Friday, January 20, 2023

17,அச்ச மாளிகை!

 





பிளெண்டிங் மாளிகையின் மர்ம நிகழ்வுகள் தொடர்கின்றன.

பீட்டர் காணாமல் போகிறான். பாதாள அறையில் புதிதாக, பீட்டரின் ஆடை அணிந்த  மண்டையோட்டு சடலம் கண்டு பிடிக்கப்படுகிறது. ஆனால் அது முழு எலும்புக்கூடாக உள்ளது.

இதற்கிடையே மாளிகையில் ஒரு மர்ம மனிதனின் நடமாட்டம் இருப்பதை அறிந்தனர்.



கறுப்பு உடை பெண்மணி மாளிகையில் இருப்பவர்களில் ஒருவர்தான் என்பது உறுதியானது.




அன்றிரவு டைலனை சந்திக்கும் பணிப்பெண் அமாபெல் டைலனிடம் கறுப்பு உடை பெண்மணி பற்றி தனக்கு அனைத்தும் தெரியும் என்று கூறி உண்மைகளை வெளியிட முயல்கிறாள்.
ஆனால் அக்கனத்திலேயே அவளது முகம் தானாக பொசுங்கி மண்டையோடாகி மாண்டு போகிறாள்.

அந்த அறையில் ஒரு இரகசியக் வழியைக் கண்டு பிடிக்கும் டைலன்,  அது ஹானரின் அறையில் முடிவதை காண்கிறார்.
அங்கே மேஜை மீது அப்போதுதான் இயங்கியதன் சூடு குறையாமல் இருக்கிறது ஒரு சைலன்சர் பொருத்தப்பட்ட துப்பாக்கி. அதன் மூலம் சுடப்பட்ட தீப்பிடிக்கும் குண்டு பாய்ந்ததால் தான் அமாபெல்லின் தலை எரிந்து போனது என்பதை டைலன் புரிந்து கொண்டார்.



மறுநாள் இரவு ஹானர் கறுப்பு உடை பெண்மணியால் அந்தரத்தில் உயர்த்தப்பட்டு சுக்கு நூறாக சிதறடிக்கப்பட்டதை மிஸ் மில்ட்ரெட்டும் டெஸ்மாண்டும் கண்டனர். ஆனால் பின்னர் அங்கு வரும் டைலன் ஹானர் வெடித்துச் சிதறிய அறையில் வெடிமருந்தின் நெடியை உணர்ந்தார்.




வாரிசுதாரர்களில் இதுவரை மூவர் மறைந்து விடவே, அடுத்த பலி தான்தான் என பெட்டூலியா அச்சம் கொண்டாள். இறந்து போன அமாபெல்,  வாரிசு இல்லை என்பதால் இந்தக் தொடர்கொலைகள் பட்டியலில் மாளிகையில் உள்ள யார் வேண்டுமானாலும் இருக்கலாம் என டைலன் தெரிவித்தார். மேலும் மாளிகையில் மிஞ்சியிருக்கும் நால்வரும் பாதுகாப்புக்காக ஒரே அறையில் தங்கியிருக்க ஏற்பாடாகியது.




சம்பவங்களின்றி இரு நாட்கள் கடந்த பின் டெஸ்மாண்ட் தன் உடல் எழும்புகள் பழையதாகி விட்டன,  என சலித்துக் கொண்டபோது,  டைலனுக்கு பாதாள அறையில் கண்ட பீட்டரின் முழுமையான எலும்புக்கூடு நினைவில் இடறுகிறது. 

மீண்டும் அந்த எலும்புக்கூட்டை ஆராயும் டைலன்,  அது ஒரு பெண்ணின் பழைய எலும்புக்கூடு என்பதை உணர்ந்தார். அது அநேகமாக நிலவறையில் மரணித்த விவியனின் எலும்புக்கூடாக இருக்கலாம்
என தீர்மானித்தனர்.

 அப்படியானால் பீட்டர் எங்கே என்ற கேள்வி எழுந்தது. கொலையாளி பீட்டராக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.




