Sunday, June 26, 2022

நதிக்கரை பூதம்!

 


பீவெர்களின் கிராமத்தில் பெரும்மழையால் அணைக்கட்டு சேதமடைகிறது. 

அணை சீரமைப்புப் பணியின்போது புதிரான முறையில் சில பீவெர்கள் காணாமல் போகின்றனர்.

இதற்கிடையே லிண்டென் மரம் சில நாட்களாக எதிலும் பிடிப்பற்றவனாக காணப்படுகிறான். அவனை உற்சாகப்படுத்த பெலிகன் தன்னுடன் பறக்க அழைத்துச்செல்கிறது, 

அப்போது அவர்கள் நதியில் பெரும்பாம்பு உருவத்தை கண்டனர். யகரி அதை ஆராயும்போது,  காணாமல் போன பீவெர்கள் லேலை செய்ய சோம்பற்பட்டு அதனுள் மறைந்துறைவதை கண்டனர்.


அப்போது பெரும்கழுகார்  யகரிக்கு நதிக்கரை பூதத்தின் கதையை விளக்கினார்.  வரலாற்றின் உண்மை நிகழ்வான ஒரு விசித்திரக்கதை அது...










உலகம் இளமையாக இருந்தபோது, ​​மக்கள் சிலர் இந்த பகுதியில் குடியேறினர், அங்கு அவர்கள் கிராமங்களைக் கட்டினார்கள்.

  அவர்களின் வாழ்க்கை நாடோடிகளாக இல்லை.  இறந்தவர்களின் வழிபாட்டு முறைக்கு அவர்கள் பெரும் முக்கியத்துவம் அளித்ததால், அவர்களின் கல்லறைகளை மண் மேடுகளால்* மூடி அவர்களை கௌரவித்தார்கள்.  

( * அல்லது துமுலி (ஒருமை: துமுலஸ்) அவர்களுடைய சரியான தொல்பொருள் பெயர். )


குலமரபுச்சின்னமாக விலங்குகளின் வடிவத்தில் அவர்கள் உருவாக்கிய அந்த மேடுகளில் சில: கரடிகள், முதலைகள் ... அவர்களின் மிகப்பெரிய வேலை சந்தேகத்திற்கு இடமின்றி பாம்புதான்.  *


( * ஆயிரக்கணக்கான புதைகுழிகள் (சிறிய மேடுகள், செயற்கை மலைகள் அல்லது துண்டிக்கப்பட்ட பிரமிடுகள்) மிசிசிப்பி படுகையில் அமைக்கப்பட்டன.  சின்சினாட்டிக்கு அருகில் உள்ள 'பெரிய பாம்பு மேடு' 1,348 அடி நீளம் (411 மீ) மற்றும் குறைந்தது 1,500 ஆண்டுகள் பழமையானது. )







இங்கே கிளிக்.

Saturday, June 18, 2022

சுதந்திரக்காற்று...

 

சியோக்ஸ் கிராமத்துப் பெரியவரான சாந்தமான பாறையிடம் எருமை வேட்டைக்கு குதிரைகளை பயன்படுத்தத் துவங்கியது பற்றிய பழங்கதைகளை கேட்டறியும் யகரி இடிக்குட்டியிடம் அந்தக்கதைகளின் கருத்தைப் பரிசோதிக்க முயலுகிறான்.



நல்ல உறக்கத்திலிருந்து எழுப்பப்பட்ட இடிக்குட்டி, யகரி தன்னை கிண்டல் செய்வதாக எண்ணி கோபடைகிறது. மேலும் யகரி ஒரு யஜமானைப்போல் இடிக்குட்டிக்கு உத்தரவிட ஆரம்பிக்கவே இடிக்குட்டி தனது சுதந்திரத்தைத் தேடி யகரியைப் பிரிந்து செல்கிறது .

இடிக்குட்டியை பிரிந்த யகரி அதை தேடி அலைகிறான்.  ஆனால் எங்கு தேடியும் இடிக்குட்டி கண்ணில்படவில்லை.





சோர்ந்துபோன யகரி இறுதியில் தனது காவல் தெய்வமான பெரும்கழுகாரிடம் சரணடைகிறான்.

இடிக்குட்டியும் யகரியும் நண்பர்களானபோது நடந்ததை நினைவூட்டும் பெரும்கழுகார்,  யகரி இடிக்குட்டியின் சுந்திரத்தை மதிக்கத் தவறிவிட்டதை சுட்டிக்காட்டுகிறார்.  மேலும் "ஆணவம் சர்வாதிகாரத்தின் விதை" என்றும் கூறுகிறார்.





