காவல் அதிகாரிகளான மூன்று சகோதரர்களால் ஆயுதங்கள் நுழைய தடை விதிக்கப்பட்ட தவளை நகரத்துக்குச் செல்லும் லக்கிலூக் நகர மக்களின் வேண்டுகோளின்படி சமீபத்தில் நிகழ்ந்த கோச்சுவண்டி கொள்ளை ஒன்றின் தடங்களை தேடி கண்டறியும் பணியில் ஈடுபடுகிறார்.
அத்தடங்கள் நகர காவல் அதிகாரியின் அதிகார வரம்பை கடந்து செல்கின்றன.
அந்நகரில் புகையிலை கிடைப்பது அரிதாக உள்ளது. புகைப்பழக்கம் கொண்ட லக்கிலூக்குக்கு கிடைக்கும் சிறிதளவு புகையிலைகளையும் சந்தர்ப்பங்கள் பாழ் செய்கின்றன.
மதுச்சாலையில் லக்கிக்கு அறிமுகமாகும் மருத்துவர் "புதன்கிழமை" அளவு மீறிய மதுவும் புகையும் தன்னை சீரழித்ததைக் கூறி லக்கியை புகைப்பழக்கதை கைவிடச் சொல்கிறார்.
லக்கியின் விசாரணைகள் சட்டத்தின் காவலர்களையே குற்றவாளிகளாக்கி "நீயா நானா" சவாலில் நிறுத்துகிறது.
தன்னுடைய துப்பாக்கியை திருட்டுக்கொடுத்து மாற்றுத் துப்பாக்கியோடும், புகை பிடிக்க வழியில்லாததால் ஏற்பட்ட கை நடுக்கத்தோடும் சவாலை எதிர்கொள்ள தயாராகிறார் லக்கிலூக்.
ஆனால் மருத்துவர் புதன்கிழமை கொள்ளும் ஒரு மாற்று சிந்தனை லக்கியை மரணத்திலிருந்து மீட்கிறது.
இருமுறை...
முதுகில் சுட்டுக்கொல்லப்படுவதிலிருந்தும்...
புகைப்பழக்கத்தின் மெதுவான மரணத்திலிருந்தும்...
No comments:
Post a Comment