...மரணத்தின் நிழல் படர்ந்த சமவெளியில் நடந்தாலும் தீமையைக் கண்டு நான் அஞ்சமாட்டேன்...
லில்லிமன் போன்ற அரசு உயரதிகாரிகளும் கூட அரசால் கண்காணிக்கப் படுகின்றனர் என்பதை இந்தக்கட்டம் விளக்குகிறது.
வியின் கொலை பாணியை ஃபின்ச் புரிந்து கொள்ளத் தொடங்குகிறார். பீத்தோவனின் இசை, ரோஜாக்கள் போன்றவை அரசாங்கத்தால் அழிக்கப்பட்ட கலாச்சாரம் மற்றும் அழகை அவருக்கு நினைவூட்டுவது போல இருக்கிறது.
வி மற்றும் மதருவின் குரல்களை பகுப்பாய்வுக்காக பிரித்தெடுக்க முடியாத அளவுக்கு பின்னணியில் வி பீத்தோவனின் ஐந்தாவது சிம்பொனியை எழுப்பியதால், வி பிஷப்பைக் கொன்ற பதிவிலிருந்து உரையாடல்களை சேகரிக்க சிரமப்படுகிறார்கள். பீத்தோவனின் ஐந்தாவது சிம்பொனியின் தொடக்கமானது "V" என்ற எழுத்துக்கான தந்திக் குறியீடு என்று ஃபின்ச் சுட்டிக்காட்டுகிறார்.
Da Da Da Dum ஐந்தாவது சிம்பொனி ரோமன் எண்ணில் V
ஐந்தாவது சிம்பொனி பற்றி பீத்தோவனிடம் அவரது உதவியாளர் கேட்டபோது, அது 'விதி கதவைத் தட்டும் சத்தம்' என்று கூறினார்.
YouTube link :
Da Da Da Dum
லில்லிமனின் சிறுமிகள் மீதான உடலுறவு ஆசை பற்றி எரிக்ஃபின்ச்சும் அறிந்தவராகவே உள்ளார்.
எரிக்ஃபிஞ்ச் முந்தைய இரவில் நடந்ததை மறுகட்டமைக்க முயற்சிக்கிறார். மதகுரு லில்லிமன் தனது அறையில் ஒரு சிறுமியுடன் தனியாக இருந்தார். அவள் Vன் கூட்டாளியாக இருக்கலாம் , ஏனென்றால் அவள் எங்கும் காணப்படவில்லை.
அது ஈவி ஹம்மான்ட் என்பது நமக்குத் தெரியும்.
"நான்தான் சாத்தான். சாத்தானின் வேலையைச் செய்ய வந்திருக்கிறேன்."இது ஒரு மேற்கோள். நடிகை ஷரோன் டேட் ( sharon tate) கொலை வழக்குடன் தொடர்புடையது.
சார்லஸ் மேன்சன் ( charles monson) 1960 களின் பிற்பகுதியில் கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட ஒரு வழிபாட்டு முறையான மேன்சன் ஃபேமிலியை வழிநடத்திய ஒரு அமெரிக்க குற்றவாளி .
வன்முறை, போதை மருந்து, கட்டற்ற பாலியல் உறவு என்று அவரும் அவரது குழுவினரும் ஹிப்பி கலாச்சாரத்தில் திளைத்தனர்.
மேன்சனின் சீடர்கள் அவரது ஆணைப்படி 1969 ஜுலை மற்றும் ஆகஸ்டில் நான்கு இடங்களில் ஒன்பது கொலைகள் செய்தனர்.
ஆகஸ்ட் 9, 1969 அன்று, திரைப்பட இயக்குனர் ரோமன் போலன்ஸ்கியின் பெவர்லி ஹில்ஸ், கலிபோர்னியா வீட்டில் சார்லஸ் மேன்சனின் சீடர்கள் போலன்ஸ்கியின் கர்ப்பிணி மனைவி நடிகை ஷரோன் டேட் உட்பட ஐந்து பேரைக் கொன்றனர்.
கொலைகளுக்கு முன் வீட்டில் இருந்தவர்கள் "நீங்கள் யார்?" என்று கேட்டதற்கு, 'நான்தான் சாத்தான். சாத்தானின் வேலையைச் செய்ய வந்திருக்கிறேன்.' என்று பதில் வந்தது.
