எனது தையல் குரு திருநெல்வேலி சாமி தையலக முதலாளி திரு P.செல்வராஜ் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியுடன்...
பேண்ட் கட்டிங்!
அளவுகள்:
உயரம்
மூட்டு
அடிங்கால்
அடிங்கால் லூஸ்
மூட்டு லூஸ்
இடுப்பு
சீட்
தொடைலூஸ்
பாதம் லூஸ்
சீட் லூஸ்
1, துணியின் மேல் பகுதியில் ஒரு இன்ச் மார்க் பண்ணவும்.
2, அந்த மார்க்கில் டேப்பை 1 1/2 இன்ச் வைத்து அதிலிருந்து உயரம் அளவு மார்க் பண்ணவும்.
3, அதிலிருந்து கீழ்பட்டி 2 1/2 இன்ச் மார்க் பண்ணவும்.
4. டேப்ஐ எடுக்காமல் மூட்டு அளவு மேலிருந்து கீழே மார்க் பண்ணவும்.
5. கீழ்பட்டி கோட்டிலிருந்து மேலே அடிங்கால் அளவு மார்க் பண்ணவும்.
6. சீட் அளவில் 3ல் ஒருபாகத்துடன் 2 இன்ச் கூட்டி வைத்து அடிங்கால் லூஸ் அளவு மார்க் பண்ணவும்.
7, அதிலிருந்து 1, 1/2 இன்ச் கழித்து பொந்துக்கு மார்க் பண்ணயும்
8, பொந்துக்கு (ஜிப்) நேரே கோடு போடவும்
9, அதிலிருந்து சைடு தையலுக்கு 1/2 இன்ச் மார்க் பண்ணவும்.
10, அதிருந்து இடுப்பு அளவில் 4ல் 1பாகம் மார்க் பண்ணவும்.
11, அதிலிருந்து பிளிட்டுக்கு 2 1/2 இன்ச் மார்க் பண்ணவும்.
12, அதிலிருந்து சைடு தை யலுக்கு 1/2 இன்ச் மார்க் பண்ணவும்.
13, மத்தி பார்ப்பதற்கு தொடைலூஸ் (அடிங்கால்) அளவில் பாதி அளவு வைத்து மேலிருந்து கீழேவரை கோடு போடவும்.
14, பாதம் லூஸ் அளவு பாதம் மத்திக்கோட்டிலிருந்து வலதில் பாதி அளவு, இடதில் பாதி அளவு வைக்கவும்.
15, ஸ்கேல் மூலம் கோடுகளால் இணைத்து, முழு வடிவம் கொண்டு வந்து கட் பண்ணவும்.
16, பின் தட்டுக்கு, முன் தட்டு துணியை மேலே வைத்து முன்தட்டு துணிக்கு மேல் பகுதியில் , 1, 1/2 இன்ச் வைத்து ஒரு கோடு போடவும்.
17, சீட்டு கோட்டிலிருந்து நேரே ஒரு கோடு போடவும்.
18, சீட்டு கோட்டியிருந்து கீழே 1/2 இன்ச் கீழே வைத்து ஒரு கோடு போடவும்.
18, கீழே பாட்டம் கோட்டில் நேராக ஒரு கோடு போடவும்.
19, சீட் கோட்டில் இருந்து 2, 1/2 இன்ச் வைத்து ஒரு மார்க் பண்ணவும்.
20, மூட்டு, மற்றும் கீழ் பட்டி கோட்டில் 1, 1/2 இன்ச் வைத்து மார்க் பண்ணவும்.
21, மேலிருந்து கீழே மார்க்குகளை இணைத்து கோடு போடவும்
22, மேலே இடுப்பு சைடு தையலுக்கு 1/2 இன்ச் வைத்து மார்க் பண்ணவும்.
23, இடுப்பு அளவில் 4ல் ஒரு பாகம் வைத்து இரண்டாவது மார்க் பண்ணவும்.
24, டாட்டுக்கு 1/2 இன்ச் வைத்து மூன்றாவது மார்க் பண்ணவும்.
25, எக்ஸ்ட்ரா தையலுக்கு 2 இன்ச் வைத்து நான்காவது மார்க் பண்ணவும்.
26, சீட் லூஸ் அளவு புள்ளி வைக்கவும்.
27, கோடுகளால் இணைத்து முழு வடிவம் கொண்டு வந்து கட் பண்ணவும்.
No comments:
Post a Comment