Sunday, November 13, 2022

பிலிப்பியின் மேகம்!

 


அந்த வசந்த காலத்தில், பிரளயம் போன்ற மழை பழங்குடியினரின் புல்வெளியை நீண்ட நாட்களாக தாக்கியது, பழங்குடியினர் இதுபோன்ற வெள்ளங்களை அதற்கு முன் அனுபவித்ததில்லை.  இறுதியாக மழை ஓய்ந்த போது அவர்களுக்கு கிடைத்த நிம்மதி அருமையாக இருந்தது.

அன்றைய இரவில் யகரி தன் முந்தைய அனுபவங்களைப் போன்று எதிர்காலம் முன்னுரைக்கும் கனவை காண்கிறான்.

மழை வெள்ளத்தின் நடுவே மேகம் ஒன்று அவனை கூடாரத்துடன் வானுக்கு உயர்த்துகிறது.

கூடாரத்திலிருந்து குதிக்கும் யகரி கனவு கலைந்து விழித்துக் கொள்கிறான்.

ஆழ் கடலிலிருந்து உலகம் சுற்ற புறப்பட்ட டால்பின் ஒன்று மழை வெள்ளத்தின் காரணமாக யகரியின் குடியிருப்பு அருகே உள்ள நீர்நிலைக்கு வந்து சேர்கிறது.

நீண்ட நாட்கள் பெய்த மழை ஓய்ந்து வெள்ளம் வடிய துவங்கியபோது தன் கானக தோழர்களை நலம் விசாரித்தவாறு வரும் யகரியும் இடிக்குட்டியும் டால்பினுடன் நட்பாகி விளையாடுகின்றர். 

டால்பின் மூச்சு விடும்போது அதன் தலையிலிருந்து மேகம் போல நீர் பீச்சியடிக்கிறது.

யகரியின் கனவைப்போலவே டால்பின் யகரியை வானுக்கு உயர்த்தி விளையாட, அதன் தலை உச்சியிலிருந்து நீரில் குதித்து விளையாடும் யகரி தான் கண்ட கனவு பலித்து விட்டதை உணர்கிறான்.

அந்த டால்பினை அது உற்சாகத்தில் இடும் கூச்சலிலிருந்து "பிலிப்பி" என அழைக்கிறான் யகரி.

அப்போது அங்கு வரும் தேரை ஒன்று தன் இருப்பிடத்தில் பெரிய தேரை  ஆக்ரமித்து இருப்பதாக கண்டனம் தெரிவிக்கிறது.

யகரி ஏரி   எல்லோருக்கும் பொதுவானது என வாதிடுகிறான்.

ஆனால் தேரை, அந்த இடம் ஏரி அல்ல குளம் என்றும்  மழை வெள்ளத்தால் ஏறிய குளத்தின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் பிலிப்பி தொடர்ந்து அங்கே உயிர் வாழ முடியாது என்பதையும் சுட்டிக்காட்டி எச்சரிக்கிறது. 

தன் நண்பர்களான வால்ரஸையும் நார்வாலையும் தன் தாய்க்கடலையும் மீண்டும் காண முடியாது என்ற பீதியில் கதறத் துவங்கியது பிலிப்பி.



சூல்நிலையை ஆராய்ந்த தேரை ஒரு அலை மூலம் பிலிப்பியை மீண்டும் ஆற்றில் சேர்க்கலாம் என யோசனை தெரிவிக்கிறது. பீவெர்களின் உதவியை பெற விரைந்தான் யகரி. 

பீவர்களை மீண்டும் ஒருமுறை அணிதிரட்டுவது எளிதானது அல்ல, ஆனால் யாகாரியின் அவசர அழைப்புகளை யார் எதிர்ப்பார்கள்?




பீவெர்கள் விரைவாக வந்து தேரையின் யோசனைப்படி அருகிலிருந்த ஆற்றில்  இரு இடங்களில் நீரை தடுத்து அணை கட்ட துவங்கினர்.

மூன்று நாட்கள் நடந்த கடினமான பணிகளுக்குப் பின் ஆற்றின் குறுக்கே இரு அணைகளும் கட்டி முடிக்கப்பட்டன.

முதல் அணை எளிதில் உடையக்கூடியதாகவும், இரண்டாவது அணை பெருவெள்ளத்தை தாங்கும் உறுதி மிக்கதாகவும் கட்டப்பட்டது

குளத்தில் நீர்மட்டம் குறைந்து கொண்டே வந்தது. ஆயிரம் வாயன் முதல் அணை உடையும் நேரம் நெருங்கி விட்டதாக எச்சரித்தான். 

முதல் அணையில் தேங்கிய நீரின் அழுத்தம் காரணமாக முதல் அணையை உடைத்துக்கொண்டு பாய்ந்த வெள்ளம், உறுதி மிக்க இரண்டாவது அணையால் தடுக்கப்பட்டு,  திசை திரும்பி பிலிப்பி இருந்த குளத்தினுள் பெரும் அலையாக விசையுடன் பாய்ந்து,  ஆற்றுப் பாதையின் வளைவை தாண்டி மீண்டும் ஆற்றை அடைந்தது. 

அதன் வேகத்தில் பிலிப்பியும் ஆற்றை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டது. ஆனால் பாதி தூரத்திலேயே ஆற்று வெள்ளத்தின் வேகம் வடிந்துவிட, புல் தரையில் சிக்கிக்கொண்ட பிலிப்பி மூச்சு விட தவித்தது.

துடிப்புடன் விரைவாக செயல்பட்ட யகரியும் பீவெர்களும் பிலிப்பியை உருட்டி ஆற்றுக்குள் தள்ளி விட்டனர்.

 மரண ஆபத்திலிருந்து மீண்ட  பிலிப்பி யகரிக்கும் அவனது நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்து விட்டு ஆற்றில் தன் தாய்க்கடலை நோக்கி உற்சாகமாக பாய்ந்து சென்றது!










இங்கே கிளிக்! டால்பின்

Narwhal : ஒரு சிறிய ஆர்க்டிக் திமிங்கலம், அதன் ஆணின் பற்களில் ஒன்றிலிருந்து நீண்ட முன்னோக்கி சுழல் முறுக்கப்பட்ட தந்தம் உள்ளது.

இங்கே கிளிக்! வால்ரஸ்






No comments:

Post a Comment