அமானுஷ்ய நிகழ்வுகளின் ஆராய்ச்சியாளர் டைலன்டாக்கிடம், இறந்து போன தன்னுடைய கணவரை தான் மீண்டும் கொன்றதாக விநோதமான வழக்கு ஒன்றை கொண்டு வருகிறார் ஒரு இளம்பெண்.
டைலனின் சந்தேகம் அப்பெண்ணின் கணவருடன் பணிபுரிந்த மருத்துவர் ஷாபராஸ் மீது திரும்புகிறது.
டைலன் டாக்கின் பரம வைரியான ஷாபராஸ் ( அப்ராக்ஷாஸ்) இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மருந்தை கண்டு பிடிக்கிறான்.
ஆனால் உயிர்பெற்றவர்கள் வெறும் நடைபிணங்களாக மாறுகின்றனர்.
டைலன்டாக் ஷாபராஸின் இருப்பிடத்தை அழித்து நடைபிணங்களை அமைதி கொள்ள செய்கிறார்.
No comments:
Post a Comment