பராகுடா 2. தழும்புகள்
ஒரு சிறந்த படைப்பை வாசிப்பது என்பது தரம் மிகுந்த ஒயினை துளித்துளியாய் ரசித்து ருசித்து பருகுவதைப் போன்றது.
ஸ்பெயினின் ஒரு அழகிய ஆலயத்தின் தோற்றம்.
கதை சொல்லலின் விரைவில் நகர்ந்த பக்கங்களை மீண்டும் மீண்டும் சுவைக்கும்போதுதான் புரிகிறது, எத்தனை மதுக்கோப்பைகளை கவனமின்றி கடந்து சென்றுள்ளேன் என்று. இந்த விழிப்பை எனக்கு உணர்த்திய என் உயிர் நண்பனுக்கு நன்றி சொல்கிறேன்.
கதையை வாசிக்கையில் எமிலியோவின் கடந்த காலம் பற்றிய கேள்வி எழுந்தது. தேடல் மற்றும் விவாதம் மூலமாக எமிலியோ லேடி ஸ்கூபோவின் பணியாள் என்பதையும் ,அவனுடய கடந்த காலம் கதையில் விவரிக்கப்படவில்லை என்பதையும் தெரிந்து கொண்டேன். பெண்ணுடைக்கு மாறிய பின் புதிய அவதாரம் அவன்.
காலம் தன் ஓட்டத்தில் நிகழ்த்தும் மாற்றங்கள் விசித்திரமானவை. அது எதிர் மனங்களை இணைக்கிறது, இணைத்தவற்றில் துரோகம் நிகழ்த்துகிறது. பாடுபட்டு செல்வம் தேடியவன் அதிலே தன்னை இழந்தது போல், தான் அடிமை செய்த அழகிடமே அடிமையாகிறான் வியாபாரி பெராங்கோ. அவன் யாசிப்பதோ அவளின் காதலை. அவளோ தன் துயரங்களின் காரணத்திடமே ஆறுதலை தேடுகிறாள்.
மிஸ்டர் பிளினின் கடந்த காலம் காட்சியாக விரிக்கப்படுகிறது. தழும்புகளை கீறி பெருகும் குருதியின் தோற்றம் போன்ற காலம் அது.
உயர்குடி நங்கையரின் மீது மோர்கம் போன்ற வல்லூறுகளின் மோகப்பார்வை படும்போது குடும்பங்களில் புயல் வீச துவங்குகிறது.
மிஸ்டர் ப்ளினும் மோர்கமும் மோதும் இறுதிக்காட்சிகளில் மரியாவின் வீட்டில் நடக்கும் இசை விருந்தின் பாடல் வரிகளும், உரையாடல்களும் மோர்கம் மற்றும் பிளினின் மோதலில் பொருந்தும் விதமாக பின்னிப் பினைந்து அமைக்கப்பட்டிருப்பதும், அவற்றை திறமையுடன் தமிழிலும் தொனிக்க வைத்திருப்பதும் பிரமிக்க வைக்கிறது. பாராட்டுக்கள்.
சில எழுத்துப் பிழைகளையும். ஸ்கூபோ, மோர்கம் போன்ற பெயர்களை வெவ்வேறாக உச்சரிப்பதையும் தவிர்த்திருக்கலாம்.
நான் ரசித்த இடங்கள்.
( தமிழ் ஸ்கான் 150 mb சைஸில் இருப்பதாலோ ரீடர் சரியில்லை என்பதாலோ லேப்டாப் ஓபன் ஆகாமல் க்ராஷ் ஆகிறது. எனவே ஆங்கில ஸ்கானையே இணைத்துள்ளேன். )
அவன் பார்வை எம்மேல் நிலைத்திருப்பதை நான் உணர விரும்புகிறேன்...
துடிப்பதற்கு இங்கு எதுவுமே இல்லை.
வேறெந்த அணியைப் போலுமல்லாது...
என் அவலட்சனத்தை நான் காட்சிப் பொருளாக்குகிறேன், நீயோ அதை மறைத்து வைத்திருக்கிறாய்.
அவனைப் போன்ற ஒரு இரைகொல்லிக்கு....
துப்பாக்கி உன்னை ஒரு கோழையாக்கும்.
வாள் உன் கவுரவத்தை காப்பாற்றும்.
அன்றுவரை அவன் ஒரு மன்மதனாக இருந்தான்...
...என் வாள்அவனை ஒரு அரக்கனாக வரைந்தது.
இங்கிருக்கும் அனைவரும் துருப்பிடித்துதான் இருக்கிறோம்.
ஒன்று துருப்பிடிக்கும் இல்லை அழுகும்.
இரண்டிற்கும் இடையில் நல்ல படைப்புகள் குறித்து சிந்தனையிலாழ்வதற்கே நமக்கு அவகாசம் இருக்கிறது....
அழாதே என் வாலிபா.
...வாழ்க்கை சில சமயங்களில் அழகானதே.
No comments:
Post a Comment