ஷரோன் டேட் பதினாறு முறை கத்தியால் குத்திக் கொல்லப்பட்டிருந்தார். அவருடன் இருந்த நான்கு நண்பர்களும் கொல்லப்பட்டனர். இரத்தக்களரியாக நிகழ்ந்த அந்தக் கொலைகள் நாட்டையே அதிர வைத்தது.
சார்லஸ் மேன்சனுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுப் பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இங்கே V அந்த நிகழ்வை மேற்கோள் காட்டி லில்லிமனின் முடிவை முன்னறிவிக்கிறான்.
இந்த கொலை வழக்குப் பற்றி விரிவாக அறிந்து கொள்ள charles monson the devil's work என சர்ச் செய்து பாருங்கள்.
மதன் எழுதிய 'மனிதனுக்குள் ஒரு மிருகம்' புத்தகத்திலும் சார்லஸ் மேன்சன் பற்றி எழுதப்பட்டுள்ளது.
இதை எதில் செய்திருந்தாலும் மீட்பரின் சரீரமாக மாறுமா?
தேவாலயத்தின் பிரசங்கத்தின்போது நற்கருணையாக திராட்சை இரசத்தில் தோய்த்து அளிக்கப்படும் அப்பம் வயிற்றினுள் சென்றதும் இயேசுவின் உடலாக மாறுகிறது என்பது கிறிஸ்தவ நம்பிக்கை.
V கிறிஸ்தவ மதகுரு லில்லிமனுக்கு சயனைட் விஷம் தோய்ந்த அப்பத்தைக் கொடுக்கும் முன் (அது சயனைட் விஷத்தில் தோய்க்கப்பட்டிருப்பது லில்லிமனுக்குத் தெரியாது.) 'அந்த அப்பம் எதில் செய்யப்பட்டிருந்தாலும் உண்ட பின் இயேசுவின் உடலாக மாறுமா?' என கேட்கிறான்.
ஆம்! என பதிலளிக்கிறார் லில்லிமன்.
அவருக்கு சயனைட் தோய்ந்த அப்பத்தை புகட்டுகிறான் V .
இந்த உரையாடலின் ஆடியோ பதிவை பின்னர் கேட்கும் ஃபின்ச் அந்த விஷ அப்பம் லில்லிமனின் வயிற்றுக்குள் சென்றபின் அவருடைய நம்பிக்கையின் படி இயேசுவின் உடலாக மாறாமல் கடைசி வரை விஷமாகவே இருந்து அவரை பலி கொண்ட முரண்நகையை சுட்டிக் காட்டுகிறார்.
லில்லிமன் இறந்த விதம் முரண்பாடாக பொருத்தமானது. V லில்லிமனுக்கு விஷம் கலந்த. அப்பம் ஒன்றைக் கொடுக்கிறான்.
அப்பம் கிறிஸ்துவின் உடலாக மாறும் என்று கிறிஸ்தவம் கற்பித்தாலும், Vயின் விஷம் கலந்த அப்பம் லில்லிமனை மதப் பரவசத்தால் நிரப்புவதற்குப் பதிலாக அவரைக் கொன்றது.
மதகுரு அந்தோனி லில்லிமன் ஒரு பாசாங்குத்தனமான, மிகவும் ஊழல் நிறைந்த மதகுரு ஆவார், அவர் Vயிடம் நிகழ்த்தும் உரையாடல்களிலிருந்து அலரும் ஒரு காலத்தில் லார்க்ஹில் வதைமுகாமில் பணியாற்றியிருப்பதாக தெரிய வருகிறது. பின்னர் லில்லிமன் வெஸ்ட்மின்ஸ்டர் மதகுருவாக உயர்ந்தார், அங்கு அவர் ஒரு இனவெறி, இரத்தவெறி மனப்பான்மையைக் காட்டிக் கொடுக்கும் பிரசங்கங்களை வழங்கினார்.
பைபிளின் வசனங்களை வாசித்து அப்பம் அளித்து V லில்லிமனுக்கு அவருடைய மதவழியிலேயே தீர்ப்பளித்திருக்கிறான்.
*******
ஷரோன் டேட்
சார்லஸ் மேன்சன்
பீத்தோவன்
********
தொடரும்...