டைலன்டாக் எண்: 12
கொலையாளி
பக்கங்கள்: 96
வெளியிடப்பட்டது: 1/9/1987
பொருள்: ஸ்க்லாவி டிடியன்
திரைப்பட ஸ்கிரிப்ட்: ஸ்க்லாவி டிடியன்
வரைபடங்கள்: மொண்டனாரி கியூசெப் மற்றும் கிராசானி எர்னஸ்டோ
கவர்: வில்லா கிளாடியோ
"ஹண்ட்!" கொலையாளியின் உதடுகள் உச்சரிக்கும் ஒரே வார்த்தை. இதற்கு என்ன அர்த்தம்? லண்டனின் தெருக்களில் ஒரு அழிக்க முடியாத ராட்சத வெறியாட்டம், அந்த இயந்திரக் கொலையாளியை யாராலும் அவனைத் தடுக்க முடியாது. அவனது வலிமை ஒரு பண்டைய தீர்க்கதரிசனத்திலிருந்து வருகிறது, அவனுடைய வெற்று மனம் "அழிக்கும்" ஒரே நோக்கத்தை நோக்கி வலுவாக முனைகிறது. முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு மனிதனால் மட்டுமே இந்த வெறித்தனத்தை நிறுத்த முடியும், அவனது பெயர்... டைலன்டாக்!
லண்டன் 6 ஜூன் 1986
1580 இல், ப்ராக் நகரில், யூதர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து பாதுகாக்க மதகுரு யூதா லோவால் golem என்ற சுய உணர்வுகளற்ற உயிரினம் களிமண்ணால் உருவாக்கப்பட்டது.
"துரதிர்ஷ்டவசமாக, அந்த மாபெரும் ஆன்மா, யூதர்களையே கொல்வதன் மூலம், கிளர்ச்சி செய்யும் போக்கை வளர்த்துக்கொண்டது, மதகுரு லோவ் அதை அழித்தார்.
ஆனால் மேலும் பல Golemகள் இருந்தன, அவை நூற்றாண்டுகளில் கூட்டு எண் 6. வரும் நாட்களில் உயிர் பெற்று வரும்.
அப்படி ஒரு Golem 6 1986ல் அதன் அழிப்புத் தொழிலை துவங்க உயிர் பெற்று வருகிறது. ஒரே ஒரு மனிதன் மட்டுமே அதைத் தடுக்க முடியும், அந்த ஒருவன் பெயர் Hund.
தன் கொலை தாண்டவத்தை துவக்கும் முன் தன்னை தடுக்கக்கூடிய Hund என்ற பெயர் கொண்டவர்களை Golem ரணகளமாக வேட்டையாடுகிறது.
ஆனால் ஜெர்மன் மொழியில் Hund என்பது ஆங்கிலத்தில் dog ஆகும். எனவே Golem கொல்ல வேண்டியது Dog எனப் பெயர் கொண்டவரை, அந்த விசித்திரப் பெயர்கொண்ட ஒரே மனிதர் Dylan dog மட்டுமே!
Golem பற்றிய தீர்க்க தரிசனத்தை கையெழுத்துப் பிரதி ஒன்றில் வாசிக்கும் ஆலென் Hund எனும் மதகுரு டைலன் மூலம்
Golemமின் நெற்றியிலிருந்த EMET என்ற உத்தரவு வார்த்தையில் E எனும் எழுத்தை அழித்து (சத்தியம் என்பதை அழித்து, நித்திய சமாதானம் என மாற்றி) Golemமை அமைதி பெற வைக்கிறார்.
ஆனால் பூமியில் இன்னும் பல Golemகள் உள்ளன, அவை என்றோ ஒரு கூட்டு எண் 6 வரும் நாட்களில் உயிர் பெற்றெழுந்து தங்களுடைய மரண தாண்டவத்தை தொடங்கலாம்.
கதையும் சம்பவங்களும் சித்திரங்களும் அர்னால்டின் தி டெர்மினேட்டர் படத்தை கொண்டிருக்கின்றன.
இங்கே கிளிக்: Golem
Golem: யூத புராணத்தில் ஒரு களிமண் உருவம். மந்திரத்தால் உயிர்ப்பிக்கப்பட்டது.
No comments:
Post a Comment