Sunday, September 20, 2026

பேரழிவு! 39-44

 



 

குட்நைட் பசங்களா! நாளை போர்ட் சைமனில், அந்த ஊரிலேயே மிகச் சிறந்த ஹோட்டலில் ஒரு இரவு தங்குவதற்கான செலவை நான் ஏற்கிறேன்! நீங்கள் உண்மையான படுக்கைகளில் நிம்மதியாகத் தூங்கலாம்! ஹீ ஹீ ஹீ!

குட்நைட் மிஸ்டர் பேட்!



மிஸ்டர் பேட் கொஞ்சம் அதிகப்படியா நடந்துக்குறாருன்னு நினைக்கிறேன்... எனக்கு என்னவோ, அவரு சந்தேகத்துக்கு இடமான ஆளாத் தெரியுறாரு...

ஏய், சிறுக்கி! உலகத்தைப் பத்தி உனக்கு என்ன தெரியும்னு, பார்த்த முதல் பார்வையிலேயே ஆட்களை எடை போடுற? என்னைக் கொஞ்சம் தூங்க விடுறியா, தயவுசெய்து?


துரதிர்ஷ்டவசமாக, அடுத்த நாள் உண்மை என்னவென்றால், கிம் சொன்னதுதான் சரி. மிஸ்டர் பேட் அந்த வண்டியையும், குறுக்குவில்லையும், எங்கள் மற்ற எல்லாப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு காணாமல் போய்விட்டார்.

மார்க், எழுந்திரு! நமக்கு ஒரு சின்னப் பிரச்சனை...


எங்கள் பொருட்களை, முக்கியமாக எங்களது அருமையான வண்டியை இழந்ததும், அந்தக் கிழவனிடம் இவ்வளவு எளிதாக ஏமாந்துபோனதும் கஷ்டமாக இருக்கிறதா? அல்லது கிம் என்னை விட அதிக கூர்மதியுடையவளாக இருந்திருக்கிறாள் என்பதை ஒப்புக்கொள்ளும் அவமானகரமான நிலை கஷ்டமாக இருக்கிறதா என்றே எனக்குத் தெரியவில்லை...

​நாசமாய்ப் போக!

 



"நான் அப்பவே சொன்னேனே" என்பது போன்ற எதையாவது சொல்ல நீ துணிந்தால் கூட, நான் உன்னைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிடுவேன், கிம் கெல்லர்!

கொஞ்சம் அமைதியாயிரு, நண்பா !


நீ எங்கே போகிறாய்? சாலை அந்தப் பக்கம் இருக்கிறது!

நான் காட்டின் வழியே குறுக்காகச் செல்லப் போகிறேன்.

அது ஆபத்தானது அல்லவா, மார்க்? பாதையைப் பின்பற்றிச் செல்வது சற்று அதிக நேரம் எடுக்கலாம், ஆனால் அதுதான் பாதுகாப்பானது ...


நான் காட்டு வழியாகச் செல்கிறேன். நீ சாலை வழியாகச் செல்ல விரும்பினால், தாராளமாகச் செல்; என்னை நிம்மதியாக விட்டுவிடு!

சரி, சரி...



மார்க்! நாம் கொஞ்ச நேரமாவது ஓய்வெடுக்கக் கூடாதா? என் கால்கள் ஜெல்லி மாதிரி துவண்டு விட்டன. 

நான் களைப்பாக இல்லை; நான் செல்ல விரும்புகிறேன்.


கடவுளே! உன்னுடன் வந்தது என் வாழ்க்கையிலேயே நான் செய்த மிகப்பெரிய தவறு என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்துவிட்டது!

எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது!


ஒருவழியாக உன்னைப் பிடித்துவிட்டேன்! அப்பாடா! நான் வழி தவறிவிட்டேன் என்று நினைத்தேன்! 


எங்கே போகிறாய்?! நான் இப்போதுதான் இங்கு வந்தேன், மார்க்! ஒரு நிமிடம் பொறு!

நான் ஏற்கனவே ஓய்வெடுத்துவிட்டேன்; மீண்டும் பயணத்தைத் தொடருகிறேன்.

அப்படிச் செய்யாதே, மார்க்! என்னை தனியாக விட்டுவிடாதே! கெஞ்சிக் கேட்கிறேன்! கெஞ்சிக் கேட்கிறேன்! 


இந்தச் சாபக்கேடான காட்டில் தனியாக இருப்பது எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது! அது என்னை மிகவும் பயமுறுத்துகிறது, என் பெற்றோரை நினைத்து பைத்தியம் பிடிப்பது போல் ஏங்க ஆரம்பித்துவிட்டேன்! உனக்கு அது புரியவில்லையா, கேவலமான முட்டாளே!? 


