நேரான பாதையில் கோணலாக மெதுவாக நடக்கும் இயல்புடைய 'மெதுவேகம்' மனோவசியம் செய்யும் மைக்மாக் என்ற காகத்தின் பிடியில் சிக்கிக்கொள்கிறார்.
எப்போதும் அமர்ந்த இடத்தில் அமர்ந்து தியானம் போல புகை பிடிக்கும் இயல்புடைய 'குழம்புக்கண்ணார்'
இதை தரிசனமாக உணர்ந்து யகரியை எச்சரித்து மெதுவேகத்தை தேட அனுப்புகிறார்.
மெதுவேகத்தை ஆட்கொண்டு தன் விருப்பப்படி ஆட்டிப்படைக்கும் மைக்மாக்கை பார்த்து மற்ற காகங்கள் அதுபோல் செய்ய விரும்புகின்றன.
அவற்றின் பார்வையில் மெதுவேகத்தை தேடி வரும் யகரியும் வானவில்லும் தென்படவே, அவர்கள் மீது மனோவசியத்தை பரீட்சித்துப் பார்க்க முயல்கின்றன.
அப்போது அதிரடியாக அங்கே வரும் பெரும் கழுகார் காகங்களை கண்டித்து விட்டு, மெதுவேகம் அபாயத்தில் இருப்பதால் அவரை காப்பாற்ற விரைய சொல்கிறார்.
இதற்கிடையே மைக்மாக் மெதுவேகத்தை பறக்க வைக்கும் முயற்சியில் இறங்குகிறது. அப்போது அங்கு வரும் காகங்களும் யகரியும் மைக்மாக்கை தடுத்து நிறுத்துகின்றனர்.
அவர்களுடைய வழக்கு அனுபவமிக்க நீதி அலகாரிடம் செல்கிறது.
மைக்மாக், தான் தங்களுடைய மூதாதையரைப்போல அரிய செயல்களை செய்ய முயற்சிப்பதாக கூறுகிறது.
ஆனால் 'தன் சுயநலத்துக்காக மற்றொரு நபர் மீது ஆதிக்கம் செலுத்துவது தவறு' என தீர்ப்பளிக்கும் அனுபவமிக்க நீதி அலகார், மைக்மாக் 'மெதுவேகத்தின் கூடார உச்சியில் அடுத்த நிலவு வரை கற்சிலை போல அமர்ந்திருக்க வேண்டும்' என தண்டனையும் விதிக்கிறார்.
இதற்கிடையே சுயநினைவு வரப்பெற்ற மெதுவேகம் தனது கூடாரத்துக்குத் திரும்பினார். அவரைப்பார்த்த குழம்புக்கண்ணார் ' இனி தான் நிம்மதியாக உறங்க முடியும் என மகிழ்ந்தார்.
மெதுவேக நடையாரின் பாதை நேரானதாக அமைவதில்லை.
விசித்திரமான மனிதர்!
குழம்புக் கண்ணாரும் அப்படியானவர்தான், அவர் தன் கால்களை ஒருபோதும் வலுப்படுத்துவதில்லை!
ஒவ்வொரு நாளும், அவர்கள் ஒரு புதிய விளையாட்டைக் கண்டுபிடிப்பார்கள். என்ன அழகான வாழ்க்கை!
கும்புக்கண்ணார் நடப்பதையும் பார்த்து விட்டோம்.😄
மெதுவேகத்தின் பயணப்பாதை விசித்திரமானது, அவரது தடத்தை தொடர முயன்ற இடிக்குட்டி அயர்ந்து போனதில் வியப்பில்லை.😂
No comments:
Post a Comment