Thursday, December 28, 2017

ஒரு புதிய நம்பிக்கை!

ஹோம்ப்ரே 2!

தமிழ் மொழிபெயர்ப்பு தரத்தின் மீதான ஒரு புதிய நம்பிக்கை !




முதல் பாகத்தை விடவும் அருமையான மொழிபெயர்ப்பு, வசனக்கோர்வை, குறைந்த எழுத்துப் பிழைகள்,  நெருடலற்ற வாசிப்பு என்று வெகு சிறப்பாக கவனமெடுத்து செய்யப்பட்டுள்ளது.
 ஈடுபாட்டுடன் உழைத்தவர்களுக்குப் பாராட்டுகள்

ஹோம்ப்ரே 2 ஐ ஆங்கில பதிப்பின் சில பக்கங்களுடன் நான் ஒப்பிட்டுப் பார்த்த வரை அருமையான தரத்தில்
அர்த்தம் மாறாமல், வாசிப்பில் இடறல் ஏற்படுத்தாமல் , கவனமுடன் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


வசனங்கள் பல இடங்களில் அருமையாக வந்துள்ளது.




ஒவ்வொரு கட்டத்தையும் சிரத்தை எடுத்து அந்த கட்டம் வெளிப்படுத்தும் உணர்வுகளை தமிழில் அமைக்க முயற்சித்திருப்பது வாசிக்கையில் புரிகிறது.
 தரமான படைப்பை வழங்க வேண்டும் என்ற உங்கள் ஆர்வத்துக்கு  பாராட்டுகள்.

உங்களைப் போன்றவர்களே மொழிபெயர்ப்பு
செய்யும் ஆர்வம் உள்ளவர்களுக்கு முன்னுதாரணங்கள்.  தொடருங்கள்!

 சில இடங்களில் காணப்படும் எழுத்துப் பிழைகளையும்,    ஹோம்ப்ரேவை ஹம்பர் என்றும், அனாவை இறுதியில் ஆன்னி என்றும், மங்கோலை  மொங்கோல் என்றும் பெயர்களை வெவ்வேறு  விதமாக மாற்றி உச்சரிப்பதை தவிர்க்க முயற்சிக்க வேண்டும்.

(ஆங்கிலத்தில் அந்த இறுதிப் பகுதியில் "ஆன்" என்றும்  "மொகல்" என்றும் உள்ள போதும், தமிழில் பெயர் குழப்பங்களை தவிர்க்கலாம் என்பது எனது கருத்து)

உள் பக்க சித்திரங்களில் சென்ஸார் தேவையில்லை என்பதும் எனது கருத்து.
18+ என்று அயல்நாடுகளில் இயல்பாக எடுத்துக் கொள்ளப்படுவது, இங்கு மனத்தடை ஏற்படுத்துவது புரிகிறது.




4 comments:

  1. நன்றி ஜி.இங்கும் சட்டதிட்டங்கள் கடுமையாகவே உள்ளன. இதுவே ரிஸ்க்கான கத்திமேல் நடக்கும் விதமான ஓவியங்களை உள்ளடக்கிய
    கதைதான். அடுத்தமுறை வேறு விதமாக வேறு கதைகள்தான் செய்யவிருக்கிறார் தமிழ் ஜோக்கர்.

    ReplyDelete
  2. இந்த கதையை எளிதாக புரிந்து கொள்ள மொழிபெயர்ப்பே உதவுகிறது..

    என்னுடைய விமர்சனத்தில் கூட இதை குறிப்பிட்டிருந்தேன் ..

    என்னுடைய கருத்தை போலவே தங்களுடைய பதிவிலும் உள்ளது கண்டு ஒரு விஷயம் புரிந்து கொண்டேன்..

    கதாசிரியர் கூற விரும்பும் கருத்தை மொழிபெயர்ப்பாளகளூம் புரிந்து கொண்டு மொழி பெயர்த்தால் மட்டுமே அதன் பொருள் மாறாதென்பது..

    ஒவ்வொருவரிடமும் கற்றுக்கொள்ள கொள்ள ஏதாவது விஷயம் இருக்கும் ..

    படக்கதை என்பது வெறுமனே வாசிப்பு என்றிருந்த எனக்கு மற்ற விஷயங்களையும் கவனிக்க வேண்டும் என்று புரிய வைத்த வைத்த பெருமை உங்களையே சேரும்...

    என் வாசிப்பின் புரிந்து கொள்ளும் திறனில் முன்னேற்றமடைந்தது உங்களை போன்றவர்களால் என்றால் அது மிகையல்ல...

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு பிரேமையும் சித்திரங்களையும் வசனங்களையும் கவனித்து வாசிக்கும் போது நிறைய விஷயங்களை புரிந்து கொள்ள முடியும் நண்பரே!

      Delete