Thursday, September 30, 2021

4,கேளிக்கை நாடகம்


...இந்த உலகம் ஒரு மேடை!
மற்றவையெல்லாம்...
 
கேளிக்கை நாடகம்.

V for vendetta


Vaudeville (கேளிக்கை நாடகம்) 


vaudeville, இசையுடன் கூடிய கேலிக்கூத்து.  அமெரிக்காவில் இந்த வார்த்தையானது 1890களின் நடுப்பகுதியிலிருந்து 1930களின் முற்பகுதி வரை பிரபலமான 10 முதல் 15 தனிப்பட்ட தொடர்பில்லாத செயல்களை உள்ளடக்கிய ஒரு லேசான பொழுதுபோக்கைக் குறிக்கிறது, இதில் மந்திரவாதிகள், அக்ரோபேட்டுகள், நகைச்சுவை நடிகர்கள், பயிற்சி பெற்ற விலங்குகள், வித்தைக்காரர்கள், பாடகர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.  இது இங்கிலாந்தில் உள்ள இசை மண்டபம் மற்றும் பல்வேறு வகைகளுக்கு இணையானதாகும்.
 




Vயின் தாக்குதல்கள் நோர்ஸ்ஃபயர் அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளதை தலைவர் ஒப்புக்கொள்கிறார்.

இதில் உள்ள ஒரு நகைமுரண் என்வென்றால், 
'விதி' கம்ப்யூட்டர் செய்தி வாசிப்பதாக மக்களை நம்பச்செய்வதில் நோர்ஸ்ஃபயர் அரசு வெற்றி பெற்றிருந்தது, அதன் சொந்த வெற்றியே  இன்று அதனை இக்கட்டில் நிறுத்தியுள்ளது.

விதியின் குரலில் மாற்றம் ஏற்பட்டால் அரசு மீதான மக்களின் நம்பிக்கை கேள்விக்குறியாகும்.


எரிக் ஃபின்ச் அந்த அதிகாரத்தின் அமைப்பில் ஒரு மாறுபட்ட மனிதர். நோர்ஸ்ஃபயர் அரசின் வழிகளில் தனக்கு ஒப்புதல் இல்லை என்பதை வலியுறுத்துகிறார்.



எரிக் ஃபின்ச் தன் பணிகளில் திறமையானவர் என்பதாலேயே அவர் வாழ்நாள் நீடித்திருப்பதை தலைவர் சுட்டிக்காட்டுகிறார்.



நோர்ஸ்ஃபயர் அரசில் V ஏற்படுத்தப்போகும் குழப்பங்களே அவன் மக்களுக்காக நடத்தப்போகும் 
கேளிக்கை நாடகம்.



இங்கே ஒரு கேள்வி எழும். 
V லூயிஸின் கதையை ஏன் சட்டென்று முடித்து வைக்கவில்லை? 




லூயிஸின் மீதான Vயின் வஞ்சம் அதிகாரத்தின் மீதான தாக்குதல் மட்டும்தானா?
 தனிப்பட்ட பழிவாங்கலும் இணைந்ததா? அல்லது இரண்டும்தானா? 


இந்த மேற்கோளில், V லூயிஸ் ப்ரோதெரோவின் பெரிய பழங்கால பொம்மை சேகரிப்பை அச்சுறுத்துவதன் மூலம் அவரது மனநிலையை அம்பலப்படுத்துகிறார்.  லார்கில் சித்திரவதை முகாமில் இறந்த மனிதர்களை விட, உயிரற்ற பிளாஸ்டிக் மற்றும் கல்லின் மீது அதிக அக்கறையை ப்ரோதெரோ வெளிப்படுத்துகிறார் என்ற முரண்பாட்டை வி குறிப்பிடுகிறார்.

மனிதர்களை விட பொம்மைகளை நேசிக்கும் அந்த கேவலப் பிறவியை V மனோரீதியாக சித்திரவதை செய்கிறான். 



விதியின் குரலானலூயிஸ் ப்ரோதெரோ நோர்ஸ்ஃபையர் அரசாங்கத்திற்கு ஒரு முக்கியமான சேவையைச் செய்கிறார்.  ஒவ்வொரு இரவும், அவர் விதி கம்ப்யூட்டரால் அச்சிடப்பட்ட தகவல்களைப் படிக்கிறார்.