தன்னுடைய தவறை உணரும் யகரி புது உற்சாகத்துடன் இடிக்குட்டியை தேடிக்கண்டு பிடித்து அதனிடம் தன்னுடைய செயலுக்கு மன்னிப்புக் கோருகிறான். இடிக்குட்டி அவனை மன்னித்து மீண்டும் தன்னுடைய நண்பனாக ஏற்றுக்கொண்டது.

அவர்களுடைய சாகஸ வாழ்க்கை புதிய துவக்கம் பெற்றது.


மற்றவர்களுடைய உணர்வுகளை மதிக்க வேண்டும் என்பதை இக்கதை வலியுறுத்துகிறது.

********



Sunday, June 12, 2022

1,மீண்டும் மரணம் வேண்டும்!



அமானுஷ்ய நிகழ்வுகளின் ஆராய்ச்சியாளர் டைலன்டாக்கிடம்,  இறந்து போன தன்னுடைய கணவரை தான் மீண்டும் கொன்றதாக விநோதமான வழக்கு ஒன்றை கொண்டு வருகிறார் ஒரு இளம்பெண்.

டைலனின் சந்தேகம் அப்பெண்ணின் கணவருடன் பணிபுரிந்த  மருத்துவர் ஷாபராஸ்  மீது திரும்புகிறது.

டைலன் டாக்கின் பரம வைரியான ஷாபராஸ் ( அப்ராக்ஷாஸ்) இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மருந்தை கண்டு பிடிக்கிறான்.

ஆனால் உயிர்பெற்றவர்கள் வெறும் நடைபிணங்களாக மாறுகின்றனர்.


டைலன்டாக் ஷாபராஸின் இருப்பிடத்தை அழித்து நடைபிணங்களை அமைதி கொள்ள செய்கிறார்.















Thursday, June 9, 2022

பாலைவனத்தின் "மன்னா"

 


எகிப்தியரின் அடிமைத்தளையிலிருந்து இஸ்ரவேலரை மீட்டு வழி நடத்தியபோது, பாலைவனத்தில் இஸ்ரவேல் மக்களின் பசியை தீர்க்க கடவுள் தினமும் "மன்னா" எனும் உணவை மழையாக  பொழிந்தார்.
#யாத்திராகமம்


இஸ்ரவேலருக்கு பாலைவனத்தில் பொழிந்த மன்னா போல,  செவ்விந்தியருக்கு  எண்ணற்ற எருமை மந்தையை அவர்களின் தெய்வமான வாகோண்டா கொடுத்தார்.




எருமைகளின் வாழ்முறையை நேரில் காண செல்லும் யகரி ஒரு எருமைக்குட்டியையும் அதன் தாயையும் ஓநாய்களின் தாக்குதலில் இருந்து காப்பாற்றுகிறான்.

ஓநாயின் வாலில் யகரி தீ வைக்கும் இடமும், பாதையை மறிக்கும் ஓநாய்களை  இடிக்குட்டி தாண்டி சாகஸம் பண்ணும் இடமும், இறுதியில் ஓநாய்க்கு இடிக்குட்டி உதை விட்டு பறக்க வைக்கும் இடமும் விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் நிறைந்தவை.

எருமைகள் சேற்றில் புரள்வது கொசுக்கடியிலிருந்து தப்பிப்பதற்காக என்பது புதிய தகவல்.





மந்தை ஒரு பரந்த நதியைப் போல நகர்ந்தது, தொடர்ந்து சிறிய நீரோடைகளால் இணைக்கப்பட்டது.  



******

Tuesday, June 7, 2022

இரண்டாவது பூமி!

 


இரு நிலவுகள் கொண்டதும் பூமியைப் போன்றதுமான அல்டபெரானில் மனிதகுலம் குடியேறிய பின் பூமியுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டு கடந்திருந்தது.

சிறு கிராமமான அரேனா பிளாங்காவில் பேரழிவின் அறிகுறிகள் தென்படத் துவங்கின.

ஆழ்கடலிலிருந்து வந்த இனம்புரியாத அபாயத்தால் கிராமம் அழிந்து போக,  மிஞ்சியவர்கள் மார்க், நெல்லி,  கிம் ஆகிய மூவர் மட்டுமே.


தலைநகரான அனடோலியாவை நோக்கி
டிரிஸ் எனும் புதிரான அந்நியனின் உதவியுடன் அவர்கள் பயணத்தை துவக்கினர்.

நெல்லி டிரிஸ்ஸுடன் அல்வாராடோ செல்லத் தீர்மானிக்கிறாள். மார்க்கும் கிம்மும் அவர்களைப் பிரிந்து அனடோலியா செல்வதற்காக போர்ட் சைமன் நோக்கி செல்கிறார்கள்.

போர்ட் சைமனில் லூமிஸ் எனும் பாதிரியார் மார்க்கிடம் அரேனா பிளாங்கா கிராமத்தின் அழிவு பற்றி விசாரித்து குறிப்புகள் எடுத்துக்கொள்கிறார். 

