Saturday, December 24, 2022

22,சுழற்காற்று...

 


அந்த இளவேனிற் பிற்பகலில், வானிலை  கடினமாகவும், அதிக வெப்பமாகவும் இருந்தது.

 யகரியின் பழங்குடியினர்  முகாம் அமைத்து தங்கியிருந்த புல்வெளியை பயங்கர சுழற்காற்று தாக்கியது.

சுழற்காற்றில் தூக்கிச் செல்லப்பட்டு காணாமல் போன மாந்த்ரீகரையும், குழம்புக்கண்ணாரையும் பெரும் கழுகாரின் உதவியுடன் மீட்டு வருகிறான் யகரி.



புயலில் அகப்பட்டாலும், மயக்கத்தில் கிடந்தாலும், மரத்திலிருந்து விழுந்தாலும் குழம்புக்கண்ணார் தன் சமாதான புகைக்குழாயை பிரிவதேயில்லை. 😂



வான்கோழிகளுக்கு பாம்புகளிடம் அச்சமில்லை. என்பது  புதிய தகவல்! 😊







நமது மாந்த்ரீகர் இருக்கும் இடம் தெரியுமா பெரும் கழுகாரே?

நிழல் அவனைக் கைதியாக வைத்திருக்கிறது, ஆனால் ஒளி அவனை விடுவிக்கும்! 

நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

உதிக்கும் சூரியனுக்கு முன்னால் செல், நீ ஒரு கல் மலையைக் காண்பாய். சூரியனின்  முதல் கதிர்கள் ஓநாயின் கண்  வழியாக செல்லும் தருணத்தைப் பார்!  அது அசையாத கண், 

அது நீ தேடும் மாந்த்ரீகர் மறைந்துள்ள இடத்தை ஒளிரச் செய்யும், இப்போது தூங்கச்செல்!


நீங்கள் புறப்படுகிறீர்களா பெரும் கழுகாரே?

உறங்குவதற்கு உனக்கு குறுகிய நேரமே மீதியுள்ளது யகரி!





இங்கே கிளிக்





இங்கே கிளிக்: வான்கோழிகள்



இங்கே கிளிக்: Campagnol

பழங்குடியினரிடையே உருப்பெறத் துவங்கியிருந்த ஒற்றுமையின்மையை நீக்கவே வானத்தின் சீற்றம் சுழற்காற்றாய் உருவெடுத்தது என 
இறுதியில் மாந்த்ரீகர் யகரிக்கு விளக்கிக் கூறினார்.






Monday, December 19, 2022

9,முடிவல்ல... ஆரம்பம்...

 


ஏப்ரல் 3, 1953ல் இரகசியப் பரிசோதனையாக ஆல்ஃபா எனும் மனிதக்குரங்கு ஓமேகா எனும் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு ஏவப்படுகிறது.

( ஆல்ஃபா ஒமேகா, தொடக்கத்தையும் முடிவையும் குறிக்கும் இரண்டு கிரேக்க சொற்கள்...)


ஆனால்   ஏதோ தவறுதல்  காரணமாக பூமியின் ஈர்ப்பு சக்தியிலிருந்து துண்டிக்கப்பட்ட ஓமேகா எல்லையற்ற பிரபஞ்சத்தில் முடிவற்ற பயணத்தை மேற்கொண்டது.

அதில் பயணிக்க வைக்கப்பட்ட ஆல்ஃபா உணவின்றி, நீரின்றி, உணர்வின்றி பிரபஞ்சத்தின் அச்சுறுத்தும் தனிமையில் கழித்த நெடும் நாட்களுக்கு பின் அதன் மூளை பரிணாம வளர்ச்சி பெறத் துவங்கியது.

மனிதர்களை விட சிறந்த அறிவைப் பெற்ற ஆல்ஃபாவுக்கு, நினைத்த உடலில் புகவும் நினைத்த வடிவத்தை எடுக்கவும் கூடிய ஆற்றல்களும்  கிடைக்கிறது.