 இங்கிலாந்தில் உள்ள ஒவ்வொரு தொலைக்காட்சி மற்றும் வானொலியிலும் அவரது குரல் ஒலிபரப்பப்படுகிறது.  புத்திசாலித்தனமான பிரச்சாரத்திற்குப் பின்னால் ப்ரோதெரோ இருப்பதை இங்கிலாந்து மக்கள் உணரவில்லை.

 ப்ரோதெரோவின் குரல் - "அற்புதமான" குரல் - கணினியின் குரல் என்று அவர்கள் நம்புகிறார்கள்.  அவரது குரலின் மகத்துவத்திற்குக் கீழே, ப்ரோதெரோ ஒரு முட்டாள் மற்றும் கொடூரமான மனிதர், அவர் ஒரு காலத்தில் லார்கில் சிறைச்சாலையில் காவலராகப் பணிபுரிந்தார்,  V சிறை வைக்கப்பட்டிருந்த அந்த வதை முகாமில், அப்பாவி மக்களைக் கொலைசெய்வதில் எந்த கவலையும் இல்லை.  ப்ரோதெரோ ஒரு பரந்த, ஈர்க்கக்கூடிய பொம்மைகளின் சேகரிப்பைக் கொண்டிருக்கிறார். 

ரோஜர் டாஸ்கோம்ப் அவரை மிகவும் “உணர்திறன்” உடையவராகக் கருதுகிறார் (ஓரினச்சேர்க்கையாளருக்கான சொற்பொழிவு, இது ஒருபோதும் ஆராயப்படவில்லை என்றாலும்).   ப்ரோதெரோவின் பொம்மைகள் மீதான நேசம் அளவற்றது. V அவனுடைய பொம்மைகளை எரித்து, அதன் மூலம் அவனைப் பைத்தியக்காரனாக்குகிறான்.

லூயிஸ் தன் கல்லறைக்கு நிம்மதியாகச் செல்வதை V விரும்பவில்லை.

இன்று ஒலிக்கும் 'விதி'யின் குரல் மாறுபட்டுள்ளது.  லண்டன் மக்களுக்கு நோர்ஸ்ஃபயர் அரசு மீது அவநம்பிக்கை ஏற்படத்துவங்கியது.

அந்தக்குரல் மாற்றம் நோர்ஸ்ஃபயர் அரசின் எதிர்காலத்தின் மீது இருளாய் படியத் துவங்கியது.




**********
தொடரும்...
 



Monday, September 27, 2021

3,வீழ்த்தப்பட்டவர்கள்

 ...கடந்தகாலம் உன்னைத் துன்புறுத்தாது, நீ அனுமதித்தாலே தவிர...

V for vendetta



வென்டெட்டா திரைப்படத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். இரண்டு மணிநேர  திரைப்படம் ஆலன்மூரின் கிராஃபிக் நாவலை சிதையாமல் வழங்கி விட்டதா?

நீளமான படைப்புகள் திரைப்படமாக உருமாற்றம் அடையும் போது பல விதங்களிலும் சுருக்கப்பட்டு விடும்.

அந்த வகையில் திரைப்படம் மிகவும் சுருக்கமானது. எழுத்தாளர் ஆலன்மூர் கிராஃபிக் நாவலில் புகுதியிருந்த கருத்துகளை முழுவதுமாகப் பிரதிபலிக்காததோடு சில சம்பவங்கள்  மாற்றங்களோடு படமாக்கப்பட்டுள்ளது.

திரைப்படத்தின் முடிவும் ஆலன்மூர் கிராஃபிக் நாவலுக்கு வழங்கி இருந்த முடிவைச் சரியாக கொண்டு வரவில்லை.

ஆலன்மூருக்கே திரைப்பட வடிவம் திருப்தியான ஒன்றாக அமையவில்லை என்ற ஒரு தகவலையும் இணையத்தில் வாசித்தேன். 



இந்த அத்தியாயத்தில் தூப்பறிவாளர் எரிக் ஃபின்ச்சின் உதவியாளராக 'டொமினிக் ஸ்டோன்' அறிமுகமாகிறார். 


லூயிஸ் புரொதெரோ கடத்தப்பட்ட பின்பாக துப்பறிவாளர் எரிக் ஃபின்ச் தன் விசாரணையை துவங்கினார்.
 
