...கடந்தகாலம் உன்னைத் துன்புறுத்தாது, நீ அனுமதித்தாலே தவிர...
V for vendetta
வென்டெட்டா திரைப்படத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். இரண்டு மணிநேர திரைப்படம் ஆலன்மூரின் கிராஃபிக் நாவலை சிதையாமல் வழங்கி விட்டதா?
நீளமான படைப்புகள் திரைப்படமாக உருமாற்றம் அடையும் போது பல விதங்களிலும் சுருக்கப்பட்டு விடும்.
அந்த வகையில் திரைப்படம் மிகவும் சுருக்கமானது. எழுத்தாளர் ஆலன்மூர் கிராஃபிக் நாவலில் புகுதியிருந்த கருத்துகளை முழுவதுமாகப் பிரதிபலிக்காததோடு சில சம்பவங்கள் மாற்றங்களோடு படமாக்கப்பட்டுள்ளது.
திரைப்படத்தின் முடிவும் ஆலன்மூர் கிராஃபிக் நாவலுக்கு வழங்கி இருந்த முடிவைச் சரியாக கொண்டு வரவில்லை.
ஆலன்மூருக்கே திரைப்பட வடிவம் திருப்தியான ஒன்றாக அமையவில்லை என்ற ஒரு தகவலையும் இணையத்தில் வாசித்தேன்.
இந்த அத்தியாயத்தில் தூப்பறிவாளர் எரிக் ஃபின்ச்சின் உதவியாளராக 'டொமினிக் ஸ்டோன்' அறிமுகமாகிறார்.
V பற்றி அவருக்குக் கிடைத்த தகவல்கள் V சாதாரண மனிதன்தானா என்ற கேள்வியை எழுப்பியது.
அவன் ஒரு பெரும் தனித்த அடையாளம் என்ற தோற்றத்தை...
ஈவி ஹம்மாண்டின் தீய கனவுகள் ஒரு முடிவுக்கு வந்த வேளையில்,
எந்த அளவுக்கு Vயை பற்றி தெரிய வருகிறதோ, அந்த அளவுக்கு V பற்றிய சித்திரம் மிரள வைக்கும் ஒன்றாக உருப்பெற்றுக் கொண்டிருந்தது.
V விட்டுச்செல்லும் V சின்னம், ரோஜா போன்றவை அவனுக்கு ஒரு தோற்றத்தை வழங்குகின்றன.
வயலட் கார்ஸன் ரோஜா
1964ல் உருவாக்கப்பட்ட இந்த ரோஜா வகைக்கு Violet Carson என்ற நடிகையின் பெயர் சூட்டப்பட்டது.(1898-1983)
வென்டெட்டாவில் இது குறிப்பிடத்தக்க வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளதை இனி வரும் அத்தியாயங்களில் வாசிப்பீர்கள்.
"போருக்குப் பின் அழிந்து போன ரோஜா"
இது துப்பறிவாளருக்கு கிடைத்துள்ள ஒரு முக்கியமான தடயம்.
ஈவி ஹம்மாண்ட் தன் கதையை சொல்லத் துவங்கினாள். ஏழு வயதுச் சிறுமி ஒருத்தியின் பார்வையில் விவரிக்கப்பட்ட கதை அது...
இரண்டாம் உலகப்போருக்குப் பின் அமெரிக்காவுக்கும் இரஷ்யாவுக்கும் இடையே பனிப்போர் துவங்கியது.
The cold war
1947 முதல் 1991 வரை நடந்தது. அந்த காலக்கட்டத்தில் அமெரிக்காவும் இரஷ்யாவும் அனு ஆயுதங்கள் முதல் விண்வெளிப்பயனம் வரை ஒன்றை ஒன்று முந்துவதில் கடுமையாகப் போட்டியிட்டன.
1980களில் அந்தப்பனிப்போர் அனு ஆயுதப்போராக வெடித்ததாக ஆலன்மூர் இந்தக் கிராஃபிக் நாவலில் கற்பனையாகப் புனைந்துள்ளார்.
உண்மையில் இந்த கிராஃபிக் நாவல் 1989ல் வெளியானது. பனிப்போர் 1991ல் முடிவுக்கு வந்தது.
நோர்ஸ்ஃபயர் அரசு ஹிட்லரின் வதைமுகாம்கள் போன்று லார்க்ஹில் என்ற வதைமுகாமை உருவாக்கியது.
பாகிஸ்தானியர்கள், ஆப்ரிக்கர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் அரசியல் கைதிகள் அங்கு அடைக்கப்பட்டனர்.
அவர்கள் அங்கு பரிசோதனை எலிகளைப்போல் நடத்தப்பட்டனர்.
ஈவி ஹம்மாண்ட் தன் மனதின் பாரங்களை இறக்கி வைத்துள்ளாள்.
V அவளுக்கு ஆறுதல் தருகிறான். அவனுடைய உருவத்தில் அந்நேரத்தில் அவள் கண்டது...
அவள் சிறு வயதில் பிரிந்த தந்தையை...
லர்க்ஹில் மாதிரி வதைமுகாமில் லூயிஸ் ப்ரொதெரோவின் தீய கனவு துவங்கி இருந்தது.
*********
தொடரும்...
No comments:
Post a Comment