Thursday, February 24, 2022

மலைவனத்தின் கொடுங்கரடி

 








ஒருநாள் இரவு மர அணையும் கறுப்பு முகமூடியும் 
( கரடி போன்ற தோற்றமூடைய Raccoon எனும் சிறு விலங்கினம்.) 
யகரியை காண வருகின்றனர். கறுப்பு முகமூடியின் பெற்றோர் காணாமல் போய்விட்டனர் என்றும்,  அவர்களை தேடிப்போன ஆயிரம் வாயனும் திரும்பி வரவில்லை என்றும் தெரிவித்து மலைப்பகுதியில் அவர்களை தேட யகரியின் உதவியை கேட்கின்றனர்.

'ஆபத்துக் காலத்தில் நண்பனை நாடு'  எனும் முதுமொழிக்கேற்ப தன்னை தேடி வந்திருக்கும் அவர்களுக்கு உதவுவதாக யகரி வாக்களிக்கிறான்.





மறுநாள் இடிக்குட்டியுடன் மலைப்பகுதியில் தேடலை துவக்கும் யகரி  ஒரு ஓநாய்க் குடும்பத்தை சந்திக்கிறான். 
யகரியிடமிருந்து விவரங்களை கேட்டறியும் தாய் ஓநாய் தன் குட்டிகளிடம் 'நாம் இன்னும் கவனத்துடன் இருக்க வேண்டும்.' என்று எச்சரிக்கிறது.

இடிக்குட்டியும் 'குகைக்கு வெளியே சுற்றித் திரிய வேண்டாம்.' என்று ஓநாய்க் குட்டிகளுக்கு அறிவுரை கூறியது.

பின்னர் யகரியும் இடிக்குட்டியும் ஒரு நீர்நாயை (Otter) சந்திக்கிறார்கள்.

 அந்த நீர்நாய் தன் தோழன் காணாமல் போய் விட்டதாக கூறி வருந்துகிறது. 
 
 நீர்நாய்க்கு ஏற்கனவே காணாமல் போவர்களைப் பற்றி விளக்கும் யகரி அதன் துணையையும் தேடுவதாக வாக்களித்து அதை பீவெர்களின் கிராமத்தில் பாதுகாப்பாக இருக்கும்படி கூறி அனுப்பி வைக்கிறான்.

அன்றைய தேடலில் அவர்களுக்கு தடயம் எதுவும் கிடைக்கவில்லை. இரவில் அவர்கள் உறங்கும் போது  தொலைவிலிருந்து பயங்கரமான அலறல் சத்தம் கேட்கிறது. 

 

அவர்கள் அது என்ன சத்தம் என்று புரியாமல் திகைக்கும் போது , அருகில் இருந்த ஒரு ஆந்தை, அந்த சத்தம் சிறிது காலமாகவே கேட்பதாகவும்,  மலை உச்சியில் விசித்திரமா சம்பவங்கள் நடப்பதால் அங்கு செல்ல வேண்டாம்,  என்றும் எச்சரிக்கிறது. 

நண்பர்களை மீட்க எந்த ஆபத்தையும் எதிர் கொள்ளத் துணியும் யகரி
 மறுநாள் மலை உச்சிக்கு செல்ல வேண்டும் என்ற தீர்மானத்துடன் உறங்க செல்கிறான்.




காலையில் 'ஒரு கட்டுமானத்தின் மேற்பார்வையாளன் நாள் முழுவதும் பெர்ரி பழங்களை கொய்து கொண்டிருப்பது எவ்வளவு அவமானம்.' என்று தனியே புலம்பிக் கொண்டிருக்கும் ஆயிரம் வாயனை காண்கின்றனர்.  
ஆயிரம் வாயன் இவர்களை கண்டதும் யாரையோ மனதில் எண்ணி மிரண்டு ஓடுகிறான். 




அவனை தொடர்ந்து செல்லும் யகரியும் இடிக்குட்டியும் மலை உச்சியில் காணாமல் போனவர்களை அடிமையாக வைத்து உண்டு கொழுக்கும் ஒரு கொடுங்கரடியை சந்திக்கின்றனர்.


 எளியவர்களின் உழைப்பை உறிஞ்சி கொழுக்கும் முதலாளிகளைப் போல சிறு விலங்குகளை மிரட்டி தனக்கு உணவு தேடிக் கொண்டு வரச்செய்கிறது அந்தக் கொடுங்கரடி.




அந்த இழி செயலை தைரியமாக எதிர்க்கும் யகரியை கொடுங்கரடி தாக்க முயல்கிறது.


அதனிடமிருந்து தப்பி வந்த யகரி ஆயிரம் வாயனை சந்திக்கிறான். ஒற்றுமையாக கொடுங்கரடியை எதிர்க்க அழைக்கிறான். 

ஆனால் எதிரியின் பலம், பலவீனம்  அறிந்து தாக்க வேண்டும் என்பதை உணர்ந்துள்ள ஆயிரம் வாயன் பலம் மிக்க கொடுங்கரடியை எதிர்க்க முடியாது என்றும் தங்களை மறந்து விடும்படியும் கூறிச் செல்கிறான்.




