Saturday, June 18, 2022

சுதந்திரக்காற்று...

 

சியோக்ஸ் கிராமத்துப் பெரியவரான சாந்தமான பாறையிடம் எருமை வேட்டைக்கு குதிரைகளை பயன்படுத்தத் துவங்கியது பற்றிய பழங்கதைகளை கேட்டறியும் யகரி இடிக்குட்டியிடம் அந்தக்கதைகளின் கருத்தைப் பரிசோதிக்க முயலுகிறான்.



நல்ல உறக்கத்திலிருந்து எழுப்பப்பட்ட இடிக்குட்டி, யகரி தன்னை கிண்டல் செய்வதாக எண்ணி கோபடைகிறது. மேலும் யகரி ஒரு யஜமானைப்போல் இடிக்குட்டிக்கு உத்தரவிட ஆரம்பிக்கவே இடிக்குட்டி தனது சுதந்திரத்தைத் தேடி யகரியைப் பிரிந்து செல்கிறது .

இடிக்குட்டியை பிரிந்த யகரி அதை தேடி அலைகிறான்.  ஆனால் எங்கு தேடியும் இடிக்குட்டி கண்ணில்படவில்லை.





சோர்ந்துபோன யகரி இறுதியில் தனது காவல் தெய்வமான பெரும்கழுகாரிடம் சரணடைகிறான்.

இடிக்குட்டியும் யகரியும் நண்பர்களானபோது நடந்ததை நினைவூட்டும் பெரும்கழுகார்,  யகரி இடிக்குட்டியின் சுந்திரத்தை மதிக்கத் தவறிவிட்டதை சுட்டிக்காட்டுகிறார்.  மேலும் "ஆணவம் சர்வாதிகாரத்தின் விதை" என்றும் கூறுகிறார்.





தன்னுடைய தவறை உணரும் யகரி புது உற்சாகத்துடன் இடிக்குட்டியை தேடிக்கண்டு பிடித்து அதனிடம் தன்னுடைய செயலுக்கு மன்னிப்புக் கோருகிறான். இடிக்குட்டி அவனை மன்னித்து மீண்டும் தன்னுடைய நண்பனாக ஏற்றுக்கொண்டது.

அவர்களுடைய சாகஸ வாழ்க்கை புதிய துவக்கம் பெற்றது.


மற்றவர்களுடைய உணர்வுகளை மதிக்க வேண்டும் என்பதை இக்கதை வலியுறுத்துகிறது.

********



No comments:

Post a Comment