Sunday, November 7, 2021

7, தர்மம் வெல்லும்

 



Please allow me to introduce myself.
I'm a man of wealth.
 and taste....


'டென்னிஸ்'  மதகுரு லில்லிமனின் உதவியாளர்.  அவர் மதகுருவின் சிறுமிகள் மீதான பாலியல் நடவடிக்கைகளுக்கு துணை செல்பவராக இருக்கிறார்.

மதகுரு அந்தோணி லில்லிமனின் சிறுமிகள் மீதான பாலியல் வக்கிரம் சாதாரண காவலாளிகள் கூட அறிந்த ஒன்றாகவே உள்ளது.

ஈவி Vக்கு உதவியாக செயல்படுகிறாள்.
Vயிடம் ஈவி ஹம்மான்ட் செய்து கொண்ட ஒப்பந்தம் எத்தகையது என்ற விபரம் அறிய தரப்படவில்லை.

V ஈவிக்கு லில்லிமனின் கபடத்தனம் பற்றியும் அங்கு அவள் எதிர்கொள்ளப் போகும் அபாயம் பற்றியும் விளக்கி இருந்தானா என்பது பற்றியும்  விளக்கங்கள் இல்லை.


தயவு செய்து என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள அனுமதியுங்கள்.
நான் ஒரு செல்வந்தன்.
இரசனையும் உள்ளவன்...

V லில்லிமனிடம் உச்சரிக்கும் இந்த வரிகள்  1968ல் வெளியான ரோலிங் ஸ்டோனின் 'பிசாசுக்கு அனுதாபம்' என்ற ராக் இசை ஆல்பத்தின் ஆரம்ப வரிகளாகும்.

இந்த ஆல்பத்துக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் 'என் பெயர் பிசாசு' என்பதாகும்.

பிசாசு தன்னைப்பற்றி விவரிப்பது போல் அமைந்த அந்தப் பாடலின் ஆரம்ப வரிகளை உச்சரித்துக் கொண்டு தலையில் சாத்தானின் கொம்புகளையும் அணிந்து கொண்டு V மதகுரு லில்லிமனின் முன் தோன்றும் போது,  லில்லிமன் பிசாசை எதிர்கொண்ட பீதியில் மிரண்டு போகிறான்.

பாடலில் பிசாசு தன்னை ஒரு புதிரானவன் என கூறிக்கொள்வது போன்று Vயும் ஒரு புதிரானவன்தான். Vயைப் புரிந்து கொள்வதும் எளிதல்ல...


வெளிநாடுகளில் உருவாக்கப்படும் கதைகளை முழுமையாகப் புரிந்து இரசித்து அனுபவிக்க கதைகளில் புகுத்தப்பட்டுள்ள அவர்களின் கலாச்சாரங்கள்,  பாடல்கள், இலக்கியங்கள் பற்றி அறிந்திருத்தல் வேண்டும்.

கதைகளில் எந்த இடமாவது புரியாவிட்டால் அது பற்றி நண்பர்களிடம் விவாதித்து தெளிவு பெற்று கதைளை முழுமையாக இரசிக்கலாம்.


பிசாசுக்கு அனுதாபம் என்ற இந்தப்பாடல் பற்றி முன்பே அறிந்தவர்களுக்கு V கொம்புகள் அணிந்து மதகுரு முன் தோன்றுவதில் உள்ள அபாரமான மிரட்டல் தன்மை பற்றி புரிந்து விடும்.

லில்லிமன் அப்பாடலையும் அதன் உட்பொருளையும் அறிந்தவன். கடவுளின் பெயரை உச்சரித்துக் கொண்டு சிறுமிகளை நாசம் செய்யும் அவனுக்கு  Vயின் தோற்றமும் அறிமுக வரிகளும் சாத்தானை சந்தித்து விட்ட திகிலைக் கொடுக்கிறது.

இப்பாடல் பற்றி அறியாதவர்கள் அந்தக் காட்சி சொல்ல வரும் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாமலே கடந்து விடுவர்.


பிசாசுக்கான அனுதாபம் என்பது பிசாசை "புரிந்து கொள்ள" உங்களை அழைக்கும் ஒரு பாறை சம்பா. 

 இது 1978ல் எழுதப்பட்ட மிகவும் பிரபலமான ராக் பாடல்களில் ஒன்றாகும்.


