்கள் கிராமத்தில் உள்ள எல்லோருமே கிட்டத்தட்ட மீனவர்கள்தான். நாங்கள் கடலிலேயே எங்கள் வாழ்க்கையைக் கழிக்கிறோம்; இதுவரை யாரையும் எந்தக் கடல் உயிரினமும் தாக்கியதில்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஆபத்தான கடல் உயிரினங்கள் எல்லாம் கடலின் வெகு தொலைவில் அதாவது பல நாட்கள் பயணம் செய்ய வேண்டிய ஆழ்கடலில்தான் இருக்கும். நாம் கடற்கரையிலிருந்து சில மீட்டர்கள் தொலைவில் பாதுகாப்பாக இருக்கிறோம்.
அது என்ன?! உனக்கு ஏதேனும் தெரிகிறதா?!
கடல் அலைகள்...
அவை அசையவில்லை!
பாருங்கள்! இது சாத்தியமே இல்லை!
என்ன?!
தண்ணீர் திடமாக மாறுவது போலத் தெரிகிறது!
இங்கிருந்து போய் விடுவோம்! தயவு செய்து என்னை நிலத்திற்குக் கூட்டிச் செல்!
சரி!... இப்போதைக்கு அதுதான் செய்ய சிறந்த விஷயமாகத் தெரிகிறது. ஆனால்...
ஆனால் என்ன?!
தண்ணீர் மேலும் மேலும் கூழ் மாதிரி கட்டியாகிக் கொண்டே போகிறது! படகு இப்போது நகரக்கூட இல்லை!
நாம் என்ன செய்வது?! இங்கிருந்து வெளியேறியாக வேண்டும்!
அமைதியாக இருங்கள்! இது ஒரு அற்புதமான நிகழ்வு, ஆனால் இதில் எந்த ஆபத்தும் இருப்பதாகத் தெரியவில்லை! நாம் பீதியடைய வேண்டாம்!
ஆனால் நாம் இங்கிருந்து எப்படி கரைக்கு போகப் போகிறோம்?!
பாருங்கள்! இப்போது தண்ணீர் இன்னும் கெட்டியாக, ஜெல்லி போல மாறி விட்டது!
அதன் மேல் நம்மால் நடக்க முடியும்! வாருங்கள்! நாம் கடற்கரைக்கு ஓடுவோம்!
இதன்மீது இறங்க எனக்குப் பயமாக இருக்கிறது!
பயப்படுவதற்கு ஒன்றுமில்லை! வாருங்கள்!
இதோ. மீண்டும் தரையில் காலூன்றிவிட்டோம்!
அப்பாடா, என்னவொரு விசித்திரமான உணர்வு! அது நிஜமாகவே ஜெல்லி போல இருந்தது... மேலும், அது எவ்வளவு சூடாக இருந்தது என்பதை கவனித்தாயா?!
இது உண்மையிலேயே அசாதாரணமானது! இது எப்படி சாத்தியம்?! இந்த நிகழ்வு கிராமத்திற்கும் பரவியிருக்கும் என்று நம்புகிறேன். இல்லையென்றால், யாரும் நம்மை நம்ப மாட்டார்கள்! இது நம்புவதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது!
ஹேய்! நம் படகைப் பார்!
அடக் கடவுளே
என்ன எழவு அது?!
இங்கிருந்து போய் விடுவோம்!
இதைப் பார்!
இங்கிருந்து கிளம்புவோம்! கடவுளே, இந்தக் கடலை விட்டு விலகிச் செல்வோம்!
கடல்... உயிரோடு இருப்பது போல தோன்றுகிறது!
அங்கே ஒரு பாதை இருக்கிறது. அதைப் பயன்படுத்தி நாம் கிராமத்திற்குத் திரும்பலாம். இங்கிருந்து நடந்தால் இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான நேரமே ஆகும்.
அந்த அந்நியன் பேசிக்கொண்டிருந்த மர்மமான உயிரினத்துக்கும் இந்த நிகழ்வுக்கும் தொடர்பு இருக்குமோ என்று தோன்றுகிறது!
நிச்சயமாக! ஆனால் அது என்ன செய்கிறது?! அந்த உயிரினம் மேலும் மேலும் நம்பமுடியாததாக ஆகிக்கொண்டிருக்கிறது!
அது எப்படி இருக்கும் என்று பார்க்க விரும்புகிறேன்!
எனக்கு அப்படி எந்த அவசரமும் இல்லை!
மார்க்! அந்தப் படகு!
இது முற்றிலும் பைத்தியக்காரத்தனம்!
யோசித்துப் பாருங்கள்... நாம் அந்தப் படகில் தொடர்ந்து இருந்திருந்தால்...
உடலையே நடுங்க வைக்கிறது! இது எப்படிச் சாத்தியம்?!
இதோ அந்தப் பாதை!
ஒருவழியாக! தாகத்தில் உயிர் போகிறது; ஆனால் நாம் தண்ணீர் பாட்டிலை படகிலேயே விட்டுவிட்டோம்.
இந்தப் பழங்கள் மிகவும் சாறு நிறைந்தவை. நாங்கள் இவற்றை மரம்போன்கள் என்று அழைப்போம்... உங்களுக்கு இவற்றைத் தெரியுமா?
சற்றும் தெரியாது!
இந்தப் பாதை ஃபெல்டனுக்குச் செல்கிறது, அல்லவா?
ஆம், ஆனால் நடந்தே சென்றால் அது மிகவும் தூரம்: நான்கு மணி நேர நடைப்பயணம்... அந்த நபரைச் சந்திப்பது உங்களுக்கு அவ்வளவு முக்கியமா?
குறிப்பாக இப்போது நடந்த சம்பவத்திற்குப் பிறகு, இங்கே நடக்கும் இந்த விசித்திரமான விஷயங்கள் பலவற்றையும் இவரால் விளக்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்! இவர் பல ஆண்டுகளாகவே கடல்வாழ் உயிரினங்களைப் பற்றி, அதிலும் குறிப்பாக அந்த விசித்திரமான ராட்சத விலங்கைப் பற்றி ஆய்வு செய்து வருகிறார்.
முதலில் நாம் கிராமத்திற்குத் திரும்புவோம்... கடல் அதன் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை என்றால், இந்தச் சாலையின் வழியாக உங்களை ஃபெல்டன் நகருக்கு அழைத்துச் செல்ல ஏதேனும் வாகன வசதியை நான் ஏற்பாடு செய்ய முயற்சிக்கிறேன்.






























No comments:
Post a Comment