V பற்றி அவருக்குக் கிடைத்த தகவல்கள் V சாதாரண மனிதன்தானா என்ற கேள்வியை எழுப்பியது.

எந்த அளவுக்கு Vயை பற்றி தெரிய வருகிறதோ,  அந்த அளவுக்கு V பற்றிய சித்திரம் மிரள வைக்கும் ஒன்றாக உருப்பெற்றுக் கொண்டிருந்தது.


V விட்டுச்செல்லும்  V சின்னம், ரோஜா போன்றவை  அவனுக்கு  ஒரு தோற்றத்தை வழங்குகின்றன.


அவன் ஒரு பெரும் தனித்த அடையாளம் என்ற தோற்றத்தை...



வயலட் கார்ஸன் ரோஜா

1964ல் உருவாக்கப்பட்ட இந்த ரோஜா வகைக்கு  Violet Carson என்ற நடிகையின் பெயர் சூட்டப்பட்டது.(1898-1983)

வென்டெட்டாவில் இது குறிப்பிடத்தக்க வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளதை இனி வரும் அத்தியாயங்களில் வாசிப்பீர்கள்.

"போருக்குப் பின் அழிந்து போன ரோஜா"

இது துப்பறிவாளருக்கு கிடைத்துள்ள ஒரு முக்கியமான தடயம்.





ஈவி ஹம்மாண்ட் தன் கதையை சொல்லத் துவங்கினாள். ஏழு வயதுச் சிறுமி ஒருத்தியின் பார்வையில் விவரிக்கப்பட்ட கதை அது...


இரண்டாம் உலகப்போருக்குப் பின் அமெரிக்காவுக்கும் இரஷ்யாவுக்கும் இடையே பனிப்போர் துவங்கியது.

The cold war
1947 முதல் 1991 வரை நடந்தது. அந்த காலக்கட்டத்தில் அமெரிக்காவும் இரஷ்யாவும் அனு ஆயுதங்கள் முதல் விண்வெளிப்பயனம் வரை ஒன்றை ஒன்று முந்துவதில் கடுமையாகப் போட்டியிட்டன.

1980களில் அந்தப்பனிப்போர் அனு ஆயுதப்போராக வெடித்ததாக ஆலன்மூர் இந்தக் கிராஃபிக் நாவலில் கற்பனையாகப் புனைந்துள்ளார்.



உண்மையில் இந்த கிராஃபிக் நாவல் 1989ல் வெளியானது. பனிப்போர் 1991ல் முடிவுக்கு வந்தது.


நோர்ஸ்ஃபயர் அரசு ஹிட்லரின் வதைமுகாம்கள் போன்று லார்க்ஹில் என்ற வதைமுகாமை உருவாக்கியது.

பாகிஸ்தானியர்கள்,  ஆப்ரிக்கர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் அரசியல் கைதிகள் அங்கு அடைக்கப்பட்டனர்.

அவர்கள் அங்கு பரிசோதனை எலிகளைப்போல் நடத்தப்பட்டனர்.


ஈவி ஹம்மாண்ட் தன் மனதின் பாரங்களை இறக்கி வைத்துள்ளாள்.
V அவளுக்கு ஆறுதல் தருகிறான். அவனுடைய உருவத்தில் அந்நேரத்தில் அவள் கண்டது...


அவள் சிறு வயதில் பிரிந்த தந்தையை...



ஈவி ஹம்மாண்டின் தீய கனவுகள் ஒரு முடிவுக்கு வந்த வேளையில்,

 லர்க்ஹில் மாதிரி வதைமுகாமில் லூயிஸ் ப்ரொதெரோவின் தீய கனவு துவங்கி இருந்தது.




*********



தொடரும்...




Saturday, September 25, 2021

2,விதியின் குரல்

 


அதிகாரம் தன்  காலடியில் குழப்பத்தைக் கண்டெடுக்கும்போது, தன் ஒழுங்கு என்னும் முகமூடியைக் காப்பாற்றிக்கொள்ள எவ்விதமான கீழ்த்தரமான நடவடிக்கையிலும் இறங்கும்.

V foe vendetta 

இந்த அத்தியாயத்தில் நோர்ஸ்ஃபயர் அரசின் முக்கிய தலைவர்கள் சிலரை அறிமுகம் செய்து கொள்வோம். 