பாடலில் பிசாசு தான் கதாநாயகனாக இருந்த மனித வரலாற்றின் அனைத்து துரதிர்ஷ்டங்களையும் விவரிக்கிறார், மேலும் தன்னைப் புரிந்துகொள்ள கேட்கிறார், இல்லையெனில் அவர் தன்னை மதிக்காதவர்களின் ஆன்மாவைக் கெடுப்பார். 

அவர் நூறு வருடப் போர், அக்டோபர் புரட்சி, இயேசுவின் விசாரணை, இரண்டாம் உலகப் போர் மற்றும் கென்னடிகளின் மரணம் ஆகியவற்றை மேற்கோள் காட்டுகிறார்.


பிசாசுக்கான அனுதாபம் மனிதகுலத்தின் இருண்ட பக்கத்தின் பகுப்பாய்வாக இருந்தது. 
தீமையின் சாதாரணத்தன்மையால் நம்மை மிக எளிதாக விழுங்க அனுமதிக்கும் ஒன்று, அதன் மூலம் அது விரும்பும் தீமையை நிறைவேற்ற உதவுகிறது. 
உங்களுக்குள் இருக்கும் பிசாசை நீங்கள் புரிந்து கொண்டால், ஒருவேளை நீங்கள் அவரை சமாளிக்கலாம்.




பிசாசுக்கு அனுதாபம் பாடலின் முழுமையான வரிகள்...

Sympathy for the devil

Please allow me to introduce myself
I'm a man of wealth and taste
I've been around for a long, long years
Stole million man's soul an faith

And I was 'round when Jesus Christ
Had his moment of doubt and pain
Made damn sure that Pilate
Washed his hands and sealed his fate

Pleased to meet you
Hope you guess my name
But what's puzzling you
Is the nature of my game

Stuck around St. Petersburg
When I saw it was a time for a change
Killed Tsar and his ministers
Anastasia screamed in vain

I rode a tank
Held a general's rank
When the blitzkrieg raged
And the bodies stank

Pleased to meet you
Hope you guess my name, oh yeah
Ah, what's puzzling you
Is the nature of my game, oh yeah

I watched with glee
While your kings and queens
Fought for ten decades
For the gods they made

I shouted out
Who killed the Kennedys?
When after all
It was you and me

Let me please introduce myself
I'm a man of wealth and taste
And I laid traps for troubadours
Who get killed before they reached Bombay

Pleased to meet you
Hope you guessed my name, oh yeah
But what's puzzling you
Is the nature of my game, oh yeah, get down, baby

Pleased to meet you
Hope you guessed my name, oh yeah
But what's confusing you
Is just the nature of my game

Just as every cop is a criminal
And all the sinners saints
As heads is tails
Just call me Lucifer
'Cause I'm in need of some restraint

So if you meet me
Have some courtesy
Have some sympathy, and some taste
Use all your well-learned politnesse
Or I'll lay your soul to waste, mm yeah

Pleased to meet you
Hope you guessed my name, mm yeah
But what's puzzling you
Is the nature of my game, mm mean it, get down

Woo, who
Oh yeah, get on down
Oh yeah
Aah yeah

Tell me baby, what's my name?
Tell me honey, can ya guess my name?
Tell me baby, what's my name?
I tell you one time, you're to blame

What's my name
Tell me, baby, what's my name?
Tell me, sweetie, what's my name?


தமிழில்: திரு பாலா கருப்பசாமி & M.சாக்ரடீஸ்

பிசாசுக்கு அனுதாபம்


தயவுசெய்து என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள அனுமதியுங்கள்
நான் செல்வமும் இரசனையும் நிறைந்தவன்
பல பல ஆண்டுகள் சுற்றிக் கொண்டிருக்கிறேன்
இலட்சக்கணக்கானோரின் ஆன்மாவையும் நம்பிக்கையையும் திருடினேன்

இயேசு கிறித்து சந்தேகமும் வேதனையும்
கொண்ட கணத்தில் நான் அங்கிருந்தேன்
பிலேத்து தன் கைகளைக் கழுவி அவர் 
விதியை முடிப்பதை உறுதிப்படுத்தினேன்

உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி
என் பெயரை ஊகிப்பீர்கள் என நம்புகிறேன்
ஆனால் உங்களைக் குழப்புவது
என் ஆட்டத்தின் இயல்பு