அன்றிரவே மில்ட்ரெட்டும் பெட்டூலாவும் கொல்லப்படுகின்றனர். இறுதியாக உண்மைகளை புரிந்து கொள்ளும் டைலன் டெஸ்மாண்டிடம் பிளெண்டிங் மாளிகையின் கோரக் கொலைகளுக்கான மர்மத்தை விளக்கத் தொடங்கினார்.



கறுப்பு ஆடை அணிந்த ஆவியை பார்த்ததாக பணியாளர்கள் கூட்டாக பொய் சொல்லி இருக்கிறார்கள்.
மூன்றாம் ஹரால்ட் பிளெண்டிங் பிரபுவை கொன்றது அவர்களேதான். நோக்கம் : கோட்டையில் தங்கும் வாரிசுகள் பணத்தாசையால் ஒருவரை ஒருவர் கொன்று கொண்டால் பிளெண்டிங் மாளிகையின் சொத்துகள் பணியாளர்களைச்சேரும். 

கறுப்பு ஆவியுருவம் டைலன் முன் நேரடியாக தோன்றிய தருணங்களில் அமாபெல்லும் மில்ட்ரெட்டும் ஆவி வேஷம் போட்டுள்ளார்கள்.

இடையில் அமாபெல் பயந்து போய் டைலனிடம் உண்மைகளை வெளியிட முயன்றதால் அவளை மில்ட்ரெட் கொன்றாள்.

  மில்ட்ரெட்டை டெஸ்மாண்ட் கொன்று விடுகிறான்.


உள்ளே பூட்டப்பட்ட அறையில் நிகழும் கொலைகளின் மர்மம் : உண்மையில் கொலை நிகழ்ந்த பின் டெஸ்மாண்டால் கதவு வெளிப்பக்கத்தில் பூட்டப்படும், கதவை உடைத்து உள்ளே நுழையும் டெஸ்மாண்ட் பூட்டின் சாவியை கதவின் உள் பக்கத்தில் வைத்து விடுவான். 
பூட்டுக்கும் சாவிக்கும் புழங்கிய தோற்றத்தில் வித்தியாசம் இருந்ததை டைலன் கவனித்தார்.



மறைந்து போகும் காலடித்தடங்கள் : அச்சுப் பிசகாமல் பின்னோக்கி நடக்கும் எளிய தந்திரம்.


டெஸ்மாண்ட் டைலனை சுட முயலும்போது டைலன் அவனை சுட்டு வீழ்த்துகிறார்.


இறுதியில் மற்றவர்கள் மரணிக்கும் வரை  இறந்து விட்டதாக நாடகமாடி மறைந்திருந்த பீட்டர் வெளிப்படுகிறான். சொத்துக்கள் அவனை அடைகிறது.




ஆனால் அவனும் தப்ப முடியவில்லை மரணத்திடமிருந்து...



அழகுப் புயல் பெட்டூலாவின் மரணம் அவளது இரசிகர்களை கலங்கச் செய்வது நிச்சயம். 








Tuesday, January 17, 2023

16,ஆவியின் சாபம்!

 


19ம் நூற்றாண்டில் குரூர நெஞ்சமும் மாந்திரீகத்தில் ஈடுபாடும் கொண்ட முதலாம் ஹரால்ட் பிளெண்டிங் பிரபு, விவியன் என்ற அழகியை வசியம் செய்து திருமணம் செய்து கொண்டார்.




ஆனால் வசியத்தின் விளைவு மறைந்தபோது, தனது கணவன் 
மற்றவர்களை துன்புறுத்தி மகிழும் ஒரு சாடிஸ்ட் என்பதை விவியானா அறிந்து கொண்டாள்.



விவியானா ஒரு தீக்கனவில் வீழ்ந்து விட்டாள், அதில் இருந்து மீள வழியற்றுப் போனது.




அப்போதிலிருந்து அவள் முழு கறுப்பு உடையில், தன்னை  மறைத்துக் கொண்டாள். அவளது தோற்றம் ஒரு கறுப்பு ஆவியைப் போன்றிருந்தது.

