முதுவேனிற்காலத்தில் கானக மரங்கள் சிவப்பும் தங்கநிறமுமாக நிகழ்த்திக் கொண்டிருந்த மாயாஜாலத்தினூடாக பயணித்துக் கொண்டிருந்த யகரியும் இடிக்குட்டியும். ஆற்றின் குறுக்கே நீண்டிருந்த ஒரு மரக்கிளையில் கரடிக்குட்டி ஒன்று ஆபத்தான நிலையில் ஊசலாடிக் கொண்டிருந்ததை காண்கின்றனர்.
பீதியில் உறைந்து போயிருந்த அந்தக்குட்டி கரைக்கு திரும்ப முடியாதவாறு அதிர்ச்சியில் செயலிழந்து போயிருந்தது.
அதைக் காப்பாற்ற யகரி முயலும்போது, மரக்கிளை முறிந்து ஆற்றில் விழுந்த யகரியும் கரடிக்குட்டியும் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
வெள்ளத்தின் வேகத்தில் கரைக்கு ஒதுக்கப்பட்ட கரடிக்குட்டி காட்டுக்குள் ஓடி மறைகிறது. யகரியோ தலையில் அடிபட்டு மயக்கமடைகிறான்.
யகரியை காப்பாற்ற முயலும் இடிக்குட்டியின் முயற்சி தோல்வியடைகிறது.
குட்டிக்கரடியான தேன்கூட்டின் தாய்க்கரடி ஆற்றில் அடித்துச்செல்லப்படும் யகரியை காப்பாற்றுகிறது.
தலையில் அடிபட்டதால் நினைவாற்றலை இழந்துள்ள யகரியை தன்னுடைய குட்டிக்கரடி 'தேன்கூடு' என நினைக்கும் தாய்க்கரடி அவனுக்கு கரடிகளுக்கான வாழ்க்கை பயிற்சிகளை அளிக்கிறது.
ஒரு கரடிக்குட்டியைப்போல நடந்து கொள்ள சிரமப்படும் யகரிக்கு மீண்டும் தலையில் அடிபட்டு நினைவாற்றல் திரும்புகிறது.
உண்மை நிலையை புரிந்து கொள்ளும் யகரி, தன்னை தேடிவரும் இடிக்குட்டி, எருமைவிதை மற்றும் வானவில்லின் உதவியுடன் குட்டிக்கரடியை தேடிக்கண்டு பிடித்து தாய்க்கரடியுடன் சேர்த்து வைத்து விட்டு தன் குடியிருப்புக்குத் திரும்புகிறான்.
*****
No comments:
Post a Comment