Saturday, August 27, 2022

பொன்னிற தேவதை!

 




அனடோலியாவை நோக்கி கப்பலில் பணியாட்களாக பயணத்தை துவக்கிய மார்க் சொர்னேசனும் கிம்மும் கப்பல் கேப்டனின் மனைவியின் விஷம விளையாட்டால் நடுக்கடலில் கப்பலில் இருந்து வெளியேற நேரிடுகிறது.

கடற்கரை ஓரமாகவே  பயணித்த அவர்கள் ஒரு சிறு நகரை அடைகிறார்கள். அங்கே டிரிஸின் தோழியான அலெக்ஸா கோமரோவா கைது செய்யப்பட்டுள்ளதை காணும் மார்க், அவள் பறக்கும் விலங்கு மூலம் தப்பிச்செல்ல உதவி அந்த முயற்சியில் காயம்பட்ட அவளை பராமரிக்கிறான்.

ஆனால்
சில நாட்களில் அவர்களை தேடி வரும் பாதர் லூமிஸிடம் கைதியாக சிக்கிக்கொள்ளும் மார்க், அவரிடம் கிம்மும் கைதியாக இருப்பதைக் காண்கிறான்.

 விண்கப்பலில் அவர்களுடைய பயணம் மீண்டும்  துவங்கியது, அனடோலியாவின் சிறைச்சாலையை நோக்கி...


இது ஒரு விசித்திர மீனினம். அபாயமற்றது.சில சமயங்களில் படகுகளை நாள் முழுவதும் பின்தொடரும்.


விந்தையான தாவரங்கள்.

அருமையான கலங்கரை விளக்க காட்சி!




பிரிவுகள் எப்போதும் வருத்தம் தரக்கூடியது, ஆனால் வாழ்க்கை அவ்வாறுதான் நகருகிறது.




உருவத்தை பிரதி எடுக்கும்
 மணல் ஆக்டோபஸின் தாக்குதல்.


இன்னும் ஒரு விந்தையான நிகழ்வு!
இதெல்லாம் எதற்கு?
நாங்கள் என்றேனும் உங்களை தொடர்பு கொண்டு உங்களைப் புரிந்து கொள்ள முடியுமா?


CARAVELLE ( படகு) எனும் பெயருடைய விலங்கு.
பறக்கும் என்ஜின்களுக்குத் தேவையான ஹீலியம் என்ற ஒளி வாயுவை விலங்குகளின் உணவுப் பையில் இருந்து உற்பத்தி செய்தனர்.










Sunday, August 14, 2022

உயர உயரப் பறந்து வா!

 


நேரான பாதையில் கோணலாக  மெதுவாக நடக்கும் இயல்புடைய 'மெதுவேகம்' மனோவசியம் செய்யும் மைக்மாக் என்ற காகத்தின் பிடியில் சிக்கிக்கொள்கிறார். 

எப்போதும் அமர்ந்த இடத்தில் அமர்ந்து தியானம் போல புகை பிடிக்கும் இயல்புடைய 'குழம்புக்கண்ணார்'  
இதை தரிசனமாக உணர்ந்து யகரியை எச்சரித்து மெதுவேகத்தை தேட அனுப்புகிறார்.

மெதுவேகத்தை ஆட்கொண்டு தன் விருப்பப்படி ஆட்டிப்படைக்கும் மைக்மாக்கை பார்த்து மற்ற காகங்கள் அதுபோல் செய்ய விரும்புகின்றன.

அவற்றின் பார்வையில் மெதுவேகத்தை தேடி வரும் யகரியும் வானவில்லும் தென்படவே, அவர்கள் மீது மனோவசியத்தை பரீட்சித்துப் பார்க்க முயல்கின்றன.

அப்போது அதிரடியாக அங்கே வரும் பெரும் கழுகார் காகங்களை கண்டித்து விட்டு, மெதுவேகம் அபாயத்தில் இருப்பதால் அவரை காப்பாற்ற விரைய சொல்கிறார்.


இதற்கிடையே மைக்மாக் மெதுவேகத்தை பறக்க வைக்கும் முயற்சியில் இறங்குகிறது. அப்போது அங்கு வரும் காகங்களும் யகரியும் மைக்மாக்கை தடுத்து நிறுத்துகின்றனர்.


அவர்களுடைய வழக்கு அனுபவமிக்க நீதி அலகாரிடம் செல்கிறது.

மைக்மாக், தான் தங்களுடைய மூதாதையரைப்போல அரிய செயல்களை செய்ய முயற்சிப்பதாக கூறுகிறது.

ஆனால் 'தன் சுயநலத்துக்காக மற்றொரு நபர் மீது ஆதிக்கம் செலுத்துவது தவறு' என தீர்ப்பளிக்கும் அனுபவமிக்க நீதி அலகார், மைக்மாக்  'மெதுவேகத்தின் கூடார உச்சியில் அடுத்த நிலவு வரை கற்சிலை போல அமர்ந்திருக்க வேண்டும்'  என தண்டனையும் விதிக்கிறார்.

இதற்கிடையே சுயநினைவு வரப்பெற்ற மெதுவேகம் தனது கூடாரத்துக்குத் திரும்பினார். அவரைப்பார்த்த குழம்புக்கண்ணார் ' இனி தான் நிம்மதியாக உறங்க முடியும் என மகிழ்ந்தார்.


மெதுவேக நடையாரின் பாதை நேரானதாக அமைவதில்லை. 
விசித்திரமான மனிதர்!

குழம்புக் கண்ணாரும் அப்படியானவர்தான்,  அவர் தன் கால்களை ஒருபோதும் வலுப்படுத்துவதில்லை!



ஒவ்வொரு நாளும், அவர்கள் ஒரு புதிய விளையாட்டைக் கண்டுபிடிப்பார்கள்.  என்ன அழகான வாழ்க்கை!







கும்புக்கண்ணார் நடப்பதையும் பார்த்து விட்டோம்.😄



மெதுவேகத்தின் பயணப்பாதை விசித்திரமானது, அவரது தடத்தை தொடர முயன்ற இடிக்குட்டி அயர்ந்து போனதில் வியப்பில்லை.😂