...அதோவொரு பெண். அவள் தள்ளுவாள்; இழுக்கமாட்டாள். தந்தையின் அன்புக்கு ஏங்குவாள். இந்தக் கையுறைக்குக் கீழிருக்கும் கையைத்தான் ஒருவேளை பிடிக்க வேண்டியிருக்கும் என்று அவள் நம்புகிறாள்.
விருந்தளிப்பவரின் ஒழுக்கங்களை அவள் சந்தேகித்தாலும், வெளியில் குளிரில் இருப்பதைவிட பிடித்ததைச் செய்யும் நிலத்தில் மேலும் தளர்வாய் இருப்பதை உணர்கிறாள்...
"வெளியில் குளிரில்" (அக்கறையற்ற உலகில்)
தாமஸ் பிஞ்சனின் V நாவல்
ஈவி மதகுரு லில்லிமனின் கொலைக்கான உடந்தைக் குற்றத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சிக்கிறாள். ஆனால் அவளே துப்பாக்கி ஏந்தும் காலம் ஒன்றும் வரும்.
யாரும் சந்தேகித்திருப்பதற்கும் அதிகமானவை Vக்குப் பின்னாலும் உள்ளுக்குள்ளும் உள்ளன. யார் என்பதல்ல. என்ன என்பதுதான்: அவள் என்ன.
இந்த வரிகள் V ஒரு பெண்ணா? என்ற குழப்பத்தை வாசகருக்கு ஏற்படுத்தலாம், உண்மையில் இது தாமஸ் பிஞ்சன் 1963ல் எழுதிய V நாவலில் இருந்து ஒரு மேற்கோள் ஆகும், அந்த நாவலில் V என்ற பெயரில் ஒரு மர்மமான பெண் கதாபாத்திரம் உள்ளது.
பிஞ்சனின் நாவலில் V என்ற கதாபாத்திரம் ஒரு நிரந்தரமான மழுப்பலான சிந்தனையாகும். நாவல் V பற்றி எந்த உணர்வும் இல்லாமல் முடிவடைகிறது.
பல விதங்களில், ஆலன்மூரின் V தாமஸ் பிஞ்சனின் V கதாபாத்திரத்தைப் போலவே உள்ளது.
பல கதாபாத்திரங்கள் தங்கள் சொந்த காரணங்களுக்காக துரத்தப்படும் ஒரு கருத்தை அவள் பிரதிநிதித்துவப்படுத்துகிறாள், ஆனால் அவளது உண்மையான அடையாளம் எப்போதும் மர்மமாகவே இருக்கும்.
இந்த மேற்கோள் ஆலன்மூரின் Vயின் அடையாளமும் அதேபோன்று ஒருபோதும் வெளிப்படுத்தப்படாமல் போகக்கூடிய வாய்ப்பு இருப்பதைக் காட்டுகிறது.
Enid Blyton In A f faraway tree
V ஈவிக்கு ஒரு தந்தை தன் மகளுக்கு கதை சொல்லி உறங்க வைப்பதைப் போன்று
A faraway tree (தொலைதூரத்தில் உள்ள மரம்) புத்தக வரிசையின்
The land of do as you please (நீங்கள் விரும்பியபடி செய்யும் நிலம்.)
சிறுவர் கதையை வாசித்து உறங்க வைக்கிறான்.
ஈவி மனதளவில் இன்னும் சிறுமியாகவும் தந்தை மீதான ஏக்கங்கள் நிறைந்தவளாகவும், Vயின் இரகசியக் கலைக்கூடம் எனும் பாதுகாப்பான நிலத்திலிருந்து வெளியேறி சோதனைகள் நிறைந்த உண்மையான உலகை எதிர்கொள்ள அஞ்சுபவளாகவும் இருக்கிறாள்.
//இந்த நிலம் சீக்கிரமே நகர்ந்துவிடும். என்னதான் நன்றாக இருந்தாலும், நாம் இங்கேயே எப்போதும் வாழ முடியாது.//
பாரவேட்ரீ கதையிலிருந்து V ஈவிக்கு வாசிக்கும் இந்த வரிகளுக்கு ஒரு மறைமுமான அர்த்தமும் உண்டு.
டெரக் அல்மோன்ட் தன் மனைவியை நடத்தும் விதங்களும், மேஜையில் காட்சிப்படுத்தப்படும் மதுப்புட்டியும் அவனைப்பற்றிய சித்திரங்களை வாசகனுக்கு வழங்குகிறது.
அவன் வன்முறை நிறைந்த ஒரு துராத்மா.
மருத்துவர் டெலியா சர்ரிட்ஜ்க்கு ஒரு வயலட் கார்சன் ரோஜா பழைய சம்பவங்கள் சிலவற்றை நினைவூட்டுகிறது,
அவள் எப்போதும் குற்றவுணர்வுடன் நாட்களை தள்ள காரணமாகிய பழைய சம்பவங்களை...
********
தொடரும்...
No comments:
Post a Comment