அவளுடைய ஒரே பொழுதுபோக்கு குதிரையில் சவாரி செய்வதுதான்.


குதிரை சவாரிக்கு சென்று வந்த ஒருநாளில் அவளுடைய இளமையின் வேகம் குதிரையை பராமரிக்கும் இளைஞனுடன் காமத்தை கட்டவிழ்க்கச் செய்தது.

அந்த துரோகத்தை கண்ணுற்ற பிளெண்டிங் பிரபு,  இளைஞனை கொன்று விட்டு விவியனை பாதாள அறையில் கட்டிப்போட்டு விட்டுச் சொன்னார்: 

"நீ அழகாக இருக்கிறாய் விவியானா!  மிக அழகு!  உன் அழகுக்கு நீ தகுதியற்றவள்."

இவ்வாறு சொல்லியவாறு,  பிளெண்டிங் பிரபு விவியானாவின் முகத்தின் மீது கொதிக்கும் உலோகத்தை ஊற்றினார்.


முகம் பொசுங்கி உயிருடன்  துடிதுடித்து மாண்ட அப்பெண்மணி மறுகணமே பேயாக எழுந்து பிளெண்டிங் பிரபுவை சபித்தாள்.

  "உனக்கும் உன் சந்ததிக்கும் இனி நானே மரணமாக இருப்பேன்"  என சாபமிட்டாள்.




அந்நிகழ்வுக்குப் பின் ஒரு இரவு, பிளெண்டிங் பிரபு பாதாள அறையில் தனது மாந்திரீக சோதனைகளில் ஈடுபட்டிருந்தபோது, தீ விபத்து ஏற்பட்டு​​​​அவரது முகம் முற்றிலும் எரிந்து போய் அவருக்கு மரணம் சம்பவித்தது.  விவியனின் மரணத்தை ஒத்த மரணம்.



அவரது வாரிசான இரண்டாம் ஹரால்ட் பிளெண்டிங் பிரபு குதிரை சவாரியில் ஈடுபட்டிருந்தபோது காணாமல் போனார். அவரருகில் கறுப்பு உடை அணிந்த ஒரு பெண்மணி குதிரையில் செல்வதை சிலர் பார்த்தனர். 



இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார்: அநேகமாக குதிரையிலிருந்து விழுந்திருக்கலாம்... ஆனால் விசித்திரமான விஷயம் என்னவென்றால், அவரது உடல் முழுதாக இருந்தது. ஆனால் தலை மட்டும் வெறும் மண்டையோடாக மாறியிருந்தது.


1988 ஜனவரியின் ஒர் நள்ளிரவில் தனது மூதாதையரைப் போன்றே குரூர மனம் படைத்த மூன்றாம் ஹரால்ட் பிளெண்டிங் பிரபுவின் அறையிலிருந்து பயங்கர அலறல் சத்தம்  எழுந்தது.

மாளிகையின் பணியாளர்களான மிஸ் மில்ட்ரெட், அமாபெல், டெஸ்மாண்ட் ஆகியோர் அங்கு சென்று பார்த்தபோது,  பிரபுவின்  அறையிலிருந்து ஒரு கறுப்பு உடை அனிந்த பெண்மணியின் ஆவியுருவம் வெளியேறி சென்றதைக் கண்டனர்.

பிளெண்டிங் பிரபுவின் அறைக்கதவு உள்ளே தாழிடப்பட்டிருந்ததால் டெஸ்மாண்ட் மூலம் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.




அங்கே தனது இருக்கையில் மண்டைத் தோல் உரிக்கப்பட்ட நிலையில் பிளெண்டிங் பிரபு கோரமான மரணத்தை சந்தித்திருந்தார். 

அந்த அறையில் பிரபுவின் மண்டைத் தோலை உரித்த ஆயுதம் எதுவும் இருக்கவில்லை. மேலும் உள்ளே பூட்டப்பட்டிருந்த அந்த அறையிலிருந்து எவரும் வெளியேறுவதற்கான வழியும் காணப்படவில்லை.