விண்வெளியில் ஏவப்பட்டு 34 ஆண்டுகளுக்குப் பின், பூமிக்குத் திரும்பினால் தனக்கு மரணம் நிச்சயம் என்பதை அறிந்தும்,  பரிசோதனைக்காக அனுப்பி விட்டு தன்னை மறந்து போன மனிதர்களைப் பழிவாங்க, ஆல்ஃபா ஓமேகாவில் பூமிக்கு வந்திறங்கி அமி எனும் யுவதியுடன் உடலுறவு கொண்டு, பின் இறந்து போகிறது.

அமிக்குப் பிறக்கப்போகும் குழந்தை எப்படி இருக்கப் போகிறது?

அரக்கனாகவா?

சூப்பர்மேனாகவா? 

இது முடிவா?

இல்லை, ஆரம்பமா? 




















Thursday, December 15, 2022

8,ஸ்டீல் மாளிகை படுகொலைகள்.

 


வேல்ஸ் 1971 ஸ்டீல் மாளிகை.

அன்றைய தினம் லியோனோராவிற்கு மிக கொடூரமாக துவங்கியது.  விழிகளில் ஒளியிழந்த இளநங்கை லியோனோராவின் குடும்பமே பணியாட்கள் உட்பட 'டேமியன்' என்ற அதீத பலமிக்க அரக்கனின் இரத்த வெறியாட்டத்துக்குப் பலியாகி இருந்தது.





கைது செய்யப்பட்ட டேமியன் மனநோயாளி என தீர்ப்பளிக்கப்பட்டு மனநோயாளிகள் சிறைச்சாலைக்கு அனுப்பப்படுகிறான். அங்கு டேமியன் எவரிடமும் எதுவும் பேசாதவனாக இருக்கிறான்.

ஆனால் பதினாறு ஆண்டுகளுக்குப் பின் ஒருநாள் லியோனோராவின் பெயரை உச்சரிக்கும் டேமியன், மனநோயாளிகள் விடுதியில் இருந்து தப்பி விடுகிறான்.

மனநோய் விடுதியின் இலேசான மின்னோட்டம் கொண்ட மின்வேலியும்,  உயரழுத்த மின்சாரமும், துப்பாக்கித் தோட்டாக்களும், உயரமிக்க வழவழப்பான மதிற்சுவரும், அதில் பதிக்கப்பெற்ற கண்ணாடித் துண்டுகளும் அவனைத் தடுப்பதில் தோற்று விடுகின்றன.



அவனால் தனக்கு ஆபத்து ஏற்படலாம் என அஞ்சும் லியோரா டைலன்டாக்கை சந்தித்து டேமியனை கண்டுபிடிக்க பணியமர்த்துகிறாள்.




மனநோயாளிகள் விடுதிக்குச் சென்று மருத்துவர் பியர்ஸிடம் டேமியன் தப்பிய விதம் பற்றியும், டேமியனின் அதீத அசுர உடல் பலம் பற்றியும் விசாரித்து அறியும் டைலன், லியோனோராவை சந்திக்க ஸ்டீல் மாளிகைக்குச் செல்கிறார்.



 ஸ்டீல் மாளிகைக்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு மருத்துவர் பியர்ஸ் ஹெர்பர்ட் லியோனோராவின் கணவர் என்றும் அவர்களுக்கு லிலித் என்ற மகள் இருப்பதையும் டைலன் தெரிந்து கொள்கிறார்.



அன்றைய இரவே ஸ்டீல் மாளிகையில் டேமியனின் தாக்குதல் நடைபெறுகிறது. அவனது தடத்தை தொடரும் டைலன் ஸ்டீல் மாளிகையின் கீழே பாதாள அரண்மனையில் டேமியனைக் கண்டு பிடிக்கிறார். அவன் கண்களில் நீர் வழிய லியோனோராவின் புகைப்படமொன்றை பார்த்துக் கொண்டிருக்கிறான்.




