சதுப்பு நிலத்தைப் போல சேறும் சகதியும் நிறைந்த இன்வெர்ரியில் வாழ்க்கை அமைதியாக பாய்கிறது.
அது எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்கிறதா? அதே தினசரி செயல்கள் முடிவற்று மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறதா?
மேபல் கார்பென்டர் ஒரு மௌனமான வேதனையை அனுபவித்து நாட்களை கடக்கிறாள். ஆனால் அவளுடைய சோகம் தனிப்பட்டதல்ல, ஏனென்றால் கிராமத்து மூடுபனிகளில் ஏதோ வித்தியாசமான விஷயம் இருக்கிறது.
டாக்டர் ஹிக்ஸ் என்ன ரகசியத்தை மறைத்து வைத்திருக்கிறார்? இன்வெர்ரியின் நித்திய அமைதியில் ஏன் யாரும் பிறக்கவில்லை, ஏன் யாரும் இறப்பதில்லை?
(இத்தாலிய புத்தகத்தின் அறிமுக உரை.)
இன்வெர்ரி கிராமத்தில் டைலன்டாக்கின் பரம வைரியான மருத்துவர் ஷபராஸின்ஆய்வுக்கூடம் டைலன்டாக்கின் தந்தையால் எரிக்கப்படுகிறது.
பின்னொரு நாளில் அந்த ஆய்வுகூடத்தை வாங்கும் மருத்துவர் ஹிக்ஸ் மருத்துவர் ஷபராஸின் மரணத்தை வெல்லும் ஆராய்ச்சியைத் தொடர்கிறார்.
அவரது ஆய்வுகளின் பயனாக "எழுத்தாளர் எட்கர் ஆலன் போ" வின் சிறுகதை ஒன்றில் வருவது போன்று இன்வெர்ரி கிராமத்தில் மரணம் நெருங்கும் ஒவ்வொருவரும் உயிர்ப்புக்கும் மரணத்துக்கும் இடையே ஒரே நிகழ்வே மீண்டும் மீண்டும் நிகழும் உறைந்த காலத்தில் வாழ்வை தொடர்கின்றனர்.
குறிப்பிட்ட காலத்திற்குப் பின் அவர்களின் உடலின் சதை உதிரும்போதும் ஏதேனும் ஆபத்தில் சிக்கி உருக்குலையும் போதும் மருத்துவர் ஹிக்ஸ் சிகிச்சையளித்து அவர்களை சரி செய்கிறார்.
இந்த விஷயங்கள் தெரியாத ஆனால் ஏற்கெனவே ஏரி விபத்தில் மாண்டு போன மேபெல் எனும் இளநங்கை டைலன் டாக்கை உதவிக்கு அழைக்கிறாள்.
டைடைலன்டாக் அந்தி மண்டலத்தின் மர்மங்களை அறிந்து மேபெல்லுக்கு தெளிவேற்படுத்தி விட்டுஅந்த கிராமத்தினரின் இரகசியத்தை இரகசியமாகவே மனதில் புதைத்தவராக கனத்த இதயத்துடன் திரும்புகிறார்.
******
No comments:
Post a Comment