பின்னர், முறையாக பராமரிக்கப்படாமல் காலத்தால் சிதிலமடைந்திருந்த பிளெண்டிங்ஸ் மாளிகையில், சந்ததி இன்றி மாண்ட மூன்றாம்  பிளெண்டிங் பிரபுவின் உயில் வாசிக்கப்பட்டது.




உயிலில் தன் உறவினர்களான, 

ஹானர் (அமெரிக்கா)
லோகன் (இலண்டன்)
பெட்டூலா (இலண்டன்)
பீட்டர் (ஸ்காட்லாண்டு)

 ஆகிய நால்வரும் ஏழு நாட்கள் பிளெண்டிங் மாளிகையில் தங்கியிருக்க வேண்டும் என்றும் இறுதியில் உயிருடன் பிழைத்திருப்பவர்களுக்கு இருபத்திரண்டு மில்லியன் பவுண்டுகள் பகிர்ந்தளிக்கப்படும்  என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.




இலண்டனில் டைலன்டாக்கை சந்திக்கும் 
பிளெண்டிங்கின் மருமகள் பெட்டூலா, அந்த அச்ச மாளிகையில் தான்  தங்கும்போது துணைக்காக டைலன் டாக்கை தன்னுடன் வரக் கோருகிறாள்.
.


அன்றைய இரவே பிளெண்டிங் மாளிகையின் பணிப்பெண் அமாபெல் கறுப்பு உடை அணிந்த பெண்மணியின் ஆவியுருவை கண்டாள்.

ஆவி தோன்றிய இடத்தில் காணப்பட்ட காலடித்தடங்களை தொடரும் டைலன்டாக்,  தடங்கள் வெளி செல்ல வழியற்ற ஓர் அறையில் மறைந்து விடுவதைக் கண்டார்.




மறுநாள் காலை உணவுக்கு வாரிசுதாரர்களில் ஒருவரான லோகன் வரவில்லை. அப்போது மாளிகையின் நிர்வாகியான மிஸ் மில்ட்ரெட்,  கறுப்பு உடை அணிந்த பெண்மணியின் கைகளில் லோகன் இருப்பதையும் அவனது தலை வெடித்துச் சிதறுவதையும்  கண்டு அலறினார்.

மற்றவர்கள் வந்து பார்த்தபோது லோகனின் அறை உள்ளே பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்றபோது அந்த அறை வெறுமையாக இருந்தது. லோகன் பூட்டிய அறையில் இருந்து மாயமாக மறைந்து போயிருந்தார்.




டைலன்டாக்கும் மாளிகையின் பணியாளர் டெஸ்மாண்டும் லோகனை தேடி பிளெண்டிங் மாளிகையின் பாழடைந்த அறைகளில் சுற்றி வந்தனர்.

அப்போது மாளிகையின்  வெளியே பனியில் கறுப்பு உடை அணிந்த பெண்மணியின் உருவம் தோன்றியது.



ஹானர் அந்த உருவத்தை குறி வைத்து துப்பாக்கியால் சுட்டாள். ஆனால் அந்த உருவம் திடீரென்று மறைந்து விடுகிறது. 




அந்த உருவம் முன்பக்கத்தில் கறுப்பு நிறமும், பின்பக்கத்தில் வெண்மை நிறமும் கொண்ட ஆடை அணிந்திருக்கலாம்,  துப்பாக்கிச் சூடு நடந்த உடன் தரையில் குப்புறப் படுத்து ஊர்ந்து சென்றிருக்க வேண்டும், அடர்த்தியாகப் பெய்து கொண்டிருந்த பனி  காரணமாக அது சட்டென்று மறைந்து விட்ட தோற்றத்தை அளித்திருக்க வேண்டும். என்று டைலன்டாக் அந் நிகழ்வின் மர்மத்தை ஊகித்தார்.

மறுநாள் தற்செயலாக முதலாம் பிளெண்டிங் பிரபு விவியனை வதைத்துக் கொன்ற பாதாள அறையை கண்டு பிடித்தனர். 



