Dylan dog 14
வாழ்க்கைக்கும் இறப்புக்கும் இடையில்
பக்கங்கள்: 96
பொருள்: ஸ்க்லாவி டிடியன்
திரைப்பட ஸ்கிரிப்ட்: மிக்னாக்கோ லூய்கி
வரைபடங்கள்: பிக்காட்டோ லூய்கி
கவர்: வில்லா கிளாடியோ
ஜில் பிராடியின் தந்தை இறந்துவிட்டார். சாதாரண அறுவை சிகிச்சையில் கணிக்க முடியாத மரணம். நிச்சயமாக அது நடக்கலாம், ஆனால் ஜில் நம்பவில்லை. பொது மருத்துவமனையின் அடித்தளத்தில் ஏதோ ஒன்று நகர்கிறது, பல சந்தேகத்திற்கிடமான மரணங்கள். அங்கே ஒரு நம்பமுடியாத பயங்கரம் இருப்பதை டைலன்டாக்
உணர்கிறார். இந்த பயங்கரத்தின் பின்னணியில் இருப்பது யார்?
இலண்டன் தலைமை மருத்துவமனையில் நடைபெறும் அறுவை சிகிச்சைகள் மரணத்தில் முடிகின்றன.
அங்கு மருத்துவ மாணவியாக பயிற்சி பெறும் ஜில்லின் தந்தையும் அறுவை சிகிச்சையின்போது பலியாகிறார்.
ஆனால் ஜீவனத்துக்கும் மரணத்துக்கும் இடையே இருந்த சில நிமிடங்களில் ஜில்லை சந்தித்து அறுவை சிகிச்சையில் மர்மம் இருப்பதாக எச்சரித்துச் செல்கிறார்.
டைலனின் உதவியை நாடுகிறாள் ஜில். விசாரணையின் முடிவில் அறுவை சிகிச்சையின்போது நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்கும் வால்கர் நோயாளிகளை கொன்று புதிய அரக்க உயிர் ஒன்றை உருவக்கியுள்ளதை கண்டறிந்தனர்.
வால்கரும் அரக்கனும் டைலனால் அழிக்கப்பட்டனர். ஆனால் தலைமை மருத்துவரும் வால்கரை போன்றே மற்றொரு அரக்கனை உருவாக்கியுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் டைலனுக்கு கிரவுச்சோ இறந்தவர்களுக்கு வைக்கும் மலர்களை கொண்டு வந்து தரும் இடம் செம காமெடி.😂
No comments:
Post a Comment