கிராஃபிக் நாவலில் வரும் கதாபாத்திரங்கள் வெறும் சித்திரங்களல்ல.

நேரில் பழகும் மனிதர்களைப்போல அவர்களை அவர்களுடைய குணாதிசயங்களோடு நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.


இவர்தான் 'தலைவர்'.  'விதி' கம்ப்யூட்டரின் உத்தரவுகளை செயல்படுத்துபவர்.
இவரைப்பற்றிய விவரங்களை சில அத்தியாயங்களின் பின்பாக நாம் அறிய முடியும்.
 கான்ராட் ஹேயர். வீடியோ கண்காணிப்பு 'கண்' துறையின் தலைவர். 


 பிரையன் ஈதரிட்ஜ். தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்புத்துறையான 'காதுகளி'ன் தலைவர். 


 எரிக் ஃபின்ச். தடயவியல் துறையான 'மூக்கு' ன் தலைவர். 
அரசு அதிகாரிதான் என்றபோதிலும் அரசின் கொள்கைகளோடு முரண்படுபவர்.

டெரக் அல்மோன்ட். போலீஸ் துறையான 'ஃபிங்கர்ஸ்'ன் தலைவர். 

 ரோஜர் டாஸ்கோம்ப். விதியின் குரல் ஒலிபரப்பப்படும் ஜோர்டான் டவரின் தலைமை அதிகாரி. 



இது ஒரு சிலேடையான நகைச்சுவை.

ஆங்கிலத்தில் Bitter என்பது கசப்பு என்பதைக் குறிக்கவும், வெறுப்பினால் உருவான கசப்பான மனநிலை என்பதைக் குறிக்கவும் இங்கே உபயோகிக்கப்படுகிறது.

You are bitter Almond என்பதும் Bitter Almond என்பதும் இங்கே உபயோகிக்கப்பட்ட சிலேடை. நீ வெறுப்பினால் கசந்து போயிருக்கிறாய் அல்மோண்ட் என்பதும், கசப்பான அல்மோண்ட் (கசப்புச்சுவை கொண்ட பாதாம் பருப்பு.) என்பதையும் கலந்து டாஸ்கோம்ப் அல்மோண்டை இங்கே சிறுபிள்ளைத்தனமாக பகடி செய்கிறான்.




'விதியை நம்பு'

நகைக்கடைகளிலும் பைனான்ஸ் கம்பெனிகளிலும் 'எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்' என்பதாக விளம்பரம் செய்திருப்பார்கள்.

அது போன்ற ஒரு ஸ்லோகம் இது.

கம்ப்யூட்டர் 'விதி' மீது நம்பிக்கை வையுங்கள்.


இவர்  லூயிஸ் ப்ரொதெரோ.

 கம்ப்யூட்டர் 'விதி'க்காக ரேடியோவில் குரல் கொடுப்பவர். இவரது குரலை கம்ப்யூட்டர் 'விதி'யின் குரலாகவும், 'விதி'யை அனைத்தும் அறிந்த சர்வ வல்லமை படைத்த ஒன்றாகவும் பொதுமக்கள் நம்புகின்றனர்.




Norsefire அரசின்  முக்கியமான அடையாளம் 'விதியின் குரல்'.

நேரடியாக அறியப்படாத 'விதியின் குரல்' போன்ற மர்மங்கள், அவை மிகவும் சக்தி வாய்ந்தவை என்ற தோற்றத்தை ஏற்படுத்தும். 

இந்த அமைப்பில் உள்ள ஒரு பலவீனம், நோர்ஸ்ஃபயர் அரசு ஒரு தனி மனிதனின் குரலைச் சார்ந்துள்ளது.
 'விதி'யின் குரலில் மாற்றம் ஏற்பட்டால் பொது மக்களிடையே 'விதி'க்கு என்ன ஆனது என்ற கேள்வி எழும். அரசு மீதான நம்பிக்கை குறையும்.


***********

ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்புக்கும் அது இடம்பெறும் பக்கத்திலுள்ள நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டு.

முதல் அத்தியாயத்தில் V யின் முழுத் தோற்றம் அறிமுகமாகும் போது 'வில்லன்' என்ற தலைப்பு.

அதாவது அராஜக ஆட்சியாளர்களுக்கு V வில்லன்.