நண்பர்களை மீட்கும் வழிவகை புரியாமல் யகரி திகைக்கும் போது அவனது சோதனையான நேரங்களில் வழி நடத்தும் குலதெய்வம்   பெரும் கழுகார் வருகிறார். நம்பிக்கையை எந்நேரத்திலும் இழக்கக்கூடாது என்று தேற்றுகிறார். பொறுமையே சிறந்த நண்பன் என்றும்
குளிர்காலம் பிரச்சனைக்குத் தீர்வை கொண்டு வரும் என்றும் கூறிச்செல்கிறார்.


பெரும் கழுகார் கூறியதை யோசிக்கும் யகரிக்கு கரடிகள் குளிர்காலத்தில் உறங்கும் வழக்கம் நினைவுக்கு வருகிறது.

மற்ற தோழர்களுடனும் பீவெர் கிராமத்தினருடனும் கலந்தாலோசித்து இலையுதிர் காலத்தின் முடிவில் கொடுங்கரடிக்கு இறால், சால்மன் மீன், கனிந்த பெர்ரி பழங்கள்,  இனிப்பு மிகுந்த தேனடை என பலமான விருந்துக்கு ஏற்பாடு செய்கிறான்.

வயிறு புடைக்க அனைத்தையும் உண்ட கொடுங்கரடி கும்பகர்ணனைப் போல தூங்குகிறது. குளிர்காலமும் துவங்குகிறது.






குளிர்கால உறக்கத்தில் ஆழ்ந்து விட்ட கொடுங்கரடியிடமிருந்து நண்பர்களுக்கு நிரந்தரமான விடுதலையை அளிக்க தீர்மானித்த யகரி கொடுங்கரடியை தோழர்களின் உதவியுடன் பனியில் இழுத்துச் சென்று நீர் உறைந்த ஏரி சூழ்ந்த ஒரு தீவின் குகையில் சேர்க்கிறான். 




குளிர்காலத்தின் முடிவில் உறக்கம் கலைந்து எழும் கொடுங்கரடி ஆற்றுநீர் சூழ்ந்த தீவில் தான் தனிமையில் சிக்கி இருப்பதை உணர்ந்து உதவி கோருகிறது.  அதனிடம் 
தன் நண்பர்களுக்கு மீண்டும் தொல்லை கொடுப்பதில்லை என்ற உறுதியை வாங்கிக் கொண்டு அதற்கு நீந்த கற்றுக் கொடுத்து கரையேற்றுகிறான் யகரி.  

மறுநாள்
யகரியின் தோழர்கள்  அனைவருக்கும் விருந்தளித்து மகிழ்ந்தது யகரியின் முயற்சியால் திருந்திய கொடுங்கரடி.


மீண்டும் சந்திப்போம்!



********










Raccoon 

ரக்கூன் என்பது வட அமெரிக்காவில் பெரிதும் காணப்படும் நடுத்தர அளவுள்ள விலங்கு ஆகும். இவை ஐரோப்பாவிலும் ஜப்பானிலும் சில இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 ரக்கூன் 42-71 செமீ நீளம் உடையது. கிட்டத்தட்ட 22.8-30.4 செமீ உயரம் உடையது. அதன் எடை 3.8-9.0 கிகி-க்கு இடைப்பட்டது. இவை ரொறன்ரோ போன்ற பெரும் நகரங்களிலும் வாழ்கின்றன. பெரும் நகரங்களில் ரக்கூன்கள் இரவில் இரை தேடி அலையும் போது அவதானிக்க முடியும்.


Owl

Range of the owl, all species. ஒலிப்பு (உதவி·தகவல்)) ஸ்ட்றைஜிபோர்மெஸ் வரிசையைச் சேர்ந்த, தனித்த, இரவில் திரியும் 200 வகைப் பறவைகளில் ஒன்றைக் குறிக்கும். ஆந்தைகள் பெரும்பாலும் சிறிய பாலூட்டிகள், பூச்சிகள், மற்றும் ஏனைய பறவைகளை வேட்டையாடும்.



Otter

நீர்நாய் (Otter) என்பது நீரில் வாழ தன்னை ஓரளவு தகவமைத்துக்கொண்ட ஒருவகைப் பாலூட்டி விலங்கு. நீர்நாய்கள் பொதுவாக மீன்கள், சிறிய நிலநீர்வாழிகள், பறவைகள் முதலியவற்றை இரையாகக் கொள்கின்றன. நீர்நாய்களில் மொத்தம் 13 சிற்றினங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.



Grizzly


கொடுங்கரடி (Grizzly bear) ஒரு வகைக் கரடி இனமாகும். இது வட அமெரிக்காவின் மேற்குப் பகுதி உயர்நிலங்களில் வாழ்கிறது. இது 180 முதல் 680 கிலோகிராம் எடையுடையதாகக் காணப்படுகிறது. கொடுங்கரடிகளில் ஆண் கரடி பெண்ணைவிட 1.8 மடங்கு எடையுடையதாகும்.