அதனுள்ளிருந்த மேடையில் காணாமல் போன லோகன் தலை மட்டும் மண்டையோடாகி விட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார்.
 

 அப்போது மாளிகையின்  வெளியே கறுப்பு உடை அணிந்த பெண்மணியின் உருவம் குதிரை மீது தோன்றியது.



முதல் பாகம் முற்றும்...

முதல் பாகத்தின் மர்மங்களிற்கான விளக்கங்கள் நிறைந்த இரண்டாம் பாகம் விரைவில்... 






Sunday, January 8, 2023

14,மரணத்தின் வாசலில்...

 



Dylan dog 14
வாழ்க்கைக்கும் இறப்புக்கும் இடையில்
பக்கங்கள்: 96

பொருள்: ஸ்க்லாவி டிடியன்
திரைப்பட ஸ்கிரிப்ட்: மிக்னாக்கோ லூய்கி
வரைபடங்கள்: பிக்காட்டோ லூய்கி
கவர்: வில்லா கிளாடியோ

ஜில் பிராடியின் தந்தை இறந்துவிட்டார். சாதாரண அறுவை சிகிச்சையில் கணிக்க முடியாத  மரணம். நிச்சயமாக அது நடக்கலாம், ஆனால் ஜில் நம்பவில்லை. பொது மருத்துவமனையின் அடித்தளத்தில் ஏதோ ஒன்று நகர்கிறது, பல சந்தேகத்திற்கிடமான மரணங்கள்.  அங்கே ஒரு நம்பமுடியாத பயங்கரம் இருப்பதை டைலன்டாக்
உணர்கிறார். இந்த பயங்கரத்தின் பின்னணியில் இருப்பது யார்? 

(புத்தக நிறுவனத்தின் அறிமுக உரை)


இலண்டன் தலைமை மருத்துவமனையில் நடைபெறும்  அறுவை சிகிச்சைகள் மரணத்தில் முடிகின்றன.

அங்கு மருத்துவ மாணவியாக பயிற்சி பெறும் ஜில்லின் தந்தையும் அறுவை சிகிச்சையின்போது பலியாகிறார்.

ஆனால் ஜீவனத்துக்கும் மரணத்துக்கும் இடையே இருந்த சில நிமிடங்களில் ஜில்லை சந்தித்து அறுவை சிகிச்சையில் மர்மம் இருப்பதாக எச்சரித்துச் செல்கிறார்.

டைலனின் உதவியை நாடுகிறாள் ஜில். விசாரணையின் முடிவில் அறுவை சிகிச்சையின்போது நோயாளிக்கு  மயக்க மருந்து கொடுக்கும்  வால்கர் நோயாளிகளை கொன்று புதிய அரக்க உயிர் ஒன்றை உருவக்கியுள்ளதை கண்டறிந்தனர்.

வால்கரும் அரக்கனும் டைலனால் அழிக்கப்பட்டனர். ஆனால் தலைமை மருத்துவரும் வால்கரை போன்றே மற்றொரு அரக்கனை  உருவாக்கியுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் டைலனுக்கு கிரவுச்சோ இறந்தவர்களுக்கு வைக்கும் மலர்களை கொண்டு வந்து தரும் இடம் செம காமெடி.😂



Tuesday, January 3, 2023

13,இரத்தத் தாகம்.

 



Dylan Dog 13 

அவர்கள் நம்மிடையே வாழ்கிறார்கள் 
வெளியிடப்பட்டது : 1/10/1987
பொருள்: ஸ்க்லாவி டிடியன்
திரைப்பட ஸ்கிரிப்ட்: ஃபெராண்டினோ கியூசெப்
வரைபடங்கள்: டிரிகோ குஸ்டாவோ
கவர்: வில்லா கிளாடியோ
கதைக்களம்: Tiziano Sclavi
திரைக்கதை: Giuseppe Ferrandino
கலைப்படைப்பு: Gustavo Trigo
Cover: Claudio Villa

