சில சமயங்களில் சதியைப் புரிந்து கொள்ள விதியின் புத்தகத்தை பின்னோக்கிப் படிக்க வேண்டும். விளக்கம் இல்லாமல் மற்றும் குற்றவாளிகள் இல்லாமல் மரணங்களின் சங்கிலி, கண்ணாடியிலிருந்து வெளியே வரும் நரக அரக்கர்கள், மற்ற உலகங்களுக்கான கதவுகள். இது அனைத்தும் ரோவெனாவின் வீட்டில் ஒரு முகமூடி நடன விருந்தின் போது தொடங்கியது.
( இத்தாலிய நிறுவனத்தின் புத்தகம் பற்றிய குறிப்பு! )
1987 இலண்டன்.
கண்ணாடியில் உருவமாய், அருவமாய் மறைந்திருக்கும் 'மரணதேவன்' தன் சலிப்பான பணியை சுவாரஸ்யப்படுத்த ஒரு விளையாட்டை துவக்கினான்.
பேரழகி ரோவேனாவின் மனதை ஆக்ரமித்து, அவள் அளித்த நடன விருந்தில் கலந்து கொண்டவர்களில் இயல்பான மரணத்தின் வரிசையில் இருந்த சிலரை தேர்ந்தெடுத்த மரணதேவன், ஒரு பாடலின் மூலம் அவர்களுடைய மரணத்திற்கு முன்னறிவிப்புக் கொடுத்து, பின்னர் அமானுஷ்யமான முறைகளில் அவர்களுடைய மரணத்தை நிகழ்த்துகிறான். ஆனால் அவை அதிகாரப்பூர்வ விசாரணைகளில் இயற்கை மரணங்களாகவே காட்சியளிக்கின்றன.
பேரழகி ரோவேனாவின் விருப்பத்தின் படி இந்த மரணங்களை துப்பறியத் துவங்கும் டைலண்டாக், மரணதேவனை
நெருங்கிவிடுகிறார். மரணதேவன் அவரை பலிகொள்ள முயலும்போது ரோவேனா குறுக்கிட்டு தன் உயிரை பலி கொடுத்து டைலனைக் காப்பாற்கிறாள்.
டைலனை விரைவிலேயே சந்திப்பதாக கூறி விட்டு மரணதேவன் திரும்பிச் செல்கிறான்.
மரணத்தின் பாடல்...
மரணம்! மரணம்!
மரணம் வருகிறது!
சாகாமல் வாழக்கூடிய
வீரமும் வலிமையும்
கொண்டவர் யார்?
மரணத்திடமிருந்து
எந்த ஆன்மா
தப்பிக்க முடியும்?
கேவலமான மரணம்,
காம மரணம்!
மரணம்! மரணம்!
மரணம் வருகிறது!
மரணம், மரணம்,
இனிமையான மரணம்.
கசப்பான மரணம்.
தெளிந்த இரவில்
மரணம் முன்னேறுகிறது.
கல்லில் மரணம்,
பனியில் மரணம்,
எளிதாய் வரும் மரணம்.
கொடுக்கும் மரணம்,
எடுக்கும் மரணம்,
திருடும் மரணம்,
திரும்பும் மரணம்,
கடக்கும் மரணம்,
தங்கும் மரணம்.
வரும் மரணம்,
போகும் மரணம்.
மரணம் அதன்
வலியுடன் வருகிறது,
அனைத்தையும் அதன்
பிரகாசத்தால் சூழ்கிறது.
செங்கோலும் கிரீடமும்
இல்லாத ராணி மரணம்,
மரணம்! மரணம்!
மரணம்தானே!
மரணம்! மரணம்!
ஆவேசமான மரணம்,
தீய மரணம்,
இரக்கமுள்ள மரணம்,
நிச்சயமான மரணம்,
பிண மரணம்,
சாக்கடை எலியின்
முகவாய் கொண்ட மரணம்.
மரணம் வரும்,
உன் கண்களில்,
உன் அழகு,
மாயையின் மாயை...
மரணம் வந்து,
உனது முழு
சாம்ராஜ்யத்தையும்,
உன்னுடன் சேர்த்து
எடுத்துச் செல்லும்...
மரணம் வந்து
அந்த பிணைப்பை
மெல்லியதாகவும் வலுவாகவும்
மிகவும் அழகாகவும்
இழிவாகவும் துண்டித்துவிடும்.
மரணம் வரும்,
அது உங்களுக்கு
மனசாட்சியாக இருக்கும்,
அது உங்களுக்கு
இருப்பு முழுவதும்
துணையாக வரும்.
மரணம் வரும்,
ஒன்றுமில்லாத உன்னிடம்
கை நீட்டும்,
பிறர் நடுவில்...
மரணத்துடன்
நடனம் ஆடுவதற்கு
விதியின்படி
நீயே முதல் ஆளானாய்!
வினோதமான மரணம்,
சாதாரண மரணம்,
எல்லா தீமைகளையும்
ஆற்ற வரும் மரணம்.
வாழும் மரணம்,
இறக்கும் வாழ்க்கை,
மரணம்! மரணம்!
இதயத்தில் மரணம்!
மரணம் நடனமாடியது,
மரணம் ஊர்சுற்றுகிறது,
மரணம் அவர்களைத்
தேர்ந்தெடுத்தது,
மரணம் உனக்காகக்
காத்திருக்கிறது!
மரணம் வெற்றி,
மரணம் மகிமை!
மரணம்! மரணம்!
மரணம் உங்கள் மணமகள்!
நான் கண்ணாடியில் உருவம்,
நான் வாழ்க்கைக்கு
அப்பாற்பட்ட மர்மம்...
நான் கனவில்லா உறக்கம்,
நான் பறந்து செல்லும்
எண்ணங்கள்,
நான் தான் பெரிய ஆறுதல்.
நான்தான் மரணம்.
மரணம்! மரணம்!
மரணம் வருகிறது!
*
லூயிஸ் கரோலின் "Through looking glass" புத்தகம் "ஆலிஸ் இன் வொண்டர்லேண்டின்" தொடர்ச்சியாகும், ஆலிஸ் இதைப் போலவே கண்ணாடியின் ராஜ்யத்தில் நுழைகிறார்...
*******