டைலன் டேமியனிடம் பேசி அவனை சரணடையச் செய்ய முயல்கிறார். ஆனால் அவரிடமிருந்து தப்பி வெளியேறும் டேமியன் பாதுகாவலர்களால் சுட்டு வீழ்த்தப் படுகிறான். 

இவ்வாறாக கதை ஒரு முடிவை அடைந்து விட்ட போதிலும் டைலனின் மனதில் ஏதோ ஒன்று பொருந்தாதது போல உறுத்துகிறது.



அவரது உள்ளுணர்வு விரைவிலேயே உண்மையாகியது. பியர்ஸ் ஹெர்பர்ட் லியோனோராவால் கொல்லப்படுகிறார். லியோனோராவின் வாக்குமூலத்திலிருந்து: டேமியனும் லியோனோராவும் காதலர்கள். லியோனோரா கர்ப்பமானதால் லியோனோராவின் தந்தை கருவை கலைக்கவும் டேமியனை தண்டிக்கவும் தீர்மானிக்கிறார்.

ஆத்திரத்தில் லியோனோரா தன் குடும்பத்தையே பணியாளர்கள் உட்பட தீர்த்துக் கட்டுகிறாள். ஆனால் அதிர்ச்சியில் அவளுக்கு பார்வையும் தான் செய்த கொலைகள் பற்றிய நினைவும் போய்விடுகிறது.

கொடூரக் கொலையாளியாக குற்றம் சாட்டப்பட்ட டேமியன் மவுனமாகி விடுகிறான்.

லியோனாராவின் பணத்தின் மீதான ஆசையால் கருவுற்றிருந்த அவளை திருமணம் செய்து கொள்கிறார் மனநல மருத்துவர் பியர்ஸ் ஹெர்பர்ட்.

டேமியனின் மரணம் லியோனோராவின் நினைவாற்றலை மீட்கிறது. தன் மீது சந்தேகம் கொள்ள துவங்கியிருக்கும் ஹெர்பெர்ட்டை கொன்று விட்டு தானும் டேமியனின் பிணத்துடன் எரிந்து போகிறாள்.


காதல், காமம், அந்தஸ்து என வினாடி நேர உணர்வுகளால் துவக்கம் பெறும் காலத்தின் நீண்ட சம்பவங்கள் லிலித் எனும் இளநங்கையை பரிதாபத்திற்குரிய அநாதையாக்கி விட்டு தன் ஓய்வற்ற ஓட்டத்தை தொடர்கிறது.

*****




இங்கே கிளிக்: Dylan thomas




Friday, December 9, 2022

6,நரகத்தின் பேரழகி!

 

 லண்டன் 1945

தன்னை மோசடி செய்த மாலா எனும் இளநங்கையை கொலை செய்ய ஆயிரம் பவுண்டுகளுக்கு  லாரண்ஸ் வரேடோவுடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறான் ஒரு மனிதன். கொலை செய்வதற்காக ஒரு துப்பாக்கியையும் தருகிறான்.

ஆனால் கொலை நிகழ்ந்த பின் புதிரான முறையில் நடந்து கொள்ளும் அந்த மர்ம மனிதன்  லாரண்ஸ் போலீசில் சிக்கவும் காரணமாகி விடுகிறான். லாரண்ஸுக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது.

தூக்குதண்டனை நிறைவேற்றப்படும்போது கழுத்து முறியாததால் லாரண்ஸ் உயிர் பிழைத்து தப்பி விடுகிறான். ஆனால் அரசுக் குறிப்புகளில் அவன் இறந்து போனவனாக பதியப்படுகிறது.