ஒரு மாற்றத்துக்கான நேரமென்று நான் கண்டுகொண்டபோது
செயிண்ட் பீட்டர்ஸ்பர்கைச் சுற்றி வந்தேன்
ஜார் மன்னரையும் அவரது அமைச்சர்களையும் கொன்றேன்
இளைய மகள் அனஸ்தேசியா வீணாகக் கதறினாள்

திடீர்த் தாக்குதல் எழுந்தபோதும்
உடல்கள் அழுகி நாறியபோதும்
ஒரு டாங்கியை ஓட்டினேன்
ஒரு படைத்தளபதியாய் இருந்தேன்

உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி
என் பெயரை ஊகிப்பீர்கள் என நம்புகிறேன், ஓ சரிதான்
ஆ, ஆனால் உங்களைக் குழப்புவது
என் ஆட்டத்தின் இயல்பு, ஓ சரிதான்

குதூகலத்தோடு பார்த்தேன்
உங்கள் அரசர்களும் அரசிகளும்
தாங்கள் உருவாக்கிய கடவுள்களுக்காக
நூறாண்டுகளாகச் சண்டையிட்டபோது

நான் கத்தினேன்
கென்னடிகளைக் கொன்றது யார்?
என்ன இருந்தாலும்
அது நீங்களும் நானும்தான்

தயவுசெய்து என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள அனுமதியுங்கள்
நான் செல்வமும் இரசனையும் நிறைந்தவன்

நான் துருப்புகளுக்கு பொறிகளை வைத்தேன்
பம்பாயை அடைவதற்குள் யார் கொல்லப்பட்டார்கள்

உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி
நீங்கள் என் பெயரை ஊகிப்பீர்கள் என்று நம்புகிறேன், 
ஆமாம் ஆனால் உங்களைக் குழப்புவது என் ஆட்டத்தின் இயல்பு
ஓ சரிதான், கீழே இறங்கு, குழந்தை

உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி
நீங்கள் என் பெயரை ஊகிப்பீர்கள் என்று நம்புகிறேன், ஓ சரிதான்
ஆனால் உங்களைக் குழப்புவது
என் ஆட்டத்தின் இயல்பு

ஒவ்வொரு காவலரும் குற்றவாளி என்பதுபோல
அனைத்து பாவிகளும் புனிதர்கள்
தலைகள் வால்கள் போல
என்னை லூசிபர் என்று அழையுங்கள்
ஏனென்றால் எனக்குக் கொஞ்சம் பணிவு தேவை

எனவே நீங்கள் என்னைச் சந்தித்தால்
கொஞ்சம் மரியாதை வேண்டும்; கொஞ்சம் அனுதாபம்; கொஞ்சம் இரசனை
உங்கள் அரசியல் அனைத்தையும் பயன்படுத்துங்கள்
அல்லது நான் உங்கள் ஆன்மாவை வீணாக்குவேன், ம்ம் சரிதான்

உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி
 நீங்கள் என் பெயரை ஊகிப்பீர்கள் என்று நம்புகிறேன், ம்ம் சரிதான்
ஆனால் உங்களைக் குழப்புவது என் ஆட்டத்தின் இயல்பு
அதாவது, ம்ம் கீழே இறங்கு

கேட்கிறேன், யார்
ஓ, கீழே இறங்கு
ஓ சரிதான்
ஆ சரிதான்

சொல் குழந்தாய், என் பெயர் என்ன?
சொல் அன்பே, என் பெயரை ஊகிக்க முடியுமா?
சொல் குழந்தாய், என் பெயர் என்ன?
நான் உங்களுக்கு ஒருமுறை சொல்கிறேன், நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்கள்

என்னுடைய பெயர் என்ன
சொல், குழந்தாய், என் பெயர் என்ன?
சொல்லேன் செல்லமே, என் பெயர் என்ன?

***********

இசை ஆல்பத்துக்கு YouTube ல்
Sympathy for the devil என சர்ச் செய்யுங்கள்.
 



தொடரும்...

2 comments:

  1. அற்புதம் படைத்துள்ளீர்கள்.
    ஒவ்வொரு வார்த்தையும் உங்களின் திறமையை புலமையை எடுத்தியம்பும்.

    ReplyDelete