 இரத்தக்காட்டேரி உங்கள் அருகில்  இருக்கக்கூடும். நீங்கள் நினைப்பதை விட மிக அருகிலேயே இருக்கக்கூடும். அது ஒரு நண்பனாக, உறவினனாக, உங்கள் மனைவியாக கூட இருக்கலாம்! டைலனுக்கு இது தெரியும், காட்டேரி தனியானது இல்லை என்பது அவருக்குத் தெரியும்.  பல காட்டேரிகள் மனித முகமூடியின் கீழ் மறைந்திருக்கிறார்கள், ஆனால் அவர்கள் அரக்கர்கள். இரவின் தனிமையில் இரத்த தாகத்தில் துடிக்கும் ஒரு பயங்கரமான இருண்ட படைப்பு அவர்களுடையது என்பதையும் அவன் அறிவான்! 

(புத்தக நிறுவனத்தின் அறிமுக உரை) 

இரத்தக்காட்டேரிகளின் சொர்க்க பூமியான டிரான்ஸில்வேனியாவுக்குச் சென்று வந்த பின் இரத்தக்காட்டேரியான  தன் மனைவி சின்டியின் மீதான அன்பால் அவளது இரத்தத் தாகத்தைத் தணிக்க சிலரைக் கொன்று, இரத்தத்தை எடுத்து அவளுக்குக் கொடுக்கிறார் ராபின். 

தான் ஒரு இரத்தக்காட்டேரி என்பதை உணராமல் தன் கணவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டு டைலனிடம் உதவி கோருகிறாள் சின்டி.

தன்னை விசாரிக்க வரும் டைலனிடம் மனைவியைக் காட்டிக் கொடுக்க விரும்பாமல் தன்னையே இரத்தக்காட்டேரி என ஒப்புக்கொண்டு, தற்கொலை செய்து கொள்கிறார் ராபின்.

ராபினின் மரணத்துக்குப் பின் தனக்கு எடுக்கும் இரத்தத் தாகத்தின் மூலமாக உண்மையை உணரும் சின்டி, ராபினின் கல்லறையில் வருந்தி நிற்கிறாள்.

இதற்கிடையே ராபின், சின்டி தம்பதியின் மகளான கரோல் டைலனை சந்தித்து தன் தாயின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படுவதாக தெரிவிக்கிறாள்.

தன்னை விசாரிக்க வரும் டைலனின் முன் காட்டேரியாக மாறும் சின்டி டைலனை கொல்ல முயல்கிறாள். அவளிடமிருந்து தன்னை காத்துக் கொள்ள அவளை கொல்லும் நிலைக்கு தள்ளப்படுகிறார் டைலன்.

இறுதியில் கரோலும் ஒரு இரத்தக்காட்டேரி தான் என்றும் காட்டேரிகள் நம்முடன் கலந்து வாழ்கிறார்கள் என்றும் கதை முடிகிறது.

ராபினின் உதவியாளராக வரும் வேரா ஃபாரெட் எனும் கவர்ச்சி மிகு இரத்தக்காட்டேரி டைலனை வீழ்த்த முயன்று மாண்டு போனாலும், தன் அழகால் இரசிகர்களை கிறங்கச் செய்யப் போவது நிச்சயம்.

உண்மையில் இரத்தக் காட்டேரிகள் நம்முடன்தான் வாழ்கின்றனர். பொதுமக்களின் இரத்தத்தை உரிஞ்சும் நேர்மையற்ற அரசியல்வாதிகளும், அரசு ஊழியர்களும், சுயநலவாதிகளும் இரத்த வெறி பிடித்த காட்டேரிகளே. 














Sunday, January 1, 2023

12,கற்காலக் கொலைஞன்.