 அவனது பாக்கெட்டில் ஆயிரம் பவுண்டுகள் உள்ளது, அது தன்னிடம் வந்த விதம் பற்றி தெளிவற்றவனாக அமெரிக்காவுக்கு தப்பிச் செல்லும் லாரண்ஸ் நாற்பதாண்டுகள் கழித்து தன் வயதான காலத்தில் மீண்டும் இங்கிலாந்து திரும்புகிறான்.

  தன்னுடன் கொலை ஒப்பந்தம் செய்து கொண்ட அந்த மர்ம மனிதனை மீண்டும் சந்திக்க விரும்பும் லாரண்ஸ் அமானுஷ்ய ஆராச்சியாளர் டைலன்டாக்கின் உதவியை நாடுகிறான்.

அந்த விசித்திர வழக்கை ஏற்றுக்கொள்ளும் டைலன்டாக் தனது துப்பறிதலை துவங்கினார். 


போலீஸ் தலைமையத்துக்குச் சென்று அந்த பழைய வழக்கில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கியின் உரிமையாளர் பற்றிய விபரங்களை நவீன கம்யூட்டரின் உதவியுடன் அறிய முற்படுகிறார். ஆனால் இன்ஸ்பெக்டர் ப்ளாச் அந்த பழைய வழக்கில் தன் நேரத்தை செலவழிக்க மறுத்து விடவே காவல்துறையின் அனுமதியின்றி ஆவணக்காப்பகத்தில் நுழையும் டைலன் அந்த வழக்கு பற்றிய ஃபைலை படிக்க முயலும்போது புத்தகத்திலிருந்து பிசாசாக தோன்றும் உருவம் அந்த மர்ம மனிதனாக மாறி டைலனை சுட முயல்கிறது.

அப்போது அங்கு வரும் கிரவுச்சோ அந்த உருவத்தை நெற்றியில் சுட, 
 டைலன் அமானுஷ்ய உருவத்தால் அலைக்கழிக்கப்பட்டு 
மயக்கமடைகிறார்

இருபத்து நான்கு மணி நேரம் கழித்து கண் விழிக்கும் டைலன் தான் மருத்துவமனையில் இருப்பதையும், காவல்துறையின் ஆவணக் காப்பகத்துக்குள் அனுமதியின்றி நுழைந்ததால் கைது செய்யப்பட்டு இருப்பதையும்,
 இன்பெக்டர் ப்ளாச் ஐயாயிரம் பவுண்டுகள் செலுத்தி நிபந்தனை ஜாமீனில் தன்னை மீட்டிருப்தையும் அறிந்து கொள்கிறார்.

ஒரு நல்ல வழக்கறினரின் உதவியை நாடும்படி டைலனுக்கு ஆலோசனை கூறும் ப்ளாச், டைலன் கேட்டிருந்த துப்பாக்கியின் உரிமையாளர் பற்றிய விபரங்களை தந்து விட்டுச் செல்கிறார்.

 துப்பாக்கி 6/6/1941ல் மிஸ்டர் கிளாரன்ஸ் ஒட்பாடி என்பவருக்கு 
விற்கப்பட்டிருந்தது.




ஒட்பாடியை சந்திக்க செல்லும் டைலன்,  ஒட்பாடி புற்றுநோயால் இறந்து விட்டதையும் மனநலம் பாதிக்கப்பட்ட
அவனது தாய்  ஒட்பாடியின் உருவம் போன்ற பொம்மையை பராமரித்து வருவதையும் காண்கிறார்.

வீடு திரும்பிய டைலன் இசையை அனுபவித்தவாறு அந்த வழக்கைப் பற்றி சிந்திக்கிறார். விசாரணை ஒரு முடிவுக்கு வந்து விட்டதாக தோன்றினாலும்  அந்த வழக்கில் ஏதோ அமானுஷ்யத்தை உணர்கிறார்.

ஆனால் பூட்டப்பட்ட அறைகளுக்குள் திடும் தோற்றம் தரும் புதிர் மனிதனான லாரண்ஸ் வரேடோ சொல்லும் புதிய விஷயங்கள் வழக்கின் போக்கை மாற்றுகிறது.

