Friday, July 15, 2022

கல்வி கொடுத்த வள்ளல்


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா ...

அரசியல் நாகரீகத்தின் ஆண்டவனே - பல
அணைகளைக்கட்டி மாண்டவனே
எதிரியும் புகழ்ந்த நல்லவனே - உம்மை
எடுத்ததால் எமனும் கெட்டவனே ...

கல்விக்கண்ணை திறந்துவைத்து - நீர்
கண்மூடிப் போனதென்ன
காணிநிலம் கூடயின்றி - நீர்
கடைசிவரை வாழ்ந்ததென்ன ...

ஆண்டவனே வந்தாலும் - உம்போல்
ஆளமுடியுமா தெரியலியே
மாண்டவனே உமையெழுப்பி - மீண்டும்
ஆளச்சொல்ல வழியில்லையே ...

பெரும்தலைவா கர்மவீரா - உமை
காணாதது என்பாவம்
பிறந்தநாளில் கூட வாழ்த்தாவிட்டால் - பிடிக்கும்
என் இனத்திற்கே பெரும்சாபம் ...

இவ்வுலகம் இருக்கும்வரை - ஐயா
உம் உருவம் நிலைத்துநிற்கும்
நீர்போட்ட கல்விப்பிச்சையில் - தான்யா
என்இனமே பிழைத்துநிற்கும் ...

என்றும் எழுத்தாணி முனையில் ...
கவிஞர்.செந்தமிழ் தாசன் ( பாடலாசிரியர் )

No comments:

Post a Comment