சரி, நான் உனக்காகக் காத்திருக்கிறேன்... அமைதியாக இரு... 



நான் உன்னை வெறுக்கிறேன் மார்க் சோரன்சென்! உன் முன்னால் என்னை ஒரு சின்னப் பெண்ணைப் போல அழ வைத்துவிட்டாய்! 


என் கோபத்தை உன் மீது காட்டியது தவறுதான் என்று எனக்குத் தெரியும்; ஆனால், நீ நடந்துகொண்ட விதத்தில் என் மீது உன் விருப்பத்தை திணிக்க உனக்கு எந்த உரிமையும் இல்லை! 

இது ஒரு கடினமான பயணம். எனக்குப் பதினேழு வயதுதான் ஆகிறது. உன்னைப் போன்ற ஒரு இளம் பெண்ணை என் மீது சுமத்திக்கொள்ள என்னால் முடியாது!

எனக்கு வேறு வழியில்லை! அதுதான் உனக்குப் புரியவில்லை! என் வாழ்நாள் முழுவதும் அல்வராடோவில் இருக்க நான் விரும்பவில்லை! உன்னைப் போல நானும் அனடோலியாவுக்குச் செல்ல விரும்புகிறேன்! நான் இன்னும் கொஞ்சம் இளையவள்தான், சரிதானே, ஆனால் சூழ்நிலைகள் என்னைச் செயல்படத் தூண்டியுள்ளன!

நீ விஷயங்களை ரொம்பவே மிகைப்படுத்துகிறாய்!... உன் மாமா வீட்டிற்குப் போவதால், உன் வாழ்நாள் முழுவதையும் அங்கேயே கழிக்கப் போகிறாய் என்று அர்த்தமல்ல!

அல்வராடோவில் இருக்கும் என் மாமாக்களைப் பற்றி  உனக்குத் தெரியாது! என் உறவினர்களையும் தெரியாது!

சரி, நாம் போர்ட் சைமனை அடைந்ததும், உன்னிடமிருந்து நான் விலகிக்கொள்வேன். நான் ஒரு மாலுமியாக அனடோலியாவுக்கு ஒரு கப்பலில் ஏறப் போகிறேன். நீ உன்னைச் சமாளித்துக்கொள்!

நான் சமாளித்துக்கொள்வேன். நீயே பார்ப்பாய்!

இரவு வேளையில் நாங்கள் போர்ட் சைமனை அடைந்தோம்; அப்போது கடும் பசியாலும் சோர்வாலும் தளர்ந்து போயிருந்தோம்.

இனி என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது! எங்காவது உட்கார்ந்து சூடாக ஏதாவது சாப்பிட வேண்டும்!

நம்மிடம் ஒரு பைசா கூட இல்லை என்பதை நீ மறந்துவிட்டாய் போலிருக்கிறது ...


நான் தேடிக்கொண்டிருந்தது இதுதான்! வாருங்கள்!

கிம், நம்மிடம் பணமில்லை! அவர்கள் நம்மை வெளியேற்றிவிடுவார்கள்!

காம் க்ரீக் டேவர்ன்

பாரம்பரிய கடல் உணவு

வயிறு நிறைய உ ணவுகள்



நமக்கு என்ன நடந்தது என்று அவர்களிடம் விளக்குவோம்! நான் பேசுகிறேன்! 

இல்லை, நான் கெஞ்சப் போவதில்லை! நீ விரும்பினால், தனியாகச் செல்! சில மணிநேரப் பசியை என்னால் நன்றாகவே தாங்கிக்கொள்ள முடியும்.


கிம் அதை எப்படிச் செய்தாள் என்று எனக்குத் தெரியாது, ஆனால் அவள் மதுக்கடைக்குள் நுழைந்த இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, சில நல்ல மனிதர்கள் என்னை அழைத்துச் செல்ல வெளியே வந்தார்கள். அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து எங்கள் சாப்பாட்டிற்குப் பணம் செலுத்துவதாகக் கூறினார்கள். அவர்கள் என்னைப் போலவே மாலுமிகள் என்றும், மாலுமிகள் ஒருபோதும் சக மாலுமியை சிரமத்தில் விடமாட்டார்கள் என்றும் சொன்னார்கள்.


எங்களுக்கு உதவியவர்களின் இயல்பான ஆர்வத்தைத் தணிக்கும் வகையில், நாங்கள் சந்தித்த இடர்ப்பாடுகள் குறித்து அவர்களிடம் எடுத்துரைக்கும் பொறுப்பை கிம் ஏற்றுக்கொண்டாள். பசியும் சோர்வும் இருந்தபோதிலும் அவள் அதைச் சிறப்பாகச் செய்தாள்; இளம் கிம், பதின்மூன்று வயதை விடவும் மிகவும் முதிர்ச்சியானவளாகத் தோன்றிய தருணங்கள் அவை. 

கடைக்காரர் இலவசமாகத் தந்திருந்த சுவையான கேக் துண்டைச் சுவைக்கத் தொடங்கியிருந்த வேளையில், ஒரு கரகரப்பான குரல் எங்களை திடுக்கிட வைத்தது.

ஏய்! பையா எங்களுடன் வா! பாதிரியார் உன்னைப் பார்க்க விரும்புகிறார்!



சீக்கிரம்! சீக்கிரம்!

பா... பாதிரியார்?!... என்னைப் பார்க்க...?!

அவன் சாப்பிட்டு முடிக்கட்டும். இந்தக் இளைஞர்களுக்கு இன்று ஒரு மோசமான நாளாக இருந்திருக்கிறது!


ஒரு பாதிரியாரை நீங்கள் காத்திருக்க வைக்கக்கூடாது! அது உங்களுக்குத் தெரியாதா? 


பாதர் என்னை ஏன் பார்க்க வேண்டும்? அவருக்கு என்ன தேவைப்படுகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? நிச்சயம் இதில் ஏதோ தவறு நேர்ந்துள்ளது!  

வாயை மூடிக்கொண்டு நட!


நான் மிகவும் பிரமித்துப்போனேன். என் வாழ்க்கையில் ஒரு படைவீரரிடம் பேசியது அதுவே முதல் முறை! இதற்கு முன்பு ஒரு பாதிரியாரையும் பார்த்ததில்லை!

 ஒரு வான் கப்பலையும் இவ்வளவு அருகில் பார்த்ததில்லை! அதுவும் பிரம்மாண்டமான இராணுவ வான்கப்பல்! அது நிச்சயமாக ஒரு மறக்க முடியாத இரவு! 


அந்தச் சிறுவனை அழைத்து வந்து விட்டோம், பாதர்!

மேலே போ!


ம... மன்னிக்கவும்...

இங்கே வா. இன்னும் அருகில் வா!


உங்கள் கிராமம் ஒரு கடல்வாழ் உயிரினத்தால் அழிக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டேன்; இது உண்மையா?

ஆம்... உண்மைதான், பாதர்!


நீ என்னை 'என் ஆண்டவரே' என்றுதான் அழைக்க வேண்டும்! பள்ளியில் உனக்கு அதை யாரும் கற்றுக்கொடுக்கவில்லையா?!


என் ஆண்டவரே, என்னை மன்னியுங்கள்! ஆம், என் கிராமம் கடலிலிருந்து வந்த ஏதோ ஒன்றால் அழிக்கப்பட்டது என்பது உண்மைதான்!

நீ அந்த உயிரினத்தைப் பார்த்தாயா?


இல்லை, என் ஆண்டவரே! நான் அப்போது கிராமத்தில் இருக்கவில்லை. நான் திரும்பி வந்தபோது, ​​அது அழிந்து போயிருந்தது, அந்த உயிரினமும் ஏற்கெனவே கடலுக்குத் திரும்பிச் சென்றிருந்தது.

உயிர் பிழைத்தவர்கள் யாருமில்லையா?

யாருமில்லை. அந்த உயிரினம், அதிதீவிர நச்சுத்தன்மையுள்ள, உயிர்க்கொல்லித் திரவம் ஒன்றைப் பரப்பியிருந்தது!


இவர்களை உனக்குத் தெரியுமா? இவர்கள் சமீபத்தில் உன் கிராமத்தின் வழியாகச் சென்றார்களா?

டிரிஸும் பொன்னிற தலைமுடி கொண்ட அவனுடைய தோழியும்...

கவனமாக இரு மார்க்! இதிலெல்லாம் சிக்கிக்கொள்ளக் கூடாது.

இல்லை, என் ஆண்டவரே, நான் இவர்களைப் பார்த்ததே  இல்லை!



நீ பொய் சொல்கிறாய்!

காவலர்களே!


ஹாய், பையா! ஹீ ஹீ ஹீ!

மிஸ்டர் பேட்! 

அமைதி!



!

No comments:

Post a Comment