தான் மாலாவை கொலை செய்யவில்லை என்றும்,  அவளது அழகில் மயங்கி,  அவள் சுடப்பட்டு விட்டதான புகைப்படம் ஒன்றை போலியாக உருவாக்கியதாகவும் கூறும் லாரண்ஸ் மாலாவை தேடிக் கண்டு பிடிக்கும்படி டைலனை கேட்டுக் கொள்கிறான்.

மாலாவைப் பற்றி விபரம் தேடி  மீண்டும் கிளாரன்ஸ் ஒட்பாடியின் வீட்டுக்குள் 'சந்தடியின்றி' நுழையும் டைலன், மாலா ஒட்பாடிக்கு எழுதிய கடிதம் ஒன்றின் மூலம் அவளுடைய முகவரியை தெரிந்து கொள்கிறார்.

அப்போது ஒட்பாடியின் தாய் டைலனை தாக்க முற்பட,  ஒட்பாடியின் பொம்மை உருவத்திலிருந்து வெளிப்படும் குரல் அவளை தடுத்து  டைலன் மாலாவைதேடி வந்திருப்பதாகவும் அவள்தான் தன்னை சிறிதளவாவது நேசித்த ஒரே பெண் என்றும் கூறி டைலனை காப்பாற்றுகிறது.





அங்கிருந்து வெளியேறி மாலாவின் முகவரிக்குச் செல்லும் டைலன் மாலாவை சந்திக்கிறார்.அவளது முழுப்பெயர் Mala behemoth (பிசாசின் பெயர்களில் ஒன்று) என தெரிந்து கொள்கிறார்.

மாலா, தான் 1782ல் நரகத்திலிருந்து  வரவழைக்கப்பட்ட ஒரு பிசாசு என்றும் பூமியில் ஒரு நிமிடமே இருந்ததாகவும் ஆனால் நரகத்தின் கால அளவின்படி நரகத்தின் ஒரு நிமிடம் என்பது பூமியின் இருநூறு ஆண்டுகளுக்கு சமம் என்றும் கூறுகிறாள்.

மேலும் பூமியில் இருந்த இருநூறு ஆண்டுகளில் போரடிக்காமல் இருக்க கிளாரன்ஸ் மற்றும் லாரண்ஸ் இருவரின் மரணத்துக்குப் பிறகும் அவர்களுடைய உடல்களை பாதுகாத்ததாக சொல்கிறாள்.

நரகத்துக்குத் திரும்பப் போவதாக கூறும் மாலா டைலன்அங்கிருந்து  வெளியேறும்போது ஆயிரம் பவுண்டுகள் அவனது பாக்கெட்டில் இருக்கும் என்கிறாள். 

லாரண்ஸ் அவளுடன் நரகத்துக்குச் செல்ல விரும்புகிறான். அவனுடன் மாலா பெகிமோத் பூமியிலிருந்து மறைந்து போகிறாள்.  டைலனின் கோட் பாக்கெட்டில் ஆயிரம் பவுண்டுகள் காணப்படுகிறது. அவற்றை தெருவில் பறக்க விட்டுச் செல்கிறார் டைலன்டாக்.




உங்களுக்குத் தெரியும், மூடிய கதவுகளுக்குள் செல்ல எப்பொழுதும் ஒரு வழி இருக்கிறது...  நல்லவனாக இருங்கள் டைலன்.  நீங்கள் நரகத்துக்கு வந்தால் என்னையும் மாலாவையும் சந்தியுங்கள்.

****




இங்கே கிளிக்:



(கதையின் இறுதிப்பகுதி இணை பிரபஞ்சம், அவற்றிடையே கால வித்தியாசம், சொர்க்கம்,  நரகம் என புரிந்து கொள்ள கடினமாக அமைந்துள்ளது. எனது புரிதலில் ஏதும் தவறும் இருக்க வாய்ப்புள்ளது.)


