அநேகமாக தமிழில் ஸ்கான்லேஷன் செய்யப்பட்ட முதல் காமிக்ஸ் இதுதான் என்று நம்புகிறேன். அல்லது சிக்கன் வித் ப்ளம்ஸ், ஜானி ப்ரீக் என்று வேறு கதையாகவும் இருக்கலாம்.
கிரஃபிக் நாவல் என்றாலே டவுசரை நனைப்பவர்களுக்கு , இத்தொடர் ஒரு சிம்ம சொப்பனம்,,,
சில ஆண்டுகள் முன்பே கொம்புக்குதிரையின் அனைத்துப் பாகங்களையும் டவுன்லோட் செய்து வைத்திருந்த போதும் , அதை வாசிக்க ஆரம்பித்த போதெல்லாம், வேறு கதைகள் வாசிக்கக் கிடைக்கும் போது , கொம்புக்குதிரையை அந்தரத்தில் விட்டு விடுவது எம்முடைய வழக்கமாக இருந்தது.
ஆக்ஷன், அதிரடி என்ற விறுவிறுப்பான கதைகளுக்கு பழகிப் போன என்னால் கொம்புக்குதிரையின் ஆழ்ந்த நுட்பமான படைப்புக்கு ஈடு கொடுக்க முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்ள எனக்கு தயக்கமேதும் இல்லை.
இப்போதும் மேலோட்டமான புரிதல்தான் உள்ளது. கதையின் நுனுக்கமான விபரங்கள் புரியவில்லைதான் என்ற போதும் , மீள் மீள் வாசிப்புகள் என்றேனும் ஒரு தெளிவான புரிதலை தரும் என்று நம்புகிறேன்.
இத்தனை கடினமான படைப்பை தமிழ் வாசகர்களுக்காக தன் நேரம், உழைப்பு, பொருள் என பிரதி பலன் எதிர்பாராது செலவழித்து மொழிபெயர்த்து அளித்த அன்பு நெஞ்சத்தை எவ்வளவு பாராட்டினாலும் என் நெஞ்சம் திருப்தி கொள்ளாது.
கடுமையான இந்த முயற்சியை எடுத்துச்சொல்ல சரியான உவமைகள் இல்லை. ஆனாலும்... எம்மால் முடிந்தது................
நன்றிகள் சார்!
No comments:
Post a Comment