'வி என்றால் வஞ்சம்' வெறும் விறுவிறுப்புக்காக வாசித்துக் கடந்து செல்லக்கூடிய சராசரிக் கதையல்ல, அதன் ஒவ்வொரு பக்கத்திலும் பல மறைமுகமான விஷயங்கள் புகுத்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு கட்டத்தையும் கவனமாக வாசிக்கும்போது அவற்றைப் புரிந்து கொள்ள முடியும்.
வி என்றால் வஞ்சம் பற்றி நண்பர்களிடம் கேட்டு அறிந்து கொண்டவற்றையும், இணையத்தில் தேடித் தெரிந்து கொண்டவற்றையும், கதையை வாசித்துப் புரிந்து கொண்டவற்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு அனு ஆயுதப் போருக்குப் பின்பான இலண்டனில் Norsefire எனும் பாசிசக்கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது.
அடக்குமுறை மிகுந்த அந்த ஆட்சியிலிருந்து இலண்டனை மீட்க V என்ற புதிரான மனிதன் வன்முறையுடன் கூடிய புரட்சியை முன்னெடுத்தான்.
விதியின் குரல் என்பது அரசாங்கத்தின் பிரச்சார அலைவரிசை ஆகும்.
என அழைக்கப்படுகிறது.
ஜோர்டான் டவர் எனும் கட்டிடம் வாய்ப்பகுதியாகக் குறிப்பிடப்படுகிறது.
அதன் தலைமையாக 'விதி' என்னும் கம்ப்யூட்டர் உள்ளது.
'விதியின் குரல்' எனும் ரேடியோ அலைவரிசை மூலம் இந்த அரசமைப்பு தன் செய்திகளையும் அறிவிப்புகளையும் பிரச்சாரம் செய்கிறது.
V யின் திட்டம் இந்த இராட்சசக் கட்டமைப்பின் ஒவ்வொரு அங்கமாக முடக்கி அரசை வீழ்த்துவது.
வானிலையையும் மழை பொழியும் நேரத்தையும் துல்லியமாக அறிவிக்கும் அளவு அறிவியல் முன்னேற்றமடைந்த அந்த அரசில் இரவு ஒன்பது மணிவரை தொழிலாளிகள் வேலை செய்கின்றனர்.
மக்கள் பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்களின் அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுகின்றன.
பிரச்சாரத்தில் அந்தப் பகுதிகள் தடை செய்யப்பட்டதன் காரணம் விளக்கப்படவில்லை. விளக்க வேண்டிய அளவுக்கு அரசு மக்களுக்கு மதிப்பு கொடுக்கவில்லை என்றும் இதை எடுத்துக்கொள்ளலாம்.
"இறைச்சி ரேஷனில் வழங்குவது முடிவுக்கு வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது."
உறுதியாகச் சொல்ல முடியாது என்பதான ஒரு செய்தி.
இவள்தான் 'ஈவி ஹம்மாண்ட்' பெற்றோரை இழந்தவள்.
(பைபிளில் உள்ளபடி உலகின் முதல் மனிதர்களான ஆடம் ஈவ் என்பதில் [ஆதாம் ஏவாள்] 'ஈவ்' என்ற பொருளில் அமைந்த பெயர்.
எவி, ஏவி எனவும் உச்சரிக்கப்படுகிறது.)
"இந்த நல்ல செய்தியுடன் இதைப்போலவே"
முந்தைய செய்தியைப் போன்றே உறுதியாகச் சொல்ல முடியாத மற்றொரு செய்தி.
(ஒரு செய்தியும் 'உறுதியா' சொல்ல முடியாதா? என்பதுபோல ஆலன்மூரின் எள்ளல் நிறைந்த வரிகள்.)
வறுமை காரணமாக விபச்சாரத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறாள்.
"மிகப்பெரிய தீவிரவாதக்குழு என்று நம்பப்படும்..."
அது அரசுக்கு எதிரான ஒரு சிறு போராட்டக்குழுவாக இருக்கலாம். அரசுக்கு ஆதரவாக ஊடகங்கள் செய்திகளை திரிப்பது எப்போதும் நடப்பதே.
இது V யின் இரகசியமான கலைக்கூடம். மற்றும் அவனுடைய இருப்பிடம். இங்கு அராஜக அரசால் அழிக்கப்பட்ட புத்தகங்கள், ஓவியங்கள், இசை ஆல்பங்கள் போன்றவற்றை V பாதுகாத்து வருகிறான்.
அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆடம்பரத்தில் திளைப்பதும் குடிமக்கள் விபச்சாரத்துக்கு ஆடை உடுத்துவதுமான முரண்பாட்டை இக்கட்டம் சித்தரிக்கிறது.
" முன் எப்போதையும் விட சிறப்பாக"
இச்செய்தி ஒலிபரப்பாகும்போது V கையுறை அணியும் காட்சி,
செய்தியில் உண்மை மூடி மறைக்கப்படுகிறது.
என்பதை மறைமுகமாக உணர்த்துகிறது.
"பிரிட்டனை மீண்டும் சக்திமிக்க நாடாக..."
என்ற செய்தியின்போது V முகமூடியை கையில் எடுப்பது, நாட்டின் முன்னேற்றத்துக்காக அவன் மூகமுடி அணிந்து தயாராவதை உணர்த்துகிறது.
Guy fawkes என்பவர் நவம்பர் ஐந்து1605ல் பாராளுமன்றத்தை வெடிமருந்து மூலம் தகர்க்க முயன்று தோற்றுப்போய் கைது செய்யப்பட்டு மரணத்தை தழுவியவர். அரசுக்கு எதிரான கலகக் குரலாகப் பார்க்கப்பட்ட அந்த நிகழ்ச்சியின் நினைவாக நவம்பர் ஐந்து 1605 கைபாக்ஸ் நாளாக பிரிட்டனில் கொண்டாடப்படுகிறது.
அதே நாளில்தான் V தன் புரட்சியை ஆரம்பிக்கிறான்.
V அணிவது கைபாக்ஸின் முகத்தோற்றம் கொண்ட முகமூடியைதான்.
யார் இந்த V?
V ஒரு மர்ம மனிதன். இவனைப்பற்றிய சொந்தத் தகவல்கள் ஏதும் இல்லை. ஆணா? பெண்ணா? என்பது கூடத் தெரியாது. அவனது முகத்தைப் பார்த்தவர்களும் எவருமில்லை.
மரணத்தருவாயிலிருந்த ஒரே ஒரு பெண்மணியைத் தவிர...
Vயின் முகத்தைப் பார்த்த அப்பெண்மணி சொன்னார்.
மிக அழகு!
(இந்த கிராஃபிக் நாவலின் அத்தியாயங்களின் ஆங்கிலத் தலைப்புகள் V என்ற எழுத்திலேயே துவங்குவது இன்னொரு சிறப்பு!)
இந்த கிராஃபிக் நாவலின் அத்தியாயங்களின் தலைப்புகள் ஆங்கிலத்தில் V என்ற எழுத்திலேயே ஆரம்பிப்பது இன்னொரு சிறப்பு!
நோர்ஸ்ஃபயர் அசாங்கத்தின் ஃபிங்கர்மேன் என்னும் காவல்துறை ஒரு இளம்பெண்ணை தெருவில் கற்பழித்துக் கொல்லும் அளவுக்கு கணக்கற்ற அதிகாரம் கொண்டதாக உள்ளது.
சட்டத்தை அமலாக்கம் செய்பவர்கள்
சமூக விரோதிகளை விட ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள்.
V யின் உரையாடல்கள் பெரும்பாலும் நாடக பாணியிலும் கவிதைகளாகவும் உள்ளது. நாடகங்கள், புத்தகங்கள், இசையில் ஈடுபாடு கொண்டவராக அறிய முடிகிறது.
ஃபிங்கர் அதிகாரிகளுடன் மோதும் இந்தக்கட்டத்தில் பொருத்தமாக ஷேக்ஸ்பியரின் மக்பெத் நாடகத்திலிருந்து கவிதை வரிகளை உச்சரிக்கிறார்.
ஒரு கொண்டாட்டம்: கைபாக்ஸ் வெடிமருந்து சதி நடந்த நவம்பர் ஐந்து 1605 நாளின் கொண்டாட்டம்.
ஒரு ஆரம்பம்: அரசுக்கு எதிரான V யின் புரட்சி இந்நாளில் ஆரம்பம்.
"என்னைக் கொல்ல நினைத்தாயா? கொல்வதற்கு இந்த ஆடைக்குள் சதை அல்லது இரத்தம் இல்லை. ஒரு சிந்தனை மட்டுமே உள்ளது. சிந்தனைகள் குண்டு துளைக்க முடியாதவை. "
V for vendetta
* தொடரும்...
முதல் அத்தியாயம் பற்றிய முந்தைய முழுமையான பதிவுக்கு:
No comments:
Post a Comment