Saturday, September 10, 2022

The kid!

 



ஆர்தர் ரிம்பாட்டின் கவிதைகளில் ஆர்வமுள்ள இளைஞனான எமிலி டர்னர், அவனது தோழி லாராவுடன் இணைந்து வங்கிக் கொள்ளையில்  ஈடுபட்டபோது நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில்  லாரா கொல்லப்படுகிறாள்.


அதன் பின்னர் ஒன்பது கொலைகளுக்கான பழியுடன் வாழ்வில் பிடிப்பின்றி அலையும் எமிலியை பிடிக்க மேலிடத்தால் ட்ரெண்ட் அனுப்பப்படுகிறார்.


எமிலியின் பாதை எளிதாக கண்டு பிடிக்கக்கூடியதாகவும் உயிர்ப்பலிகளையும் ரசிகர்களையும் உருவாக்குவதாகவும் முரண்பாடாக உள்ளது. ட்ரெண்ட் அவனைக் கண்டு பிடித்துக் கைது செய்கிறார்.


ரிம்பாட்டின் கவிதைகளில் மூழ்கியிருக்கும் எமிழியின் கேள்விகள் தனக்கு விதிக்கப்பட இருக்கும் தண்டனை பற்றியதாக உள்ளது.


அப்போது சிறையிலிருந்து தப்பிய சில கைதிகள் இவர்களை கொள்ளையடிக்க முயல்கின்றனர்.


 மின்னல் வேக துப்பாக்கிச் சண்டையில் அவர்களை தீர்த்துக்கட்டும் எமிலி, ட்ரெண்டை மயக்கமடையச் செய்து விட்டு தான் கடைசியாக சில இளைஞர்களைக் கொன்ற கிராமத்துக்குத் திரும்பிச் செல்கிறான். ஒரு முடிவோடு...




இங்கே கிளிக்: ஆர்தர் ரிம்பாட்




*******++++++******+++++******++++++****

Monday, September 5, 2022

2,அபாயத்தை அழைக்காதே!

 



மர்மக் கொலைஞனான ஜாக் தி ரிப்பரின் ஆவியை மீடியம் (ஆவிகளுடன் பேசுதல் ) மூலம் அழைக்கிறார் ஒரு பெண்மனி, தொடர்ந்து அந்த மீடிய நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவரும் ஜாக் தி ரிப்பரால் குரூரமாகக்   கொல்லப்படுகிறார்கள். 

புதிரான இந்த வழக்கை அமானுஷ்ய நிகழ்வுகளை ஆராயும் நிபுணர் டைலன்டாக் விசாரிக்கத் துவங்கினார்.


விறுவிறுப்பான திகில் த்ரில்லர்.

வருங்கால மனைவி 😂


தன் மனைவியுடன் பேசுவதற்கு வீட்டுக்கு போன் செய்த ஒரு கனவானைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

தொலைபேசியை எடுத்த பணியாளர் கூறினார்: "மன்னியுங்கள் ஐயா! உங்கள் மனைவி வெறொரு ஆணுடன் படுக்கையில் இருக்கிறார்."

அதைக்கேட்ட கனவான் பணியாளரிடம் கூறினார்: "துப்பாக்கியை எடுத்து இருவரையும் சுட்டுக் கொன்று விடு." 

சிறிது நேரம் கழித்து  தொலைபேசியில் பணியாளர் கனவானிடம் கூறினார்:  "நீங்கள் கூறியபடி செய்து விட்டேன் ஐயா! "

நல்லது!  துப்பாக்கியை என்ன செய்தாய்?

அதை நீச்சல்  குளத்தில் எறிந்து விட்டேன் ஐயா!

நீச்சல் குளமா? நம் வீட்டில் நீச்சல் குளமே கிடையாதே!
கொஞ்சம் பொறு,  நான் எந்த எண்ணுக்கு டயல் செய்தேன்? 



#ஸாரி ராங் நம்பர் 😂






கிழிக்கும் ஜேக் (ஜாக் த ரிப்பர், ஆங்கிலம்: Jack the Ripper) 1888 இல், கிழக்கு லண்டனில் ஒயிட்சேபல் வட்டத்தில் பல கோரமான கொலைகளை செய்த மர்ம நபருக்கு வழங்கப்படும் பெயராகும். கொலையுண்டவர்கள் விபசாரிகள். பல வருடங்களாக மிக தீவிர போலீஸ் துப்பு தேடியும், கொலைகாரன் யார் எனக் கண்டு பிடிக்கப்படவில்லை. அதனால் இன்றுவரை, புத்தகம், சினிமா, தொலைகாட்சி மூலமாக யார் அவன் என பல வதந்திகள் பரவி வருகின்றன. 'கிழிப்பர் இயல்' என விளையாட்டாக புது வகையே ஆரம்பித்தது.


*****