Friday, November 18, 2022

3,பெளர்ணமி இரவுகள்.

 


1986ல் ஜெர்மனியின் பிளாக் ஃபாரஸ்ட் பகுதியில்
தங்கிப்படிக்கும் வசதியுடைய பள்ளி ஒன்றில் பயிலும் மாணவி  மேரி ஆன் புதிரான முறையில் காணாமல் போகிறாள்.

அவளுடைய தந்தையால் பணியமர்த்தப்படும் டைலன்டாக்கும் கிரளெச்சோவும் பெளர்ணமி இரவுகளில் ஓநாய்களை மனிதர்களாக மாற்றி புதிய இனம் ஒன்றை உருவாக்க இளம்பெண்களை வேட்டையாடும் இரு சூனியக்கிழவிகளை எதிர்கொள்ள நேரிடுகிறது.

டைலன்டாக் சூனியக்கிழவிகளை சமாளித்து மேரி ஆனை மீட்டு வருகிறார்.













கிரளெச்சோ எதையாவது விபரீதமாக நினைப்பதும் / சொல்லுவதும் அவை உடனடியாக பலிப்பதும் நல்ல நகைச்சுவை! 😂










கிரளெச்சோ அடிக்கும் ஜோக்கின் இறுதிப்பகுதி செம்ம!😊


ஒரு இத்தாலியன், ஒரு பிரெஞ்சுக்காரன், ஒரு ஆங்கிலேயன், மற்றும் ஒரு ஜெர்மானியன் ஆகியோர் கில்லட்டின் மரண தண்டனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்...

முதலில் கில்லெட்டினுக்கு செல்வது இத்தாலியன். தனது கடைசி ஆசையாக, பிளேடு விழுவதைக் காண தன்னை மல்லாக்க படுக்க வைத்து தண்டனையை நிறைவேற்றும்படி கேட்கிறான்.

 இத்தாலியர்கள் கொஞ்சம் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்...

இத்தாலியனின் விருப்பப்படி  அவனை கில்லெட்டினின் பிளேடுகளுக்கு இடையில் மல்லாக்க படுக்க வைத்தார்கள். 

மரணதண்டனை நிறைவேற்றுபவர் கில்லெட்டின் பிளேடை விடுவித்தார்.
ஆனால் பிளேடு கழுத்தில் இருந்து ஒரு அங்குலம் மேலே  நின்று விட்டது!

உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமல் இருக்கலாம், மூன்று முறை கில்லெட்டினில் வெட்டுவது தோல்வியுற்றால், மரண தண்டனை விதிக்கப்பட்டவர் மன்னிக்கப்படுவார்... 

 மரணதண்டனை நிறைவேற்றுபவர்  கில்லெட்டினை பரிசோதித்து சிறிது எண்ணை விட்டார்.

ஆனால் இரண்டாவது முறையும்,
மூன்றாவது முறையும் பிளேடு நின்று போனதால் இத்தாலியன் விடுதலை செய்யப்பட்டான். 

பின்னர் பிரஞ்சுக்காரனின் முறை வந்தது,  அவனும் இத்தாலியனைப் போலவே அதிர்ஷ்டசாலியாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் தன்னையும் மல்லாக்கப் போட்டு தண்டனையை நிறைவேற்றும்படி கேட்கிறான்.


ஆனால் கில்லெட்டினில் ஏதோ கோளாறு காரணமாக கழுத்துக்கு ஒரு அங்குலம் மேலேயே பிளேடு மீண்டும் மீண்டும் நின்று விடுகிறது.

இதன் காரணமாக
பிரெஞ்சுக்காரனும், அடுத்து வந்த ஆங்கிலேயனும் மரண தண்டனையிலிருந்து தப்பிக்கின்றனர்.

 மரணதண்டனை நிறைவேற்றுபவர் கிட்டத்தட்ட அழும் நிலைக்கு வந்து விட்டார். 

ஜெர்மானியனின் முறை வந்தபோது கில்லெட்டினை முழுமையாகப் பிரித்து சரி செய்ய முயன்றனர். ஆனால் யாராலும் கில்லெட்டினில் என்ன தவறு உள்ளது என்று கண்டு பிடிக்க முடியவில்லை. 

இருந்தாலும் ஜெர்மானியனையும் கில்லெட்டினில் அவனுடைய விருப்பப்படி மல்லாக்க படுக்க வைத்து மரண தண்டனையை நிறைவேற்ற முயன்றனர்.

முதல் இருமுறை முன்பு போலவே கில்லெட்டின் பிளேடு கழுத்துக்கு ஒரு அங்குலம் மேலே நின்று விட்டது.

 மூன்றாம் முறை தண்டனையை நிறைவேற்றுபவர் கில்லெட்டின் பிளேடை விடுவிக்கத் தயாரான போது ஜெர்மானியன் கூச்சலிட்டான், 

"பொறுங்கள் கில்லெட்டினில் என்ன தவறு உள்ளது என்று நான் கண்டு பிடித்து விட்டேன்."  .




(அப்புறம் என்னாச்சுன்னா, கில்லெட்டினை ஜெர்மானியன் சொன்னபடி சரி பண்ணி பிறகு மூனாவது தடவையில ஜெர்மானியன் தலையை வெட்டிட்டானுக.😂)





இங்கே கிளிக்:



******


No comments:

Post a Comment