கரடி (About this soundஒலிப்பு (உதவி·தகவல்)) (Bear), ஒரு ஊனுண்ணிப் பாலூட்டி விலங்கு இவ்வினத்தைச் சேர்ந்த பனிக்கரடிகளும், கொடுங்கரடிகள் (Grizzly bear) என்னும் பழுப்பு நிறக்கரடிகளும் ஊனுண்ணிப் பாலூட்டிகள் யாவற்றினும் மிக பெரியது ஆகும் . ஆசியக் கருங்கரடி போன்ற சில சிறியவகைக் கரடிகள் அனைத்துண்ணிகளாக உள்ளன.

 துருவக் கரடிகள் பெரிய உருவத்தைக் கொண்டவை. இவை, பனி படர்ந்த துருவப் பகுதியில் எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் வெண்மை நிறம் கொண்டவை. எஸ்கிமோக்களின் மொழியில் "ஆர்க்டோஸ் (Arctos) என்றால் கரடிகளின் பிரதேசம் என்று அர்த்தம். இதனால்தான் வட துருவப் பகுதிக்கு "ஆர்க்டிக்' என்ற பெயர் வந்தது.


உயிரின அறிவியலார் கரடியினத்தை ஊர்சிடே (Ursidae) என்னும் பெரும் பிரிவில் காட்டுவர். ஊர்சசு (Ursus) என்றால் இலத்தீன் மொழியில் கரடி என்று பொருள். இதன் அடிப்படையில் ஊர்சிடே என்பது இவ்வினத்தைக் குறித்தது. இந்த ஊர்சிடேயின் உட்பிரிவில் ஐந்தே ஐந்து இனங்கள் தாம் உள்ளன. அவற்றுள் நான்கினுடைய உட்பிரிவில் ஒவ்வொன்றுக்கும் ஒரு வகைதான் உள்ளது. ஆப்பிரிக்கக் கண்டத்திலும், ஆஸ்திரேலியாவிலும் கரடிகள் இல்லை. 

தென் அமெரிக்காவின் வட பகுதியில் மட்டும் சிறு நிலப்பரப்பிலே சில வகை கரடிகள் வாழ்கின்றன. கரடிகளின் கண்கள் சிறிதாக இருக்கும். இவை, குறைந்த பார்வைத் திறன் உடையவை ஆனால் நல்ல மோப்பத் திறனும் கேட்கும் திறனும் கொண்டவை; உடலில் அதிக முடிகளைக் கொண்டுள்ளன. மேலும் இவை இரண்டு கால்களினால் நிற்க வல்லவை. கரடிகள், வேட்டையாடவும் எதிரிகளைத்தாக்கவும் நீண்டு வளைந்திருக்கும் தங்கள் கூரான நகங்களைப் பயன்படுத்துகின்றன. இந்த நகங்களில் சகதியும் அழுக்கும் சேர்ந்திருக்கும். பாக்டீரியாக்கள் மிகுந்திருக்கும். எனவே இவற்றால் தாக்கப்படுபவரின் காயங்கள் எளிதில் குணமடையாது.


கரடிகள் சராசரியாக நான்கு அடி உயரமும் நூற்றுப் பதினைந்து கிலோ எடையும் கொண்டவை. தோலுக்காகவும், மருத்துவ குணம் கொண்டதாகக் கருதப்படும் அவற்றின் கணையத்திற்காகவும் அவை வேட்டையாடப்படுகின்றன. கோடை காலத்தில் கரடிகள் இனப்பெருக்கம் செய்கின்றன. இவற்றின் கர்ப்ப காலம் ஏழு மாதங்கள். ஒரு முறையில் இரண்டு குட்டிகள் பிறக்கும். குட்டிகளுக்கு இரண்டு அல்லது மூன்று வயதாகும் வரை அம்மாக் கரடிகள்தான் முதுகில் தங்கள் குட்டிகளைச் சுமந்து செல்லும். குளிர் மிகுந்த பகுதிகளில் வாழும் கரடிகள் மிகக் கடுமையான குளிர்காலம் முழுவதையும் ஆழ்ந்த உறக்கத்திலேயே (Hibernation ) கழித்துவிடுகின்றன.

 துருவப் பகுதியில் வாழும் கரடிகள் பல மாதங்கள் இப்படி உறங்கும் தனித்துவமான தன்மை கொண்டவை. அவ்வாறு உறங்கும் போது இவற்றின் உடலில் இருக்கும் சக்தி விரயமாகாமல் இருப்பதற்காக இவற்றின் இதயத் துடிப்பு மிகவும் குறைந்துவிடும். இவ்வாறு சுய நினைவு இல்லாமல் இருக்கும் நிலையில் இவை குட்டிகளை ஈனுகின்றன. துருவக் கரடிகள் ஒரு முறையில் ஒன்றிலிருந்து மூன்று குட்டிகள் ஈனும்.



*********




No comments:

Post a Comment