உயிரோடு பிடித்துக் கொடுத்தால் ஐயாயிரம் டாலர்கள் வெகுமதி என்ற அறிவிப்புடன் லக்கிலூக்கின் சுவரொட்டிகள் பரவுகின்றன.
சுதந்திர நகருக்கு புதுவாழ்க்கை தேடிச் செல்லும் ஆஞ்சி, போனி, செர்ரி என்ற மூன்று பெண்களுக்கு பயணத் துணைவனாக லக்கிலூக் உதவுகிறார். அந்நகரமோ பாழடைந்த நிலையில் சமூக விரோதிகளின் ஆக்ரமிப்பில் உள்ளது.
வெகுமதி வேட்டையன்
செவ்விந்தியர்
சமூகவிரோதிகள்
இராணுவம் என பலரும் துரத்த ஏராளமான நிகழ்வுகளுக்குப் பின் அந்த சுவரொட்டி மோசடியான ஏற்பாடு என தெரியவந்து லக்கிலூக் விடுவிக்கப்படுகிறார்.
அப்போது சுதந்திர நகரின் வழியாக விரைவில் இரயில்பாதை வருவதும் அங்கே ஒரு இரயில் நிலையம் அமைய இருப்பதும் தெரியவருகிறது. இனி அந்நகரமும் அப்பெண்களின் வாழ்வும் புத்துயிர் பெறும்.
நான் ஒரு தன்னந்தனி குதிரைவீரன்...
தனிமை எனக்குத் தொல்லையில்லை....
பெண்கள் மீது வெறுப்பில்லை...
விடைபெற்றுக்கொள்வேன்,
பிணைத்துக்கொள்ள விரும்பவில்லை...
துணையாக ஒரு குதிரையுண்டு,
எங்கள் பயணம் முடிவதில்லை....
வாயை மூடு!
உன் நிழலை விட வேகமாக நீ சுடும்போது அது சண்டையில்லை, மரணதண்டனை.
நிறுத்தி விட்ட புகைப்பழக்கத்தை தூண்டுகிறதே!
No comments:
Post a Comment