 பாட் எனும் கிழவனின் வஞ்சகத்தால் மார்க்கும் கிம்மும் அராமிஸ் எனும் கப்பலின் கேப்டனுக்கு 100 டாலர்கள் கடன் பட்டவர்களாக பயணத்தை துவக்கினர், அனடோலியாவை நோக்கி...








நூறாண்டுகள் கழிந்த. எதிர்கால வேற்று  உலகிலும் சாமானியர்களின் வாழ்க்கை பெரிதாக மாற்றம் பெறாததாகவே உள்ளது.  



காலவரிசை 

ஜனவரி 2047 பூமியை ஒத்த முதல் கோள் ஆளில்லா விண்வெளி ஆய்வு " கலிலியோ கலிலி " மூலம் கண்டுபிடிக்கப்பட்டது . இது அல்டெபரான்-4 , டாரஸ் விண்மீன் மண்டலத்தில் உள்ள அல்டெபரான் நட்சத்திரத்தை சுற்றிக்கொண்டு 64 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது .  10 ஆண்டுகளுக்கு முன்பு செய்த நுட்பங்களைப் பயன்படுத்தி, ஒளியின் வேகத்தை முறியடிக்கும் வகையில், இத்தகைய பயணம் சாத்தியமாகியது.



செப்டம்பர் 2055 ஆல்டெபரான் - 4 இல் முதல் ஆட்களைக் கொண்ட விண் கப்பலின் வருகை, 
இது மிகவும் எளிமையாக அல்டெபரான் என்று பெயரிடப்பட்டது.  பூமிக்கு ஏறக்குறைய ஒரே மாதிரியான வளிமண்டலம், இனிமையான காலநிலை மற்றும் பூமியில் உள்ளதை விட குறைவான விரோதமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் ஆகியவற்றை இந்த கிரகம் கொண்டுள்ளது என்பதை இந்தப் பணி உறுதிப்படுத்தியது.

செப்டம்பர் 2061 ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அல்டெபரனில் குடியேற்றுவதற்கான செயல்முறையைத் தொடங்க முடிவு செய்தது.  ஒரு விண்கலத்தின் கட்டுமானம்  தொடங்கியது.


ஜூன் 2078 "ஜோஹன்னஸ் கெப்லர்" விண்கலம் 1500 குடியேறிகளுடன் அல்டெபரனுக்கு புறப்பட்டது.

11 பிப்ரவரி 2079 அன்று அல்டெபரான்  வருகை, சூரிய குடும்பத்திற்கு வெளியே முதல் மனித காலனி நிறுவப்பட்ட வரலாற்று நாள்.  பேஸ் 1 என்ற இடத்தில் " தரையிறக்கம் " நடந்தது , காலனியின் தலைநகராக இது மாறியது , குடியேறியவர்களின் முதல் ஜனாதிபதியான அனடோல் லெம்டெரிக்கிற்கு மரியாதை செலுத்தும் வகையில் "அனடோலியா" என்று அழைக்கப்பட்டது.

மார்ச் 2079 " ஜோஹன்னஸ் கெப்லர் " விண்கலம் 14 பணியாளர்களுடன் பூமிக்கு திரும்பும் வழியில் ஒரு தடயமும் இல்லாமல் காணாமல் போனது .


ஏப்ரல் 2084 
2500 குடியேறிகள் மற்றும் 25 பணியாளர்களுடன் "டைக்கோ பிராஹே" என்ற விண்கலம் அல்டெபரான் செல்லும் வழியில் காணாமல் போனது.  ஒளியின் வேகத்தை உடைக்க அனுமதிக்கும் மிகவும் சிக்கலான இயற்பியல் நிகழ்வான " Benevides Transfer " இல் ஒரு தவறு என்று கூறப்பட்ட காரணம் .  கோட்பாட்டாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை அனைத்து டிரான்ஸ்லைட் விமானங்களும் நிறுத்தப்பட்டன .


Aldebaran இல், பூமியுடனான தொடர்பை உறுதிசெய்த தகவல் தொடர்பு செயற்கைக்கோள் உடைந்து  ஒளிபரப்பை நிறுத்தியது.  காலனி எந்த ஆதரவுமின்றி முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டது.  முதல் விபத்தைத் தொடர்ந்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன, பூமியில், விஞ்ஞானிகளால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை, இன்னும் சில டிரான்ஸ்லைட் விமானங்கள் தவறாகச் சென்று விண்வெளியில் காணாமல் போனது ஏன் என்று இன்னும் புரியவில்லை.


நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் அல்டெபரனுக்கு புதிய விண்கலங்கள் எதுவும் வரவில்லை மற்றும் பூமியுடனான வானொலி தொடர்பு மீண்டும் நிறுவப்படவில்லை.