 



டைலன்டாக் எண்: 12
கொலையாளி
பக்கங்கள்: 96
வெளியிடப்பட்டது: 1/9/1987

பொருள்: ஸ்க்லாவி டிடியன்
திரைப்பட ஸ்கிரிப்ட்: ஸ்க்லாவி டிடியன்
வரைபடங்கள்: மொண்டனாரி கியூசெப் மற்றும் கிராசானி எர்னஸ்டோ
கவர்: வில்லா கிளாடியோ

"ஹண்ட்!" கொலையாளியின் உதடுகள் உச்சரிக்கும் ஒரே வார்த்தை.  இதற்கு என்ன அர்த்தம்? லண்டனின் தெருக்களில் ஒரு அழிக்க முடியாத ராட்சத வெறியாட்டம், அந்த இயந்திரக் கொலையாளியை யாராலும் அவனைத் தடுக்க முடியாது. அவனது வலிமை ஒரு பண்டைய தீர்க்கதரிசனத்திலிருந்து வருகிறது, அவனுடைய வெற்று மனம் "அழிக்கும்" ஒரே நோக்கத்தை நோக்கி வலுவாக முனைகிறது. முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு மனிதனால் மட்டுமே இந்த வெறித்தனத்தை நிறுத்த முடியும், அவனது பெயர்... டைலன்டாக்! 



லண்டன் 6 ஜூன் 1986

 
 1580 இல், ப்ராக் நகரில், யூதர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து பாதுகாக்க மதகுரு யூதா லோவால் golem என்ற சுய உணர்வுகளற்ற உயிரினம் களிமண்ணால் உருவாக்கப்பட்டது.

"துரதிர்ஷ்டவசமாக, அந்த மாபெரும் ஆன்மா, யூதர்களையே கொல்வதன் மூலம், கிளர்ச்சி செய்யும் போக்கை வளர்த்துக்கொண்டது,  மதகுரு லோவ் அதை  அழித்தார்.

ஆனால் மேலும் பல Golemகள் இருந்தன,  அவை நூற்றாண்டுகளில் கூட்டு எண் 6. வரும் நாட்களில் உயிர் பெற்று வரும். 

அப்படி ஒரு Golem 6 1986ல் அதன் அழிப்புத் தொழிலை துவங்க உயிர் பெற்று வருகிறது.  ஒரே ஒரு மனிதன் மட்டுமே அதைத் தடுக்க முடியும், அந்த ஒருவன் பெயர் Hund.
 
தன் கொலை தாண்டவத்தை துவக்கும் முன் தன்னை தடுக்கக்கூடிய Hund என்ற பெயர் கொண்டவர்களை Golem ரணகளமாக வேட்டையாடுகிறது.


ஆனால் ஜெர்மன் மொழியில்  Hund என்பது ஆங்கிலத்தில் dog ஆகும். எனவே Golem கொல்ல வேண்டியது Dog எனப் பெயர் கொண்டவரை, அந்த விசித்திரப் பெயர்கொண்ட ஒரே மனிதர்  Dylan dog மட்டுமே! 


Golem பற்றிய தீர்க்க தரிசனத்தை கையெழுத்துப் பிரதி ஒன்றில் வாசிக்கும்  ஆலென் Hund எனும் மதகுரு டைலன் மூலம்
 Golemமின் நெற்றியிலிருந்த EMET என்ற உத்தரவு வார்த்தையில் E எனும் எழுத்தை அழித்து (சத்தியம் என்பதை அழித்து,  நித்திய சமாதானம் என மாற்றி)  Golemமை அமைதி பெற வைக்கிறார். 



ஆனால் பூமியில்  இன்னும் பல Golemகள் உள்ளன, அவை என்றோ ஒரு கூட்டு எண் 6 வரும் நாட்களில் உயிர் பெற்றெழுந்து தங்களுடைய மரண தாண்டவத்தை தொடங்கலாம்.

கதையும் சம்பவங்களும் சித்திரங்களும் அர்னால்டின் தி டெர்மினேட்டர் படத்தை கொண்டிருக்கின்றன.








இங்கே கிளிக்:    Golem

Golem: 
யூத புராணத்தில் ஒரு களிமண் உருவம். மந்திரத்தால் உயிர்ப்பிக்கப்பட்டது.