இரண்டாம் அத்தியாயத்தில் 'விதி ரேடியோ' அலைவரிசைக்கு குரல் கொடுக்கும் லூயிஸ் அறிமுகமாகும் போது 'விதியின் குரல்' என்ற தலைப்பு.

மற்ற அத்தியாயங்களிலும் கூட நீங்கள் இப்படி தலைப்பு பக்கத்தின் காட்சியுடன் பொருந்துவதைக் காண முடியும். 



 
பொதுமக்களை வந்தடையும் செய்திகள் எந்த அளவுக்கு தணிக்கை செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன என்பதை இந்தக் கட்டங்கள் விவரிக்கின்றன.




"அவர்கள் கலாச்சாரத்தை வேரோடு அழித்து விட்டார்கள்.
இறந்த ரோஜாக்களைத் தூக்கியெறிவது போல..."


நோர்ஸ்ஃபயர் அரசில் மதவாதத்துக்கு முக்கிய இடம் உண்டு. அந்த அரசு பிற இனங்களை அவர்களுடைய கலாச்சாரங்களோடு வேரோடு அழித்தது.
அது எத்தனை மேம்பட்டதாக இருந்த போதிலும்...


இசை இல்லை...
பாடல்கள் இல்லை...

சதாகாலமும் ஒலிக்கும் தலைவனின் பிரச்சாரம் மட்டுமே. 

அந்தப் பிரச்சாரத்துக்கு ஒரு முடிவு கட்ட V தீர்மானித்தான்.

அவனுடைய அடுத்த இலக்கு லூயிஸ் ப்ரொதெரோ 'விதியின் குரல்'



நான் கவனிக்கல...

ரயிலில் ஏற வரும் சராசரி மனிதன் முகத்துக்கு நேராக துப்பாக்கி நீட்டப்பட்ட பின்புதான் அந்தப்  பெட்டியில் அதிகாரத்தின் அடிவருடிகள் பயணிப்பதை உணருகிறான்.

அதிகாரத்தில் உள்ளவர்களின்அகம்பாவத்தையும், பொதுமக்கள் மீதான அவர்களுடைய அலட்சியப் பார்வையையும்,
எளிய மனிதர்கள் அதிகாரத்துக்கு அஞ்சி ஒதுங்குவதையும் இக்காட்சியில் உணரலாம்.



லூயிஸ் விதியின் குரலாக பேசும்போது அதிகாரமும் ஆளுமையுமாக கச்சிதமாக ஒலிக்கிறார் .

ஆனால் பொதுவாழ்வில் அவர் சொன்னதையே திரும்பச் சொல்லும் ஒரு வளவளா ஆசாமி. 

பொம்மைகள் மீதான பிரியம்கூட அவருக்கு மனிதர்கள் மீது கிடையாது.
அதிகார வர்க்கம் பெரும்பாலும் இதுபோன்ற ஈரமற்றவர்களாலேயே நிரம்பியுள்ளது.



பொம்மைகள் பற்றிய அக்கறையிலும், செக்ஸ் ஜோக்குகளிலும் மூழ்கியுள்ள அவர் தன்னைச் சூழ்ந்து வரும் ஆபத்தை உணர்ந்தாரில்லை...





தொடரும்...


Friday, September 24, 2021

1, V என்றால் வஞ்சம்




மகிழ்ச்சி சுதந்திரத்தைவிட மதிப்புமிக்கதா? 

V for vendetta 


 


'வி என்றால் வஞ்சம்' வெறும் விறுவிறுப்புக்காக வாசித்துக் கடந்து செல்லக்கூடிய சராசரிக் கதையல்ல, அதன் ஒவ்வொரு பக்கத்திலும் பல மறைமுகமான விஷயங்கள் புகுத்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு கட்டத்தையும் கவனமாக வாசிக்கும்போது அவற்றைப் புரிந்து கொள்ள முடியும்.

வி என்றால் வஞ்சம் பற்றி நண்பர்களிடம் கேட்டு அறிந்து கொண்டவற்றையும்,  இணையத்தில் தேடித் தெரிந்து கொண்டவற்றையும், கதையை வாசித்துப் புரிந்து கொண்டவற்றையும்  உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

 



1980களில் 

ஒரு அனு ஆயுதப் போருக்குப் பின்பான இலண்டனில் Norsefire எனும் பாசிசக்கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது.

