எப்படிப்பட்ட மனிதனும் பெண் மீது ஈர்க்கப்படுகிறான். அவன் எத்தனோ, ஏமாற்றுக்காரனோ, கோழையோ, ஈனப்பிறவியோ ஆசை பேதம் கொள்வதில்லை.
அடிமை வியாபாரி பெராங்கோ மரியா மீது கொண்ட அபிமானம் அவளின் ஏவலாளாய் அவனை வீழ்த்திற்று. அவனின் செல்வங்களை எல்லாம் அவளது காலடியில் கொட்டியது. அவன் எண்ணியிருந்தால் சவுக்கடிகள் அவனது தேவைகளை நிறைவேற்றி இருக்கும். ஆனால் அவனின் தேவையோ அவளது நெஞ்சில் ஓர் இடம்.
பெராங்கோ ஒன்றை எண்ணிப்பார்க்கத் தவறி விட்டான். அவன் தன் மனதை வளர்த்த போதும் மரியாவினுள்ளும் ஒரு இதயம் இருப்பதையும் அதன் துடிப்பு என்னவென்றும் அவன் அக்கறை கொள்ளவில்லை.
அன்புக்கு விலையில்லை, அது கேட்பவருக்கெல்லாம் கிடைத்து விடுவதும் இல்லை.
மரியாவின் நேசமோ ராஃபியிடம், இப்போதும் காதலின் பேதமற்ற கணைகள் வேகம் கொள்கின்றன. விதியோ இணைபறவைகளை படுத்தும்பாடு கொஞ்சமல்ல. . அதன் விளையாடல் ஓய்வதெப்போது?
கண்கள் கதை பேசும்!
பெராங்கோ எத்தனை கேவலமான பிறவி என்பதை இத்தொடர் முழுவதும் அவ்னுடைய செயல்களிலிருந்து நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். ஆனால் அவனது முடிவோ ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று.இழிந்த பிறவிகளுக்குதான் அள்ளிக்கொட்டுகிறது .
தான் கடித்த உடல் சுடுகாடு வருகிறதா? என காத்திருக்குமாம் கொம்பேறி மூர்க்கன்.
அபாரமான வர்ணனை !
ஆபத்தென்றால் விஷப்பூச்சிகள் அதீத வேகத்தில் தப்பியோடும்.
வாழ்க்கை ஒரு வட்டம் சார்!
சாத்தான் வேதம் ஓதுகிறது.
ஒரு அதிரடி ஆக்ஷன்
சாயங்காலம்..... சாயுங்காலம்.....
படத்தில் இருக்கும் எழுத்து புரியவில்லை
ReplyDeleteமொபைலில் வாசித்தீர்களா? படங்களை க்ளிக் செய்தால் புதிய பக்கத்தில் தெளிவான படங்கள் கிடைக்கும்.
Delete