Saturday, December 3, 2022

மரணமில்லா மந்திரம்!

 










 





அல்டெபரானுக்கு நாங்கள் வந்து ஒரு வருடத்திற்குப் பிறகு இது அனைத்தும் தொடங்கியது. டிரிஸும்  நானும் கடல் உயிரியல் நிபுணர் குழுவில் அங்கம் வகித்தோம்...

நாங்கள் எட்டு பேர் கொண்ட குழுவில் இருந்தோம், மாரனெல்லே தீவுகளைச் சுற்றி, ஒரு அட்டவணையில் இருந்து விலங்கு இனங்களை வகைப்படுத்த வேலை செய்தோம்...


ஒரு நாள் காலை, ஒரு பெரிய பகுதியில் அனைத்து மீன்களும் காணாமல் போனதைக் கவனித்தோம். பின்னர், ரேடார் ஏதோ ஒரு பிரம்மாண்டமான ஒன்று கடலுக்குள் இருப்பதைக் காட்டியது, அது தண்ணீருக்கு அடியில் எங்களை நெருங்கிக் கொண்டிருந்தது!
சிறிது நேரத்தில் அந்த விஷயம்  வெளிப்பட்டது. மெதுவாக, அமைதியாக..."

இது ஒரு வகையான சிக்கலான வடிவிலான மகத்தான கட்டமைப்பாகும், இது குருத்தெலும்பு போன்ற ஒரு சிறிய மீள் தன்மையைக் கொண்ட ஒரு வெண்மையான பொருளால் ஆனது..."



... மிகக் குறைந்த நேரத்தில், எங்கள் படகு இந்த வினோதமான விஷயத்தால் முற்றிலும் சூழப்பட்டது! அது உயிருடன் இருந்தது மற்றும் எங்கள் இருப்பை உணர்ந்தது: மிக மெதுவாக நகர்ந்தது, அது எங்களைத் தொடாமல்  சூழ்ந்து கொண்டது.


... நீண்ட நேரம் அந்த விஷயம் அங்கேயே இருந்தது, நகரவில்லை, எதுவும் நடக்கவில்லை!... பின்னர்...


பின்னர் ஆச்சரியமான ஒன்று நடந்தது: ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு சிறிய வளர்ச்சி எங்கள் திசையில் நீண்டது...


அது எங்கள் உயரத்திற்கு வந்தபோது, ​​அதன் முடிவில் எட்டு சிறிய,  ஒளிஊடுருவக்கூடிய குளிகைகள் இருப்பதை நாங்கள் கவனித்தோம்... எட்டு: கப்பலில் உள்ளவர்களின் சரியான எண்ணிக்கை...


அதனால், நாங்கள் நினைத்துப் பார்க்க முடியாததைச் செய்துவிட்டோம்!

...நாங்கள் அனைவரும் அவற்றில் ஆளுக்கு ஒன்றை எடுத்து... அதை விழுங்கினோம்!



விழுங்கி விட்டீர்களா?!

ஆனால் ஏன்?! அது மிகவும் ஆபத்தானது, இல்லையா?!

நிச்சயமாக! இது முற்றிலும் பைத்தியக்காரத்தனமாக இருந்தது! ஆனால் நாங்கள் அதை செய்தோம்! விவரிக்க முடியாதபடி. ஹிப்னாடிஸ் செய்யப்பட்டதைப் போல!...


தொந்தரவு, இல்லையா?

நீங்கள் அதை மறுபடியும் சொல்லுங்கள்!

 நீங்கள் எதுவும் வித்தியாசமாக உணர்ந்தீர்களா?

இல்லை, நாங்கள் உணரவில்லை...