அடக்குமுறை மிகுந்த அந்த ஆட்சியிலிருந்து இலண்டனை மீட்க V என்ற புதிரான மனிதன் வன்முறையுடன் கூடிய புரட்சியை முன்னெடுத்தான்.



விதியின் குரல் என்பது அரசாங்கத்தின் பிரச்சார அலைவரிசை ஆகும்.

அரசாங்கத்தின் துறைகள் :

கண், ( வீடியோ கண்காணிப்பு) 

காது, ( தொலைபேசி ஒட்டுக்கேட்பு)

மூக்கு, (தடயவியல் துறை)

விரல்கள் (காவல் துறை)

என அழைக்கப்படுகிறது.

ஜோர்டான் டவர் எனும் கட்டிடம் வாய்ப்பகுதியாகக் குறிப்பிடப்படுகிறது.

இப்படியாக அரசாங்கம் ஒரு இராட்சச மனிதத்தோற்றம் கொண்டுள்ளது. 

அதன் தலைமையாக 'விதி' என்னும் கம்ப்யூட்டர் உள்ளது.

'விதி' கம்ப்யூட்டரின் ஆணைகளை செயல்படுத்துபவர் 'தலைவர்'

'விதியின் குரல்' எனும் ரேடியோ அலைவரிசை மூலம் இந்த அரசமைப்பு தன் செய்திகளையும் அறிவிப்புகளையும் பிரச்சாரம் செய்கிறது.


V யின் திட்டம் இந்த இராட்சசக் கட்டமைப்பின் ஒவ்வொரு அங்கமாக முடக்கி அரசை வீழ்த்துவது.

வானிலையையும் மழை பொழியும் நேரத்தையும் துல்லியமாக அறிவிக்கும்  அளவு அறிவியல் முன்னேற்றமடைந்த அந்த அரசில் இரவு ஒன்பது மணிவரை  தொழிலாளிகள் வேலை செய்கின்றனர்.


 
மக்கள் பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்களின் அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுகின்றன.


பிரச்சாரத்தில் அந்தப் பகுதிகள் தடை செய்யப்பட்டதன் காரணம் விளக்கப்படவில்லை. விளக்க வேண்டிய அளவுக்கு அரசு மக்களுக்கு மதிப்பு கொடுக்கவில்லை என்றும் இதை எடுத்துக்கொள்ளலாம்.




"இறைச்சி ரேஷனில் வழங்குவது முடிவுக்கு வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது."

உறுதியாகச் சொல்ல முடியாது என்பதான ஒரு செய்தி.

இவள்தான் 'ஈவி ஹம்மாண்ட்' பெற்றோரை இழந்தவள். 

(பைபிளில் உள்ளபடி உலகின் முதல்  மனிதர்களான ஆடம் ஈவ் என்பதில் [ஆதாம் ஏவாள்] 'ஈவ்' என்ற பொருளில் அமைந்த பெயர். 
எவி, ஏவி எனவும் உச்சரிக்கப்படுகிறது.)

"இந்த நல்ல செய்தியுடன் இதைப்போலவே"

முந்தைய செய்தியைப் போன்றே உறுதியாகச் சொல்ல முடியாத மற்றொரு செய்தி.
 (ஒரு செய்தியும் 'உறுதியா' சொல்ல முடியாதா? என்பதுபோல ஆலன்மூரின் எள்ளல் நிறைந்த வரிகள்.)

வறுமை காரணமாக விபச்சாரத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறாள்.

"மிகப்பெரிய தீவிரவாதக்குழு என்று நம்பப்படும்..."

அது அரசுக்கு எதிரான  ஒரு சிறு போராட்டக்குழுவாக இருக்கலாம். அரசுக்கு ஆதரவாக ஊடகங்கள் செய்திகளை திரிப்பது எப்போதும் நடப்பதே.

இது V யின் இரகசியமான கலைக்கூடம். மற்றும் அவனுடைய இருப்பிடம். இங்கு அராஜக அரசால் அழிக்கப்பட்ட புத்தகங்கள், ஓவியங்கள், இசை ஆல்பங்கள் போன்றவற்றை V பாதுகாத்து வருகிறான்.


அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆடம்பரத்தில் திளைப்பதும் குடிமக்கள் விபச்சாரத்துக்கு ஆடை உடுத்துவதுமான முரண்பாட்டை இக்கட்டம் சித்தரிக்கிறது.

