இன்னும் கொஞ்ச தூரம்தான்! கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள்!
ஆ! வலி, வலி!
ஹே ஹே! அவளை அடித்து விட்டேன்!
சீக்கிரம் அம்பை விடு! அவர்கள் அந்த மிருகத்தின் கழுத்தை அடையப் போகிறார்கள்!
இதோ! நாம் வந்து விட்டோம்!
இன்னும் ஒரே ஒரு தாவல்தான்!
நாம் மேலே வந்துவிட்டோம்! இனி அவர்களுடைய தாக்குதல்கள் நம்மை எட்டாது.
அம்பு நுரையீரலைத் துளைத்துவிட்டது! இவள் பிழைக்க வழியே இல்லை!
என் கை... ரத்தப்போக்கை நிறுத்த, கட்டு போட வேண்டும்.
தைரியமாக இருங்கள்! உங்களுக்குச் சரியாகி விடும்!
நீ எனக்கு உதவ வேண்டும்.
நான் உங்களுக்கு நிச்சயமாக உதவுவேன்!
இந்த அம்பு! இதை நீ அகற்ற வேண்டும்.
இப்போதா?! இங்கேயா?! இது கடினமாக இருக்குமே!
நீ இதை செய்தே ஆக வேண்டும்! இப்போதே! கெஞ்சிக் கேட்கிறேன்!
ஆண்டவனே!
இழு! இழு!
ஆஆஆ!
ஒருவழியாக!
அது முடிந்துவிட்டது! முடிந்துவிட்டது!
இன்னும் முடியவில்லை என் காயம்பட்ட கையை நீ வெட்டி எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அழுகத் துவங்கி விடும்!
என்ன?! என்னிடம் கத்தி இல்லை! என்னால் முடியாது!
நீ அதைச் செய்தே ஆக வேண்டும்! ஏதாவது செய்! அதைத் துண்டிக்க உன் பற்களைப் பயன்படுத்து!
வேண்டாம்! அப்படிச் செய்ய என்னிடம் கேட்காதே! என்னால் முடியாது! என்னால் இயலாது!
நீ கண்டிப்பாக உதவ வேண்டும்! என் உயிருக்கு ஆபத்து! எனக்கு உதவு! எனக்கு உதவு!
நிச்சயமாக, நான் அதைச் செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். ஆனால் அதைப் பற்றிக் பேசி அந்தச் சம்பவத்தை மீண்டும் நினைவுகூர நான் விரும்பவில்லை.
அவளது அறிவுறுத்தலின்படி, அவளது காயங்களைப் பாதுகாப்பதற்காக அவளது சட்டையைக் கொண்டு கட்டுத்துணிகளைத் தயாரித்தேன். ஆச்சரியப்படும் விதமாக, அவளது உடலில் இருந்து இரத்தம் வெளியேறுவது நின்றிருந்தது. குறைந்தபட்சம் வெளிப்புறத்திலாவது. ஆனால் உட்புறத்தில் நிலைமை அப்படியிருந்திருக்காது; அநேகமாக அவளுக்கு இன்னும் சில மணிநேரங்களே உயிர் எஞ்சியிருந்திருக்கலாம்.
அது என்னை மிகவும் கவலையடையச் செய்தது! அந்தப் பெண் சாதாரணமானவள் அல்ல என்று ஏதோ ஒன்று எனக்கு உணர்த்தியது. அதோடு, விவரிக்க முடியாத ஒருவித நெருக்கத்தை அவள் மீது நான் உணரத் தொடங்கினேன். அவளை இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்ளவும், அவளுக்கு நண்பனாகவும், அவளை அடிக்கடி சந்திக்கவும் நான் விரும்பினேன்.
அவள் அழகாகவும் இருந்தாள்! அவளுக்கு எதிராக ஏன் இவ்வளவு வன்முறை?
அசௌகரியமான நிலை மற்றும் கீழே விழுந்து மடியும் அபாயம் இருந்தபோதிலும், நான் மிகுந்த களைப்பால் தூங்கிப்போனேன்; அதேவேளையில், எங்கள் பிரம்மாண்டமான வாகனம் எங்கள் அல்லல்களையும் வேதனைகளையும் சற்றும் பொருட்படுத்தாமல், கம்பீரமாகவும் அமைதியாகவும் காற்றில் மிதந்து சென்றுகொண்டிருந்தது.
எழுந்திரு, இளைஞனே!
எ... என்ன?
இந்த விலங்கு அநேகமாகச் சில நாட்களுக்குக் கடலுக்குள் செல்லக்கூடும். ஒருவேளை வாரக்கணக்கில்கூட இருக்கலாம். அது மீண்டும் வானில் பறப்பதற்கு முன்பாக, நாம் இப்போதே கீழே இறங்க வேண்டும்.
ம்... உங்கள் தற்போதைய உடல் நிலையில் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
எனக்கு வேறு வழியில்லை.
நான் மிகவும் பாரமாக இருக்கிறேனா?
இல்லை! என்னால் உங்களைச் சுமக்க முடியும்!
ஆனால் அது முழு உண்மை அல்ல!
ஐயோ! கூடாது!
கடவுளே! இந்த நிலையில் அவள் தண்ணீரில் நனையக்கூடாதே...
அவள் உடல் முழுவதும் குளிர்ந்து, வெளிறிப் போயிருந்தது. அவளை ஏரிக்கரைக்கு நகர்த்திச் சென்றபோது, அவள் அதிக நேரம் உயிர்வாழ மாட்டாள் என்று எனக்கு உறுதியாகத் தோன்றியது.
ஆனால் நான் எண்ணியது தவறு!
ஹே! நிதானமாக வாருங்கள்! உங்கள் காயம்...
இரத்தம் வரவில்லை! நீங்கள் மிகவும் உறுதியானவர்!
வலி குறைந்திருக்கிறதா?
ஆம், இப்போது பரவாயில்லை!
நீ டிரிஸை எப்படிச் சந்திதாய்?
பேரழிவுக்குச் சற்று முன்பு அவர் கிராமத்துக்கு வந்தார்.
பேரழிவா?
பிறகு நான் அவளிடம் முழுக் கதையையும் சொன்னேன்.
உண்மையைச் சொல்லப்போனால், எனக்கும் அது புரியவில்லை! ஆனால் அதற்காக நான் வருத்தப்படவில்லை.
எனக்கு நீ உதவி செய்ததை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்! இப்போது நீ இங்கிருந்து கிளம்பிவிடுவதுதான் நல்லது. என்னுடன் தங்கியிருப்பது உனக்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
ஆனால், காயம்பட்டிருக்கும் நிலையில் நீங்கள் தனியாக எப்படிச் சமாளிக்கப் போகிறீர்கள்?
நான் சமாளித்துக்கொள்வேன். ஒன்று அல்லது இரண்டு நாட்களில் பழைய நிலைக்குத் திரும்பிவிடுவேன்.
நீங்கள் அளவுக்கு அதிகமாக நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள். உணவை எப்படித் தேடிப் பிடிப்பீர்கள்?
எனக்காக நீ ஏற்கனவே போதுமான அளவு செய்துவிட்டாய். நீ அனடோலியாவுக்குச் செல்ல முயன்றால், யாரும் உன்னைக் கண்டுபிடிக்கவே மாட்டார்கள்! ஒரு சில வீரர்கள் மட்டுமே உன் முகத்தை ஒரு கணம் பார்த்தார்கள்.
ஆனால், காயம்பட்ட நிலையில் உங்களை இங்கே தனியாக விட்டுவிட்டுச் செல்ல நான் தயாராக இல்லை! இல்லை, அதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது!
நீ பெரிய தவறு செய்கிறாய். நாம் இங்கே இருக்கக்கூடாது; இது ஆபத்தானது.
ஏன்? நாம் இங்கே இருப்பது யாருக்கும் தெரியாது .
நீங்கள் சொல்வது தவறு. 'காராவெல்' விலங்கு காற்றின் போக்கில்தான் சென்றது; அந்தக் காற்றோட்டங்கள் மிகவும் சீரானவை. நன்கு அறியப்பட்டவை. நம்மைக் கண்டுபிடிக்க அவர்கள் காற்றின் பாதையைப் பின்தொடர்ந்தால் போதும். ஆனால், நாம் காற்றிற்குச் செங்குத்தான திசையில் பயணித்து அந்தப் பாதையிலிருந்து விலகிச் செல்ல வேண்டும்.
அது நல்ல யோசனைதான்! நீங்கள் சொல்வது சரிதான், மேடம்!
ஏய், 'மேடம்' என்று சொல்வதை நிறுத்தேன்? என் பெயர் அலெக்ஸா, அலெக்ஸா கோமரோவா; உன் பெயர் என்ன? என் உயிரைக் காப்பாற்றியவனின் பெயர் இன்னும் எனக்குத் தெரியாதே!
மார்க் சோரென்சென்!