அந்த  Mantri ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விசித்திர வடிவங்களில் வெளிப்படுகிறது. குளிகைகளை விழுங்கிய எட்டு பேரில் டிரிஸையும் அலெக்ஸாவையும் தவிர மற்றவர்கள் அரசாங்கத்தால் கொல்லப்பட்டு விட்டனர். இன்னொரு குழுவை உருவாக்கும் முயற்சியில் அலெக்ஸாவும் டிரிஸும் உள்ளனர். 

இதற்கிடையே பூமியிலிருந்து இன்னொரு விண்கலம் அல்டெபரானை நோக்கி தன் பயணத்தை துவக்கி இருந்தது.





Friday, December 2, 2022

7,மரணம் உறைந்த மண்டலம்!

 


 சதுப்பு நிலத்தைப் போல சேறும் சகதியும் நிறைந்த இன்வெர்ரியில் வாழ்க்கை அமைதியாக பாய்கிறது.   
அது எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்கிறதா?  அதே தினசரி செயல்கள் முடிவற்று மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறதா?

மேபல் கார்பென்டர் ஒரு மௌனமான வேதனையை அனுபவித்து நாட்களை கடக்கிறாள்.  ஆனால் அவளுடைய சோகம்  தனிப்பட்டதல்ல, ஏனென்றால் கிராமத்து மூடுபனிகளில் ஏதோ வித்தியாசமான விஷயம் இருக்கிறது.  

டாக்டர் ஹிக்ஸ் என்ன ரகசியத்தை மறைத்து வைத்திருக்கிறார்?  இன்வெர்ரியின் நித்திய அமைதியில் ஏன் யாரும் பிறக்கவில்லை, ஏன் யாரும் இறப்பதில்லை?

 (இத்தாலிய புத்தகத்தின் அறிமுக உரை.) 


இன்வெர்ரி கிராமத்தில் டைலன்டாக்கின் பரம வைரியான மருத்துவர் ஷபராஸின்ஆய்வுக்கூடம் டைலன்டாக்கின் தந்தையால் எரிக்கப்படுகிறது.

பின்னொரு நாளில் அந்த ஆய்வுகூடத்தை வாங்கும் மருத்துவர் ஹிக்ஸ் மருத்துவர் ஷபராஸின் மரணத்தை வெல்லும் ஆராய்ச்சியைத் தொடர்கிறார்.

அவரது ஆய்வுகளின் பயனாக  "எழுத்தாளர் எட்கர் ஆலன் போ" வின் சிறுகதை ஒன்றில் வருவது போன்று  இன்வெர்ரி கிராமத்தில் மரணம் நெருங்கும் ஒவ்வொருவரும் உயிர்ப்புக்கும் மரணத்துக்கும் இடையே ஒரே நிகழ்வே மீண்டும் மீண்டும் நிகழும் உறைந்த காலத்தில் வாழ்வை தொடர்கின்றனர்.

குறிப்பிட்ட காலத்திற்குப் பின் அவர்களின் உடலின் சதை உதிரும்போதும் ஏதேனும் ஆபத்தில் சிக்கி உருக்குலையும் போதும் மருத்துவர் ஹிக்ஸ் சிகிச்சையளித்து அவர்களை சரி செய்கிறார்.

இந்த விஷயங்கள் தெரியாத ஆனால் ஏற்கெனவே ஏரி விபத்தில் மாண்டு போன மேபெல்  எனும் இளநங்கை டைலன் டாக்கை உதவிக்கு அழைக்கிறாள்.

டைடைலன்டாக் அந்தி மண்டலத்தின் மர்மங்களை அறிந்து மேபெல்லுக்கு தெளிவேற்படுத்தி விட்டுஅந்த கிராமத்தினரின் இரகசியத்தை இரகசியமாகவே மனதில் புதைத்தவராக கனத்த இதயத்துடன்  திரும்புகிறார்.






 இங்கே கிளிக்   செய்யவும் Charon



இங்கே கிளிக்:  Mesmer







இங்கே கிளிக் :  எம் வால்டெமர் வழக்கில் உள்ள உண்மைகள்







******