" முன் எப்போதையும் விட சிறப்பாக"

இச்செய்தி ஒலிபரப்பாகும்போது V கையுறை அணியும் காட்சி,

செய்தியில் உண்மை மூடி மறைக்கப்படுகிறது.

என்பதை மறைமுகமாக உணர்த்துகிறது.


"பிரிட்டனை மீண்டும் சக்திமிக்க நாடாக..."

என்ற செய்தியின்போது V முகமூடியை கையில் எடுப்பது, நாட்டின் முன்னேற்றத்துக்காக அவன் மூகமுடி அணிந்து தயாராவதை உணர்த்துகிறது.

Guy fawkes என்பவர் நவம்பர் ஐந்து1605ல் பாராளுமன்றத்தை வெடிமருந்து மூலம் தகர்க்க முயன்று தோற்றுப்போய் கைது செய்யப்பட்டு மரணத்தை தழுவியவர். அரசுக்கு எதிரான கலகக் குரலாகப் பார்க்கப்பட்ட அந்த நிகழ்ச்சியின் நினைவாக நவம்பர் ஐந்து 1605 கைபாக்ஸ் நாளாக பிரிட்டனில் கொண்டாடப்படுகிறது.

அதே நாளில்தான் V தன் புரட்சியை ஆரம்பிக்கிறான்.
V அணிவது கைபாக்ஸின் முகத்தோற்றம் கொண்ட முகமூடியைதான்.


யார் இந்த V?

V ஒரு மர்ம மனிதன். இவனைப்பற்றிய சொந்தத் தகவல்கள் ஏதும் இல்லை. ஆணா?  பெண்ணா? என்பது கூடத் தெரியாது. அவனது முகத்தைப் பார்த்தவர்களும் எவருமில்லை.
மரணத்தருவாயிலிருந்த ஒரே ஒரு பெண்மணியைத் தவிர...

Vயின் முகத்தைப் பார்த்த அப்பெண்மணி சொன்னார்.

மிக அழகு! 

(இந்த கிராஃபிக் நாவலின் அத்தியாயங்களின் ஆங்கிலத் தலைப்புகள் V என்ற எழுத்திலேயே துவங்குவது இன்னொரு சிறப்பு!) 
இந்த கிராஃபிக் நாவலின் அத்தியாயங்களின் தலைப்புகள் ஆங்கிலத்தில் V என்ற எழுத்திலேயே ஆரம்பிப்பது இன்னொரு சிறப்பு!  

நோர்ஸ்ஃபயர் அசாங்கத்தின் ஃபிங்கர்மேன் என்னும் காவல்துறை ஒரு இளம்பெண்ணை தெருவில் கற்பழித்துக் கொல்லும் அளவுக்கு கணக்கற்ற அதிகாரம் கொண்டதாக உள்ளது.

 சட்டத்தை அமலாக்கம் செய்பவர்கள்
சமூக விரோதிகளை விட ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள். 



V யின் உரையாடல்கள் பெரும்பாலும் நாடக பாணியிலும் கவிதைகளாகவும் உள்ளது. நாடகங்கள், புத்தகங்கள், இசையில் ஈடுபாடு கொண்டவராக அறிய முடிகிறது.

ஃபிங்கர் அதிகாரிகளுடன் மோதும் இந்தக்கட்டத்தில் பொருத்தமாக ஷேக்ஸ்பியரின் மக்பெத் நாடகத்திலிருந்து கவிதை வரிகளை உச்சரிக்கிறார்.




ஒரு கொண்டாட்டம்: கைபாக்ஸ் வெடிமருந்து சதி நடந்த நவம்பர் ஐந்து 1605 நாளின் கொண்டாட்டம்.

ஒரு ஆரம்பம்: அரசுக்கு எதிரான V யின் புரட்சி இந்நாளில் ஆரம்பம்.

 


"என்னைக் கொல்ல நினைத்தாயா? கொல்வதற்கு இந்த ஆடைக்குள் சதை அல்லது இரத்தம் இல்லை. ஒரு சிந்தனை மட்டுமே உள்ளது. சிந்தனைகள் குண்டு துளைக்க முடியாதவை. "

V for vendetta



* தொடரும்...


முதல் அத்தியாயம் பற்றிய முந்தைய முழுமையான பதிவுக்கு: